வெள்ளி, 2 ஜனவரி, 2015

கனிமொழி கொந்தளிப்பால் தத்தளிக்கிறார் கருணாநிதி? தினமலர் !

கட்சியில் தன்னை முழுமையாக ஓரங்கட்ட முயற்சிகள் நடப்பதாகவும், அதற்காகவே, தன்னை மாணவர் அணி செயலர் பொறுப்பில் நியமிக்க, தலைமையில் முடிவெடுக்கப்பட்டு இருப்பதாகவும், தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,க்கள் குழு தலைவர் கனிமொழி வருத்தத்துடன் கூறியதாக கட்சி வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.தமிழகம் முழுவதும் தி.மு.க., உட்கட்சித் தேர்தல், பரபரப்போடும், விறுவிறுப்போடும் கடந்த ஓராண்டாக நடந்து முடிந்து, மாவட்ட செயலர்கள் தேர்வும், முடிவுறும் நிலையை எட்டி இருக்கிறது. அடுத்த கட்டமாக, மாநில நிர்வாகிகள் தேர்வு மட்டுமே நடக்க வேண்டி உள்ளது. வரும் 9ம் தேதி, கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டிருப்பதால், முன்னதாக, மாநில நிர்வாகிகள் தேர்வை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 
ஆட்சிக்கு வரவேண்டும் என்பதெல்லாம் கவலை இல்லை...கட்சியை கைப்பற்றி அதன் சொத்தை முழுவதுமாக கொள்ளை அடித்து தன குடும்பத்துக்கு மட்டுமே வைத்து கொள்ள வேண்டும் என்பது தான் ஸ்டாலின் திட்டம்... இல்லாவிட்டால் டி வி ஆரம்பம் மற்றும் அனைத்து மேல் மட்ட வேலைகளையும் பார்த்த இவர் தன் பெயர் வெளியே வராமல் தாயையும் - தங்கையையும் மாட்டி விட்டு தான் தப்பித்து கொண்டுள்ளார்...பங்குதாரராக தங்கையை மட்டும் போட சம்மதிக்கும் போது  இவர் ஏதோ தங்கை மீதான பாசத்தில் சம்மதிக்கிறார் என்று நினைத்திருப்பர்..அதன் பின் இவ்வளவு பெரிய சதி...இப்போது அந்த வழக்கை காட்டியே கட்சியின் உயர் பதவியை தங்கைக்கு மறுக்கிறார்,  இந்த ஆள்  துரோக வேலையில் ........விட மேலானவர் என்று நிருபித்து விட்டார்....





மாற்றத்தை ஏற்படுத்த...:

அதனால், மாநில நிர்வாகிகள் தேர்வு குறித்து, கட்சியின் மூத்த தலைவர்களான கருணாநிதி, அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகியோர் மத்தியில், கடந்த சில நாட்களாக தொடர் ஆலோசனைகள் நடந்து வருகின்றன. கட்சியின் துணைப் பொதுச் செயலர்களாக இருப்பவர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என ஸ்டாலின் விரும்புகிறார். இதனால், வி.பி.துரைசாமி, சற்குண பாண்டியன், துரைமுருகன் ஆகியோரை, அந்த பொறுப்பில் இருந்து கழற்றி விடவேண்டும் என, அவர் முடிவெடுத்து, கருணாநிதியையும், அன்பழகனையும் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இப்படி மாற்றம் செய்யும் சூழ்நிலையில், வி.பி.துரைசாமிக்கு பதிலாக, அந்த இடத்தில் ஆ.ராஜாவை நியமிக்கலாம் எனவும், சற்குண பாண்டியனுக்கு பதிலாக, கனிமொழியை நியமிக்கலாம் எனவும், துரைமுருகனை அந்தப் பொறுப்பில் இருந்து மாற்ற வேண்டியதில்லை எனவும், அன்பழகனும், கருணாநிதியும், ஸ்டாலினிடம் தெரிவித்து இருக்கின்றனர். இதற்கு, ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. கனிமொழிக்கும், துரைமுருகனுக்கும் எக்காரணம் கொண்டும் துணைப் பொதுச் செயலர் பொறுப்பு கொடுக்கக் கூடாது என, இருவரிடமும் வலியுறுத்தியதாக, கட்சி வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.



கெட்ட எண்ணம்:

அந்த வட்டாரங்களில் மேலும் கூறியதாவது: வழக்கில் சிக்கிய ராஜாவுக்கு, துணைப் பொதுச் செயலர் பதவியை கொடுத்தால், கட்சி மீது கெட்ட எண்ணம் ஏற்படும்; இதில் கனிமொழியையும் சேர்த்து நியமித்தால், மொத்தமாக கெட்டுப் போய்விடும். அதோடு துரைமுருகன், சமீப நாட்களாக, கட்சி தலைமை விருப்பத்தை மீறி நடந்து வருகிறார். அதனால், அவரையும் து.பொ.செ., பொறுப்பில் நியமிக்கக் கூடாது என, தலைவர் கருணாநிதியிடமும், பொதுச் செயலர் அன்பழகனிடமும் உறுதிபட தெரிவித்து விட்டார் ஸ்டாலின். மா.செ.,க்கள் உட்பட கட்சியின் அத்தனை பொறுப்பிலும் தன் ஆதரவாளர்களை உட்கார வைத்து, ஒட்டுமொத்த கட்சியையும், தன் கரங்களுக்குள் கொண்டு வந்துவிட்ட ஸ்டாலினை மீறி, இருவராலும் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேவையானால், கனிமொழிக்கு மாணவரணி அல்லது மகளிரணி செயலர் பொறுப்பை விட்டுத் தர தயாராக இருக்கிறார் ஸ்டாலின். இதை அறிந்ததும், கனிமொழியும், தலைவர் கருணாநிதியிடம் கொந்தளித்து இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் மத்தியில் என்ன நிலை எடுப்பது என புரியாமல், கருணாநிதியும், அன்பழகனும் தத்தளிக்கின்றனர். இவ்வாறு, அந்த வட்டாரங்களில் தெரிவித்தனர்.

- நமது சிறப்பு நிருபர் தினமலர்.com 

கருத்துகள் இல்லை: