கட்டிட வேலைக்கு வரும் மலிவான தொழிலாளிகள் ஹிந்தி வடநாட்டினர்தானே ? சரவணா ஸ்டோர்ஸ் முதல், நாயர் டீக்கடை வரை, மிகக் குறைந்த ஊதியத்திற்கு நாள் தோறும் வேலை பார்க்க, பல ஆயிரம் கிலோமீட்டர் தாண்டி ஹிந்தி படித்தவர்கள் கூட்டம் கூட்டமாக குடும்பத்தோடு, தமிழ்நாட்டிற்கு ஏன் வர வேண்டும்?
என்னால் ஹிந்தியில் பேச பயமாகவும் தயக்கமாகவும் இருப்பதற்கு திராவிட இயக்கம்தான் காரணம் என சொல்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்தித் திணிப்பை எதிர்த்து 1965-இல் போராட்டம் நடைபெற்றபோது, இந்த மாமிக்கு வயது ஆறு. இந்த போராட்டத்தைப் பற்றிய எந்த விவரமும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. மதுரையில் பிறந்தவர், 1978இ-ல் திருச்சியில் பட்டப்படிப்பை முடித்து, புதுடில்லியில் 1980இ-ல் முதுகலை பட்டம் முடித்திருக்கிறார். புதுடில்லி யில் இருந்த இரண்டு ஆண்டுகளில், அங்கே இவரால் ஹிந்தியை கற்றுக்கொள்ள முடியவில்லையா?
இருமொழிக் கொள்கை காரண மாக, அரசுப்
பள்ளிகளில் ஹிந்தி வேண்டுமானால் இல்லாது இருந் திருக்கலாம். ஆனால், இவர்
படித்தது எல்லாம் தனியார் பள்ளி, கல்லூரி களில். அதுவும் திருச்சி
சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி என்கிற பார்ப்பனமயமான கல்லூரியில் தான்
படித்துள்ளார்.
இதில் எங்கே, எப்போது இவர் ஹிந்தி கற்றுக்
கொள்வதை தடுத் தார்கள். அதுவும் ஆபாசமாக திட்டினார்களாம்? அதனால் இவர்
கற்றுக் கொள்ளமுடியாமல், வாழ்க் கையில் அல்லல்பட்டு, துன்பப்பட்டு,
துயரப்பட்டு, திருச்சியில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு, புதுடில்லி யில்
ஜவகர்லால் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தை முடித்து, முனைவர் பட்டம்
பெற்று, பின் லண் டனில் வேலை பார்த்து, ஹைதரா பாத் வந்திறங்கி, துணை
இயக்குநராக ஒரு நிறுவனத்தில் பணியாற்றி, அங்கேயே தன் குடும்ப வாழ்க்கை
யையும் அமைத்து 1991 முதல் ஆந்தி ராவில், இன்றைய தெலங்கானாவில் வாழ்ந்து
கொண்டிருப்பவர். இந்த கால கட்டத்தில், இவரை ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டாம்
என யார் தடுத்தது?
ஆங்கிலம் நன்கு பேச கற்றுக்
கொண்டதினால்தான், இவரால், லண்டன் சென்று அங்கே பி.பி.சி. செய்தி நிறுவனம்
உட்பட சில நிறுவனங்களில் பணியாற்ற முடிந்தது. வெறும் ஹிந்தி கற்றிருந்தால்,
வட நாட்டில் எங்கேயாவது பள்ளிக் கூடத்தில் ஹிந்தி டீச்சர் ஆகியிருக்க லாம்
தமிழகத்தில் இந்தி படிக்கக் கூடாது என தடுத்தவர்கள் வீட்டுக் குழந்தைகள்
எல்லாம் ஹிந்தி படித்து விட்டார்களாம்? இவரை மட்டும் தடுத்து
விட்டார்களாம். அதெப்படி இவரை மட்டும் தடுத்து விட்டு, தகராறு
செய்துவிட்டு, மற்றவர்கள் வீட்டு குழந்தைகளை ரகசியமாக படிக்க வைத்துவிட
முடியும். அப்படி எல்லாம் 1967-க்குப் பிறகு எங்கேயும் நடந்ததாக நமக்குத்
தெரியவில்லை. ஆனால், தினமலர் முதல் எல்லா பார்ப்பன ஏடுகளும், சுருதி பேதம்
இல்லாமல் இந்த புருடாவை தொடர்ந்து சொல்லி வருகின்றனர். புருடா விடுவதில் கை
தேர்ந்தவர் களாயிற்றே, மணலை கயிறாக திரிப்பவர்கள் ஆயிற்றே. அதுவும்
இப்போது ஆட்சி அவா கையில். என்ன வேண்டுமானாலும் பேசலாம், விளம்பரம்
தருவதற்கு பார்ப்பன ஏடுகளும், பார்ப்பன அடிவருடி ஏடுகளும் தயாராக
இருக்கின்றன.
மொழியை கற்பதற்கும், அரசு, ஒரு
மாநிலத்தில் வேறொரு மொழியை திணிப்பதற்கும் உள்ள வேறுபாட் டைக் கூட புரிந்து
கொள்ள முடியாத, அல்லது புரிந்து கொண்டு, புருடா விடும் இத்தகையவர்களின்
பேச்சில் நியாயத்தை நாம் எதிர்ப்பார்க்க முடியுமா?
இந்த அம்மையார் சொல்வதை பார்த்தால், தமிழ்
நாட்டில் இருந்து இன்று நாடாளுமன்றத்திற்கு சென்ற இவர் வயது ஒத்த அத்தனை
அதிமுக உறுப்பினர்களும் ஹிந்தியில் பேசி யிருக்க வேண்டும். ஆனால், எல்லோ
ரும் தமிழில் பேசுகிறார்கள் அல்லது ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். இங்கே
ஹிந்தி முதன்மையாக கருதப்பட வில்லை. மதிப்பெண் கருதி, பிரெஞ்ச்,
சமஸ்கிருதம் படிக்கும் பிள்ளைகள் கூட இங்கே இருக்கிறார்கள்.
அன்னிய பாஷையான ஆங்கிலத் தில் பயமின்றி
இவரால் பேச முடிகிற தாம். ஆனால், இந்திய மொழியான இந்தியில் தயக்கத்துடன்
தான் பேச முடிகிறதாம். அதனால் என்ன? நன்கு தெரிந்த ஆங்கிலத்தில் பேச வேண்
டியது தானே. அல்லது சு.சுவாமி மாதிரி தெரிந்த தமிழில் பேச வேண்டியது தானே.
அதற்காக எதற்கு கவலைப்பட வேண்டும்? இவருக்கு ஹிந்தி சரியாக தெரியவில்லை
என்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள கோடானுகோடி மாணவர்களும் ஹிந்தி ஏன் படிக்க
வேண்டும்?
இப்ப தமிழ் நாட்டில் ஹிந்தி தெரியாததால்
எந்தெந்த வேலை வாய்ப்பை நாம் இழந்திருக்கிறோம். இங்கே உள்ள மென்பொருள்
நிறுவனங்களில் ஆங்கிலம் தெரிந்த நம் தமிழ் நாட்டு மாணவர்கள்
பெரும்பான்மையாகத் தானே உள்ளார்கள். இன்றைக்கு வெளி நாட்டுக்கு படிக்கவும்,
வேலை பார்க்கவும், அவர்களுக்கு ஒரு தடையும் இல்லையே. ஹிந்தியை தாய்மொழி
யாக படித்த வட நாட்டு இளை ஞர்கள் எல்லோரும் வளர்ந்து விட்டார்களா? அதுதான்
நிலைமை என்றால், சரவணா ஸ்டோர்ஸ் முதல், நாயர் டீக்கடை வரை, மிகக் குறைந்த
ஊதியத்திற்கு நாள் தோறும் வேலை பார்க்க, பல ஆயிரம் கிலோமீட்டர் தாண்டி
ஹிந்தி படித்தவர்கள் கூட்டம் கூட்டமாக குடும்பத்தோடு, தமிழ்நாட்டிற்கு ஏன்
வர வேண்டும்?
ஹிந்தி நாங்கள் படிப்பது இருக்கட்டும்.
தேவை என்றால், ஹிந்தி என்ன எந்த மொழியையும் கற்கும் திறன் தமிழ் நாட்டு
மாணவர்களுக்கு உண்டு. ஆனால், ஒன்றுக்கும் உதவாத சமஸ்கிருதத்தையும் தூக்கிக்
கொண்டு, உங்கள் பாஜக அரசு வருகிறதே. அது எதற்காக? அந்த எழவைப் படித்து
நாங்கள் அடையப் போகும் நன்மை என்ன?
ஹிந்தி திணிப்பு என்றாலும் சரி,
சமஸ்கிருதமயமாக்கம் என்றாலும் சரி, தேசிய புனித நூல் கீதை என்றாலும் சரி,
பார்ப்பனமயமாக்கும் எந்த வித்தையையும் எதிர்க்கவும், அதன் முகத்திரையை
கிழிக்கவுமான முதல் குரல் தமிழ் நாட்டிலிருந்து தான், பெரியார்
மண்ணிலிருந்து தான் வேகமாக வருகிறது. இது நிர்மலா சீதாராமனுக்கு மாயையாக
இருக்க லாம்; ஆனால் தமிழர்களுக்கு, திராவி டம் தான் அரண். குடந்தை கருணா"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக