சனி, 3 ஜனவரி, 2015

ஜெயலலிதாவுடன் அரசு அதிகாரிகள் சந்திப்பால் சர்ச்சை! சட்டம் அவாளுக்கு மக்சிமம் வழிந்து கொடுக்கும்?

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் இருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, அரசு அதிகாரிகள் சந்தித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
கோப்பு படம்
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இதைத் தொடர்ந்து முதல்வர், எம்.எல்.ஏ பதவியை ஜெயலலிதா தானாகவே இழந்துவிட்டார்.


பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை கர்நாடகா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதைத் தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா, எந்த அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்திக்கவில்லை. ஆனால், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஜெயலலிதாவை கட்சியின் பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் சந்தித்து பேசி வருவதாக கூறப்பட்டாலும், அவரின் ஆலோசனை படியே அரசு செயல்பட்டு வருகிறது. முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கூட தாங்கள் வெளியிடும் அரசு செய்தி குறிப்புகளில், ஜெயலலிதா ஆலோசனைப்படி செயல்படுவதாகவே குறிப்பிடுகின்றனர். 

இந்நிலையில், புத்தாண்டு அன்று தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து துறைகளின் செயலாளர்கள் ஒரே குழுவாக சென்று ஜெயலலிதாவை சந்திக்க திட்டமிட்டிருந்ததாகவும், இந்த சந்திப்பால் சட்ட சிக்கல் ஏதும் ஏற்படுமா என்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், அவ்வாறு சந்தித்தால் சட்ட சிக்கல் எழக்கூடும் என சில மூத்த அதிகாரிகள் எச்சரித்ததாகவும், இதனை அடுத்து அத்திட்டம் கைவிடப்பட்டதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா, தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், அரசின் ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்துக்கு சென்று சென்றதாக தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.
இந்த சந்திப்பு எதற்காக என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அதிகாரிகளின் இந்த சந்திப்பு அரசு அதிகாரிகள் மட்டத்திலும், சட்ட வல்லுனர்கள் மத்தியிலும் சர்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது. ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் உள்ள ஒருவரை, குறிப்பாக அரசுத்துறைகளுடன் எந்த பொறுப்பும் வகிக்காத ஒருவரை அரசின் முக்கிய கோப்புகளை கையாளும் அதிகாரிகள், குறிப்பாக உள்துறை செயலாளர் சந்தித்திருப்பது அரசியல் அரங்கில் பல விவாதங்களை கிளப்பும் என்று தெரிகிறது.   .vikatan.com

கருத்துகள் இல்லை: