சனி, 5 ஜூலை, 2014

(மர்ம மாளிகை ) அட்சயா காப்பகத்திலிருந்து 221 பேரை உடனே விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை அட்சயா காப்பகத்தில் தங்கியிருப்போரில் 221 பேரை உடனடியாக விடுவிக்க காப்பக நிர்வாகிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அட்சயா காப்பக முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மதுரை மாவட்டத் தலைவர் முத்துராணி உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் வி. ராமசுப்பிரமணியன், வி.எம். வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் ஆணையர் டி. கீதா, தனது 4-வது ஆய்வு அறிக்கை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில், ‘ரயிலை விட்டு இறங்கியவர்கள், ரயில் நிலையம், பஸ் நிலையத்தில் நின்றிருந்தவர்களை காப்பகத்துக்கு அழைத்து வந்துள்ளனர். இந்த நடவடிக்கை ஆள் கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக சிறைப்பிடித்தல் போன்றதாகும். இது தொடர்பாக காப்பக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மவுலிவாக்கம் விபத்து பகுதியில் 150 அடி சுற்றளவில் வசிப்பவர்கள் உடனடியாக காலி செய்ய உத்தரவு

மவுலிவாக்கம் கட்டிட விபத்து நடந்த இடத்திலிருந்து 150 அடி சுற்றளவில் வசிப்பவர்கள் உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி பொதுப்பணித் துறை விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
சென்னை அருகே உள்ள மவுலிவாக்கத்தில் கடந்த 28-ம் தேதி 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 61 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து பொதுப்பணித் துறை பொறியாளர்கள் குழு விரிவாக ஆய்வு நடத்தி, அறிக்கையை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளித்துள்ளது.

நோயாளிகளை பிடித்து கொடுக்கும் டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் அம்பானியின் மருத்துவமனை

ஒரு ஊரில் திருடர்கள் பெருகிவிட்டார்கள் என்பதாலேயே திருட்டைச் சட்டபூர்வமாக்கிவிட முடியாதல்லவா?
சேவைத்துறைகளில் பெரும் மூலதனத்தைக் கட்டுப்பாடின்றி அனுமதித்தால், எப்படியெல்லாம் அது பேயாட்டம் போடும்? உதாரணமாகியிருக்கிறது மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை (KDAH).
நாட்டின் அதிநவீன மருத்துவமனைகளில் ஒன்றான கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை ரிலையன்ஸ் குழுமத்துக்குச் சொந்தமானது. அனில் அம்பானியின் மனைவி டினா அனில் அம்பானியின் நேரடித் தலைமையில் இயங்குவது. “இந்திய மருத்துவப் பராமரிப்புத் துறையில் இருக்கும் இடைவெளியைக் குறைப்பதே எம் மருத்துவமனையின் முக்கிய இலக்கு” என்று மருத்துவமனையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் முழங்குகிறார் டினா. ஆனால், அம்பானி மருத்துவமனையோ மருத்துவத் துறையின் அடிப்படை அறநெறிக் கட்டுமானம் எதுவோ அதையே பகிரங்கமாகச் சுக்குநூறாக உடைத்தெறிந்திருப்பதைச் செய்திகள் சொல்கின்றன.

உலகிலேயே 411 இந்திய / ஆசிய சிங்கங்கள் மட்டுமே இருக்கின்றன ! BBC docu. மீனா வெங்கட் !

டி.எல்.சஞ்சீவிகுமார் :   சமீப காலமாக ஆசிய சிங்கங் களைப் பற்றி வரும் தகவல்கள் கவலை அளிப்பதாக உள்ளன. சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே சிங்கங்கள் இருக்கும் கிர் காடு களில், கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 250 சிங்கங்கள் இறந்து விட்டதாகக் கூறப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நிலை யில்தான் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கிர் காடுகளில் உள்ள சிங்கங்களை பாதுகாக்க களம் இறங்கியிருக்கிறார் இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சியாளரான மீனா வெங்கட். அவர் ‘தி இந்து’வுக்காக அளித்த சிறப்புப் பேட்டி:
தற்போது கிர் காடுகளில் எத்தனை சிங்கங்கள் உள்ளன?
உலகிலேயே ஆசிய சிங்கங்கள் 411 மட்டுமே இருக்கின்றன. அவை இருப்பது கிர் காடுகளில் மட்டுமே. சிங்கங்களில் ஆப்பிரிக்க சிங்கங் கள், ஆசிய சிங்கங்கள் என இரு வகை உண்டு. நம்மிடம் இருப்பவை ஆசிய சிங்கங்கள். பல நூறு ஆண்டு களுக்கு முன்பு இவை கிரேக்கம், சிரியா, மத்திய கிழக்கு நாடுகள் தொடங்கி வட மற்றும் மத்திய இந்தியா வரை பரவியிருந்தன. ஆனால், மனிதனின் பேராசைக்கு அவை இரையாகிவிட்டன. இப் போது எஞ்சியிருப்பவை இவை மட்டுமே.

ஒரே ரகுபதி தலைமையில் ஒன்பது விசாரணைகளா? அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படியில்லை உருப்படியில்லை ?

திமுக தலைவர் கலைஞர் எழுதியுள்ள கடிதம்:சென்னையில் 11 மாடிக் கட்டிடம் இடிந்து, இதுவரை 61 பேர் பலியான சம்பவம் குறித்து தமிழக முதல மைச்சர் ஜெயலலிதா நீதிபதி ரெகுபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்றை நியமித்திருக்கிறார். இதுபோல திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெற்ற போது, ஒரு சம்பவம் நடைபெற்றிருந்தால், அப்போது ஜெயலலிதா எப்படியெல்லாம் அறிக்கை விட்டிருப்பார்! பத்து பேர் இறந்து விட்டார்கள் என்ற செய்தி வந்தவுடன், “மைனாரிட்டி ஆட்சியின் முதலமைச்சர், கருணாநிதி பொறுப்பேற்று உடனடியாக ராஜினாமா செய்து விட்டு வெளியேற வேண்டும்” என்று கண்டன மழை பொழிந்திருப்பார்.
ஆர்ப்பாட்டம், மறியல் என்று ஊரையே நிலை குலையச் செய் திருப்பார். நாளேடுகளும் அவருக்கு “நாமாவளி” பாடியிருக்கும்!

கட்டடம் வெடி வைத்து தகர்க்க திட்டம்? இடிந்த கட்டிடத்திற்கு அருகிலும் இடிக்கபடவேண்டிய கட்டிமாம் ?

சென்னை மௌலிவாக்கத்தில் இடிந்து விழுந்த 11 மாடிக் கட்டடத்தின் அருகே உள்ள மற்றொரு கட்டடத்தை வெடி வைத்து தகர்க்க அரசு அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. மௌலிவாக்கத்தில் பிரைம் சிருஷ்டி நிறுவனம் 150 அடி உயரத்துக்கு 11 மாடிகளில் இரு அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி வந்தது. இதில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு கடந்த 28-ஆம் தேதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 61 பேர் கட்டட இடிபாடுகளிடையே சிக்கி இறந்தனர். காயமடைந்த 27 பேர் மீட்கப்பட்டனர்.
இடிந்து விழுந்த கட்டடத்தின் அருகே உள்ள மற்றொரு கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரண்டு நாள்களாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் அந்தக் கட்டடம் பலவீனமாக இருப்பதும், கட்டடத்தில் தூண்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் தடிமன் குறைவாக இருப்பதும், தரமற்ற பொருள்களால் அந்த கட்டடம் கட்டப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

பருவமழை பொய்க்கும் வறட்சி அதிகரிக்கும்

புதுடில்லி : 'இந்த ஆண்டு நாட்டின் சராசரி மழைப்பொழிவின் அளவு மிக குறைவாக இருக்கும்; வறட்சி அதிகரிக்கும்' என, தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஸ்கைமெட்' என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த ஆண்டு, நாடு முழுவதும் பருவமழையில் பெரும் மாற்றம் காணப்படும். சராசரி மழைப் பொழிவை விட மிகவும் குறைந்த அளவே மழைப் பொழிவு இருக்கும். கடந்த, 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மிக குறைந்த மழை பெய்யும். ஆண்டுக்கு, 96 - 104 சதவீதம் வரை மழைப்பொழிவு இருந்தால் அது சராசரி மழைப்பொழிவு எனப்படும். இந்த ஆண்டு சராசரிக்கும் குறைவாக, 91 சதவீத மழைப்பொழிவு மட்டுமே இருக்கும்.பருவமழை குறைவால், நாடு முழுவதும் 60 சதவீதம் வறட்சி ஏற்படும். வடமேற்கு மாநிலங்களில், 80 சதவீதமும், மத்திய மாநிலங்களில், 75 சதவீதமும், தென் மாநிலங்களில், 50 சதவீதமும் வறட்சி பாதிப்பு ஏற்படும்.  இலவசமாக  கிரைண்டர், லாப்டாப், மலிவு விலையில் சாப்பாடு, மருந்து, மலிவு விலையில் தண்ணி, அதிக விலையில் தண்ணீர் (டாஸ்மாக்)... எப்படி வறட்சி இவர்களை பாதிக்கும்?...

31 'ஏசி'கள், 25 'ஹீட்டர்'களுடன் வாழ்ந்த ஷீலா தீட்சித் ! மேட்டுக்குடி ராணிகள் எல்லாம் அப்படிதான் !

'டில்லி முதல்வராக ஷீலா தீட்சித் பதவி வகித்த போது, அவரின் அதிகாரப்பூர்வ வீட்டில், 31 'ஏசி'களும், 25 'ஹீட்டர்'களும் பொருத்தப்பட்டிருந்தன' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், சுபாஷ் அகர்வால் என்பவர் விடுத்திருந்த கேள்விகளுக்கு, மத்திய அரசின் பொதுப்பணித் துறை அளித்துள்ள பதில்:டில்லி முதல்வராக ஷீலா தீட்சித் பதவி வகித்தபோது, அவருக்கான அரசு வீட்டில், 31 'ஏசி'க்களும், 15 கூலர்களும், 25 ஹீட்டர்களும், 16 ஏர் பியூரிபையர்களும், 12 கெய்சர்களும் பொருத்தப்பட்டு இருந்தன.ஷீலா தீட்சித், அந்த வீட்டில் குடியேறிய போது, மின்சார உபகரணங்களை மாற்றுவதற்காக மட்டும், 16.81 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. முதல்வர் பதவியிலிருந்து, ஷீலா தீட்சித் விலகி, கேரள கவர்னராக நியமிக்கப்பட்டதும், இந்த மின் உபகரணங்களில் பெரும்பாலானவை, பல அரசு அலுவலகங்களுக்கு மாற்றப்பட்டன.  17 லட்சம் ரூபாய்க்கு வீட்டை புதுபிப்பது ஒன்றும் பெரிதல்ல. பிஜேபி யின் எடியுரப்பா தனது கழிவறைக்கு மட்டும் ஒரு கோடி ரூபாய் செலவிட்டார் என்று செய்தி வந்ததே. அப்போது யாரும் கண்டு கொள்ள வில்லை.

வெள்ளி, 4 ஜூலை, 2014

பிரதமர்கள் வந்தார்கள் போனார்கள் மக்களின் மனதில் நிற்பவர் சமுக நீதி காவலர் மாண்பு மிகு வி பி சிங் !


சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர் களின் பிறந்த பொன்னாள் இந்நாள்!(1931)
எத்தனையோ பிரதமர்கள் வந்தார்கள், போனார்கள் - இருந்தார்கள் - விடை பெற்றார்கள். ஆனால், வி.பி.சிங் போல காலத்தால் அழிக்கப்பட முடியாத நினைவுச் சின்னமாக இருப்பவர்கள் யார்?
மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான பிற் படுத்தப்பட்டவர்களுக்குச் சமூகநீதி வழங்கிய சாத னைச் சரித்திரம் அவர். மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டை அளித்தவர். அதன் காரண மாகத்தான் ஆட்சியையும் இழந்தார் - இன்னும் சரி யாகச் சொல்லப்போனால், அந்தப் பதவி இழப்பின் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூகநீதி என்னும் குன்றாப் பரிசை நல்கியவர்.
அந்த சமூக நீதிப் பிரகடனத்தை அவர் நாடாளுமன்றத்தில் வெளி யிட்டபோது தந்தை பெரியார், பாபா சாகேப் அம்பேத்கர், ராம்மனோகர் லோகியா ஆகியவர்களின் கனவு நனவாகிறது என்ற சரித்திரச் சொல்லாடல் களைப் பதிவு செய்தவர்.

குஜராத் போலி என்கவுண்டர் வழக்கில் விலக்கு கோரிய அமித் ஷாவின் மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு

அமித் ஷா மீதான போலி என்கவுண்டர் வழக்கு மும்பை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது எல்லாம், அமித் ஷா நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வருகிறார். அரசியல் பணியை முன்னிட்டு அவர் ஆஜராகாமல் இருக்கிறார். இந்த நிலையில், இந்த வழக்கு  மீண்டும் சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.அப்போது, அமித் ஷா சார்பில் ஆஜராகிய வக்கீல், விசாரணையில் இருந்து அமித் ஷாவுக்கு விலக்கு அளிக்க கோரி ஒரு மனு தாக்கல் செய்தார்.

சென்னை கட்டிட விபத்து ! அப்படியே அமுக்கிவிட தனி நபர் விசாரணை குழு ? மேலிடத்தில யாராச்சும் மாட்டிகிட்டாங்களா ?

 சென்னை மவுலிவாக்கம் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரித்தால் தான் உண்மைகள் வெளிவரும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். 11 மாடி கட்டிடம் விபத்து குறித்து விசாரிக்க நிதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டிருப்பது உள்நோக்கத்துடன் கண்துடைப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசின் ஒரு நபர் குழுவால் எந்த உண்மையும் வெளிவராது என்று பரவலாக சொல்லப்படுவதாக கருணாநிதி கூறியுள்ளார்.

அடடே இந்த ஆளை இந்த அளவு நம்புனமா ?

மோடி மாயை 1

தேர்தலுக்கு முன்பு வரை ஒரு பெருங்கூட்டம் இணைய வெளியில் மோடி வழிபாட்டை நடத்திக் கொண்டிருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்னால், எதிர்ப் படுபவர்களில் பாதிபேர் ஏதோ ஒரு மல்டிலெவல் மார்கெட்டிங்கில் சேர்ந்து, நம்மையும் அந்தப் படுகுழிக்கு இழுக்க முயன்றதைப்போல, இரண்டு மாதங்களுக்கு முன்பு வரைக்கும் மோடிக்காக ஒரு பெரும் ஆள் சேர்ப்பு நடந்தது. “நீங்கள் இன்னுமா மோடியை ஆதரிக்க மறுக்கிறீர்கள்?” என மிடில் கிளாஸ் தேசபக்தர்கள் கேள்வியெழுப்பினார்கள். மோடியை ஆதரிக்காமல் இருப்பது தேசவிரோதம் எனுமளவுக்கு திமிர்வாதம் புரிந்தார்கள் ஆர்.எஸ்.எஸ் ரவுடிகள்.

பட பட்ஜெட்டும் பட வசூலும் : 6 மாதங்கள் - 6 படங்கள் - 6 பாடங்கள் !

பரபரப்பான சினிமா வாழ்க்கையில் ஆறு மாதங்கள் போனதே தெரியவில்லை. இந்த ஆறு மாதங்களில் தமிழ் சினிமாவில் நடந்தது என்ன? கடந்த வருடம் முதல் ஆறு மாதங்களில் 88 புதுப் படங்கள் வெளியாகியிருந்தன. இந்த வருடம், 103 படங்கள் வெளியாகியுள்ளன (தகவல் உதவி: பிலிம் நியூஸ் ஆனந்தன்).
இந்த வேகத்தில் சென்றால், 2014-ல் குறைந்தது 200 முதல் 210 புதுப் படங்கள் வெளியாகும் (2013-ல் 164 படங்கள்) . அதாவது வாரத்திற்கு 4 படங்கள்.
வெளியான 103 படங்களில், ரூபாய் 10 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டவை 10 படங்கள் (கோச்சடையான், ஜில்லா, வீரம், மான் கராத்தே, தெனாலிராமன், நான் சிகப்பு மனிதன், இது கதிர்வேலனின் காதல், பிரம்மன், நிமிர்ந்து நில், வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்). இந்தப் படங்களின் வியாபாரம் பல தளங்களில் உள்ளதால், அவற்றின் வணிக வெற்றியைப் பற்றி ஆராய்வது கடினம்.

நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று தேஜஸ்விக்கு கண்டிஷன் போட்ட ராம் கோபால் வர்மா

புதுமுக நடிகையை நிர்வாணமாக்கி காட்சிகளை படமாக்கினார் இயக்குனர் ராம் கோபால் வர்மா.சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் இயக்குனர் ராம் கோபால் வர்மா. அப்போது சில கேள்விகளுக்கு அவர் கூறிய பதில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை புறக்கணித்து பத்திரிகையாளர்கள் வெளியேறினார்கள். இதிலிருந்து பத்திரிகையாளர்களை திசை திருப்பும்விதமாக தான் இயக்கும் ‘ஐஸ்கிரீம் என்ற படத்திலிருந்து புதிய ஸ்டில்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் வர்மா.டோலிவுட்டில் வெளியான ‘சீதம்மா வாகிட்லோ சிறுமல்லி செட்டு, ‘ஹார்ட் அட்டாக், ‘மனம் போன்ற படங்களில் நடித்த தேஜஸ்வி என்ற இளம் நடிகையை ‘ஐஸ்கிரீம் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகப்படுத்தும் வர்மா அவரை நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டார். அவரும் ஒப்புக்கொண்டார். சமீபத்தில் இதற்கான காட்சிகள் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பு தளத்துக்குள் லைட் மேன், உதவியாளர்கள் உள்பட அனைவரையும் வெளியேற்றினார் இயக்குனர். ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் என இரண்டு பேர் மட்டுமே அறைக்குள் இருந்தனர். ரகசியமாக தேஜஸ்வி நடித்த நிர்வாண காட்சிகள் படமாக்கப்பட்டன. -.tamilmurasu.org/

டெல்லி–ஆக்ரா அதிவேக புல்லெட் ரெயில் சோதனை ஓட்டம் ! Delhi Agra semi high speed bullet train flags off !


பாராளுமன்றத்தில் 8–ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள ரெயில்வே பட்ஜெட்டில் அதிவேக ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்னோட்டமாக டெல்லி–ஆக்ரா இடையே அதிவேக ‘செமி புல்லட்’ ரெயில் சோதனை நேற்று நடந்தது.
இதற்காக 5,400 குதிரை சக்தி திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்ட ரெயில் 10 பெட்டிகளுடன் புறப்பட்டது. இதில் 2 ஜெனரேட்டர்களும் பொருத்தப்பட்டு இருந்தது.
இந்த ரெயில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்தது. டெல்லி ரெயில் நிலையத்தில் காலை 11.15 மணிக்கு புறப்பட்ட ரெயில் 200 கி.மீ தொலைவில் உள்ள ஆக்ராவை 90 நிமிடங்களில் சென்றடைந்தது.
வழக்கமாக மற்ற சூப்பர் பாஸ்ட் ரெயில்கள் 2 மணி நேரத்தில் செல்கின்றன. இந்த செமி புல்லட் ரெயில் 1½ மணி நேரத்தில் ஆக்ரா செல்கிறது. இதன் மூலம் பயண நேரம் 30 நிமிடம் குறைகிறது.

கல்யாணி மதிவாணன் பதவி நீக்கத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை! மதுரை காமராஜ் பல்கலை கழகத்திற்கு இன்னும் விடிவில்லை ?

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் கடந்த 2012ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவர் இந்த பதவிக்கு தகுதியில்லாதவர் என்று கூறியும், இந்த நியமனத்தை ரத்து செய்யக்கோரியும் மதுரை பேராசிரியர்கள் கே.பி.ஜெயராஜ், ஐ.இஸ்மாயில் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் நியமனத்தை கடந்த மாதம் ரத்து செய்து தீர்ப்பளித்தனர். அதேசமயம் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அனுமதி வழங்கினர். இதனால் தீர்ப்பை எதிர்த்து கல்யாணி மதிவாணன், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கல்யாணி மதிவாணன் பதவி நீக்கத்துக்கு இன்று இடைக்கால தடை விதித்தது.maalaimalar.com

இராக்கில் கடத்தப்பட்ட செவிலியர்கள் விடுதலை ! விமான நிலையத்தை அடைந்தனர் !

ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட இந்திய நர்சுகளை விடுவித்து விமான நிலையத்தில் விட்டு விட்டதாகவும்,
அனைவரையும் இந்தியாவுக்கு பயணிக்க அனுமதிவிட்டதாகவும் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். கடத்திச் செல்லப்பட்ட 46 நர்சுகளில், கேரளாவைச் சேர்ந்த ஒரு நர்சு தனது தாயாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், தீவிரவாதிகள் எந்த தொல்லையும் கொடுக்கவில்லை என்றும், உணவும், குடிநீரும் கொடுத்ததாகவும், ஒரு கட்டடத்தில் அனைவரையும் ஒன்றாக வைத்திருப்பதாகவும், கட்டடத்தைச் சுற்றி சிலர் ஆயுதங்களுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் என்று அந்த கேரள நர்சின் தாயார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும் அந்த தாய் கூறுகையில், தனது மகளால் அதிக நேரம் பேச முடியவில்லை என்றும், செல்போனில் சார்ஜ் தீர்ந்துவிட்டது, மேற்கொண்டு பேச முடியுமா? என்று தெரியவில்லை என்றும் கூறியதாக தெரிவித்தார்.

தினமலர் மீது ஜெயலலிதா வழக்கு ! இடிந்த கட்டிட வீதிமீறலை சுட்டி காட்டியது குற்றமாமே ?

சென்னை அருகே பலரை பலிகொண்ட 11 மாடிக் கட்டிடம் தொடர்பாக செய்தி வெளியிட்ட தினமலர் மீது
முதல்வர் ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா, அவரது அமைச்சர்கள் மற்றும் அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சியினர் மற்றும் சமூக நல விரும்பிகள் பேசினாலோ, எழுதினாலோ வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. அதேபோல பத்திரிகைகள் மீதும் வழக்குத் தொடுக்கப்படுவதும் சர்வ சாதாரணம்.
இந்த வழக்குகளில் ஒரேயொரு நல்ல பலனாக, வேலையின்றி அலுவலகத்தில் தூங்கி வழியும் அரசு வழக்கறிஞர்களுக்கு இதன் மூலம் வேலை கிடைக்கிறது.
தமிழகத்தில் தனது அரசியல் எதிரியான விஜயகாந்த், அவரது மனைவி ஆகியோர் மீது அரசுக்கு எதிராக அவதூறாகப் பேசியதாக அதிகபட்சமாக 40க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின், ராமதாஸ் ஆகியோர் மீதும் அவதூறு வழக்குகள் பாய்ந்துள்ளன.

கோவா BJP MLA: மதுபானம் இந்திய கலாசாரத்தின் ஒரு அங்கம் !

பனாஜி: கோவாவில், பெண்கள் மதுபானக் கூடத்திற்கு செல்லும் கலாசாரம் குறித்து, மாநில அமைச்சர் ஒருவர் கடுமையாக விமர்சித்த நிலையில், 'மதுபானக் கூடமும், மதுவும், இந்திய கலாசாரத்தின் ஒரு அங்கம்' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., ஒருவர் தெரிவித்துள்ளார்.கோவா சட்டசபை எம்.எல்.ஏ.,வான விஷ்ணு வாகா, இது தொடர்பாக கூறியதாவது: கோவா சட்டசபை கூட்டத் தொடர், வரும், 22ம் தேதி துவங்குகிறது. அப்போது, சட்ட சபைக்கு வேட்டி அணிந்து செல்வேன். 'கோவா கடற்கரைக்கு, பெண்கள் அரைகுறை ஆடை அணிந்து செல்வதும், மதுபானக் கூடங்களுக்கு செல்வதும், இந்திய கலாசாரத்திற்கு எதிரானது' என, தெரிவித்த, அமைச்சர் சுதின் தவாலிகருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இவ்வாறு செய்வேன். 'குட்டையான உடைகள் அணிந்து, மதுபானக் கூடங்களுக்கு பெண் செல்வதை தடை செய்ய வேண்டும்' என, அமைச்சர் தவாலிகர் தெரிவித்தது ஏற்றுக் கொள்ள முடியாதது.  தே மு தி க வோட பா ஜ க கூட்டணி வைக்கும்போதே நினைச்சேன் இப்படி ஆகும்ன்னு

முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி சாக்கோசி கைது ! பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் !

முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியை காவலில் வைத்தும், அவரை விசாரணைக்காக பாரீசிற்கு அருகிலுள்ள நாந்தேர் பொலிஸ் தலைமையகத்தில் 48 மணி நேரம் தடுத்து வைத்தும், பிரெஞ்சு நீதித்துறை நேற்று காலை எதிர்பாராத ஒரு நடவடிக்கையை எடுத்தது. நேற்றுமுன்தினம் நள்ளிரவில் சார்க்கோசியும் அவரது வழக்கறிஞர் தியேரி ஹெர்சோக்கும் சட்டவிரோத செல்வாக்கு துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் மீது குற்றப்பதிவு செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறு குறித்து விவாதிக்க நீதிபதிகளைச் சந்தித்தனர். சார்க்கோசி மீதான பல்வேறு விசாரணைகளின் உள்ளார்ந்த தகவல்களை பெற்றதற்கு உபகாரமாக, அவர்கள் பிரான்சின் தலைமை மேல் முறையீட்டு நீதிமன்றமான கஸ்சஷியோன் நீதிமன்ற (Court of Cassation) வழக்கறிஞரான கில்பேர் அஜிபேருக்கு மொனோக்கோவில் ஒரு அந்தஸ்து மிக்க பதவியைப் பெற உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறார்கள்.

உயிரிழந்தவர்களை மீட்கும் கொடுமையில் ப்ளக்ஸ் போர்டு விழாக்கோலம் தேவையா?'

'சென்னையில், 11 மாடி கட்டடம் விழுந்து, ஒவ்வொரு நாளும், உயிரிழந்தவர்களின் பிணங்கள் ஒவ்வொன்றாக, மீட்கப்பட்டு வருகிற கொடுமையில், முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து வைத்துள்ள, ப்ளக்ஸ் போர்டு விழாக்கோலம் தேவைதானா?'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.முதல்வர் ஜெயலலிதா வீட்டிற்கு, பக்கத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் சாலையில், சிறு இடம் கூட பாக்கியில்லாமல், வரிசையாக, அ.தி.மு.க., அமைச்சர்கள் மிகப் பெரிய ப்ளக்ஸ் போர்டுகளில், முதல்வரை வானளாவப் புகழ்ந்து வைத்துள்ளனர். சாலையில் செல்வோர், அதில் மோதியவாறு சென்று கொண்டிருக்கின்றனர். அந்த ப்ளக்ஸ் போர்டில் ஒன்றாக, சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு, கொத்தமல்லியின் விலையை உயர்த்திய சாதனைத் தாயே என, ஒன்றை வைக்கலாம். போரூர் பகுதியில் 11 மாடிக் கட்டடம் விழுந்து, ஒவ்வொரு நாளும், உயிரிழந்தவர்களின் பிணங்கள் ஒவ்வொன்றாக, மீட்கப்பட்டு வருகிற கொடுமையில், இந்த விழாக்கோலமும், விளம்பரமும் தேவை தானா?

வியாழன், 3 ஜூலை, 2014

ஷிர்டி சாய்பாபா வழிபாட்டிற்கு எதிராக சுவாமி சங்கராச்சாரி சுவரூபானந்தா போர்க்கொடி !

புதுடெல்லி, சாய்பாபா இறைச்சியை சாப்பிட்டவர், அவர் எப்படி இந்து கடவுள் ஆக முடியும் என்று சுவாமி சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த் சரஸ்வதி கூறியுள்ளார். இந்துக்கள் சாய்பாபாவை வழிபடுவதற்கு பிரபல சாமியார் சுவாமி சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி எதிர்ப்பு தெரிவித்துவருகிறார். “யார் இறைச்சியை சாப்பிட்டாரோ அவர் இந்து கடவுளாக ஆகவே முடியாது” என்று ஸ்வரூபானந்த சரஸ்வதி கூறியுள்ளார். சாய்பாபாவை வழிபடுபவர்கள் மற்ற கடவுகளின் படங்களையும் பயன்படுத்துகின்றனர்.இந்த  சங்கராச்சாரிகளின்  சாயம்வெளுத்து  ரொம்ப நாளாச்சு 

இராக்கில் இந்திய செவிலியர்கள் மொசுல் நகருக்கு கடத்தல் ! ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் பிடியில் 46 பேர்

இராக்கின் திக்ரித் மருத்துவமனையில் இருந்த இந்திய செவிலியர்கள் 46 பேரை, ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் மொசூல் நகரத்திற்கு கடத்திச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இராக்கில் பரவலான நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வரும் நிலையில், தற்போது அவர்கள் திக்ரித் நகரை குறிவைத்துள்ளனர்.
திக்ரித் நகரில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த இந்திய செவிலியர்கள் 46 பேர், கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்தனர்.
இந்த நிலையில், செவிலியர்களை இன்று (வியாழக்கிழமை) கிளர்ச்சியாளர்கள் மொசூல் நகரத்திற்கு கடத்தி சென்றுவிட்டதாக தகவல் வெளியாகின.

ஜெயா மோடியை சந்தித்த பின்பு வருமானவரி துறை பல்டி ! ஆஹா இனி வழக்கு ம்ம்ம்ம் நடந்து ம்ம்ம் தீர்ப்பு ம்ம்ம் !

ஜெயலலிதா தற்போது விமான நிலையத்திற்குச் சென்று இன்றைய பிரதமரை வரவேற்கிறார், வழி அனுப்புகிறார். பதினைந்து நிமிடம் தனித்து உரையாடுகிறார். அதற்குப் பிறகு தான் எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை சார்பாக பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள மனு கொடுத்து, அது பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பின்னர் மீதான வருமான வரி வழக்கில் புதிய திருப்பமாக வருமான வரித்துறை பல்டி அடித்துள்ளது ஏன் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
30-6-2014 அன்று சென்னை எழும்பூர் 1-வது பொருளாதார குற்றப் பிரிவு நீதிமன்றத்தில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதும், அவருடைய உடன்பிறவா சகோதரி சசிகலா மீதும், வருமான வரித் துறை தொடர்ந்த ஒரு வழக்கு நீதிபதி தெட்சிணாமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு ஒன்று ஏற்கப்பட்டு, விசாரணை ஜூலை 24ஆம் தேதிக்கு - ஆம் 24 நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்துள்ளது

சதானந்த கவுடா : ராஜ்யசபாவில் திமுக எம்பீக்கள் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கவேண்டும் !

தமிழகத்தின் நலன்கள் பாதிக்கப்படாமல், நாட்டின் நலனுக்கான விஷயங்களில், தி.மு.க.,வின் ராஜ்யசபா உறுப்பினர்கள், மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுவது குறித்து, தலைவர் கருணாநிதியிடம் சொல்லி, நல்ல முடிவெடுக்கப்படும்,'' என, ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடாவிடம், தி.மு.க., ராஜ்யசபா உறுப்பினர் உறுதியளித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்களில் ஒதுக்கப்பட்டிருக்கும் சிறப்பு பெட்டியில், பொது பெட்டியைப் போல மற்றவர்களை பயணிக்க அனுமதிக்கின்றனர். அதனால், நாங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறோம்' என, கடந்த சில நாட்களாக, சென்னையில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.இந்த பிரச்னையை தீர்க்க, நேற்று முன்தினம் டில்லியில் ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடாவை சந்தித்துப் பேசினார் தி.மு.க., ராஜ்ய சபா உறுப்பினர் கனிமொழி.