தி.மு.க.,வைச் சேர்ந்த, மத்திய அமைச்சர் பழனி மாணிக்கத்திற்கும்,
டி.ஆர்.பாலு எம்.பி.,க்கும் இடையிலான மோதலை, முடிவுக்குக் கொண்டு வர,
பஞ்சாயத்திற்கு வருமாறு, கருணாநிதி விடுத்த அழைப்பை, டி.ஆர்.பாலு ஏற்க
மறுத்து விட்டார்.கருணாநிதியின் அனுமதியின்றி, டி.ஆர்.பாலுவை விமர்சித்து,
பழனி மாணிக்கம் பேட்டியளித்தாரா என்ற கேள்வி, தி.மு.க., வட்டாரத்தில்
எழுந்துள்ளது. கட்சியில் நடக்கும், மோதலின் பின்னணி புரியாமல், அப்பாவி
தி.மு.க., தொண்டர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
அதிருப்தி
தஞ்சாவூர்
லோக்சபா தொகுதியை குறி வைத்து, டி.ஆர்.பாலு மேற்கொண்டு வரும் பணிகளால்,
அத்தொகுதியின் தற்போதைய எம்.பி.,யும், அமைச்சருமான பழனி மாணிக்கம்,
அதிருப்தி அடைந்தார். இவ்விருவருக்கும் இடையேயான மோதல், உச்சகட்டத்தை
எட்டியது. பிரச்னை களை கட்சி தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்லாத பழனி
மாணிக்கம், பத்திரிகைகளுக்கு கொண்டு சென்றதால், தி.மு.க., தலைமை
சங்கடத்துக்கு உள்ளானது.இருவருக்கும் இடையே யான, மோதலை முடிவுக்குக் கொண்டு
வர, சென்னை சி.ஐ.டி., காலனியில் உள்ள, கனிமொழியின் வீட்டில், நேற்று
முன்தினம், பஞ்சாயத்தை கூட்டினார் கருணாநிதி. பழனி மாணிக்கம், டி.ஆர்.பாலு
ஆகிய இரு வருக்கும், கருணாநிதி அழைப்பு விடுத்தார்.