ஞாயிறு, 26 டிசம்பர், 2021

கீழவெண்மணியில் சீமான் அஞ்சலி, தகராறு!

கீழவெண்மணியில் சீமான் அஞ்சலி, தகராறு!

மின்னம்பலம் : நாகை மாவட்டம் கீழவெண்மணியில் 44 விவசாயத் தொழிலாளர்கள் எரித்துக்கொள்ளப்பட்டதன் 53ஆவது நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட நினைவிடத்தை சிபிஎம் கட்சியானது புதுப்பித்துள்ளது. அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேற்று காலையில் இதைத் திறந்துவைத்தார். அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன் முதலிய பல தலைவர்களும் கலந்துகொண்டனர்.
தியாகிகள் நினைவு ஜோதிப் பயணம் உள்பட பல நிகழ்வுகள் நடைபெற்றன. மாநிலம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் கீழவெண்மணி நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்திச்சென்றனர்.

ஹிம்லர் ..ஹிட்லரின் நம்பர் 2 ஆரிய வெள்ளை தூய்மை இனவாத கொலைகாரன்

ஹென்றிச் ஹிம்லர் ..  மிகவும் அமைதியானவன் . அசாத்திய திறமைசாலி . ஹிட்லர் அரங்கேற்றிய  இன அழிப்புக்களின் முக்கிய சூத்திரதாரியே இவன்தான்
ஹிட்லர் மீது எல்லையற்ற ஈடுபாடும்   எந்த குரூரத்திற்கும் அஞ்சாத ஒரு வித பக்தி உணர்வும் கொண்டவன்.
தனது அதிகார போட்டியில் தனக்கு எதிரானவர்களை ஒழித்து கட்டி மிக வேகமாக ஹிட்லருக்கு அடுத்த இடத்திற்கு   வந்து சேர்ந்தான்
ஆனால் நாசிகளின் எல்லைகடந்த அதிகாரம் முடிவுக்கு வந்தபோது  ஹிட்லருக்கு மிக மோசமான ஒரு நம்பிக்கை துரோகத்தையும் பின்பு செய்தான்
1900 ஆம் ஆண்டு அக்டொபர்  மாதம் 7 ஆம் தேதி ஒரு பள்ளிக்கூட உதவி தலைமை ஆசிரியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தான்
படிக்கும் காலத்தில் பல குறைபாடுகள் இருந்தாலும் கவனமாக படித்து கெட்டிக்கார மாணவன் என்ற பெயரை எடுத்திருந்தால்
கிறிஸ்தவ தேவாலய நிகழ்வுகளில் பக்தியோடு பங்கெடுத்து கொண்டான் .
நான் எப்பொழுதும் கடவுளுக்கு விசுவாசமாகவே இருப்பேன் கடவுளை விரும்புகிறேன் என்று தனது டயரியில் எழுதியிருந்தான்
ஆனால் பிற்காலத்தில் தேவாலய பாதிரிகளையே ஈவு இரக்கம் இல்லாமல் கொன்றான்  

சனி, 25 டிசம்பர், 2021

மஞ்சள் பை இயக்கம் பூத்த கதை .. புத்தக திருவிழாவில் தொடங்கிய புள்ளி

மஞ்சள் பை இயக்கம் பூத்த கதை தெரியுமா?

மின்னம்பலம்  :  மஞ்சள் பை இயக்கம் பூத்த கதை!
அரசுத் தலைவரான முதலமைச்சரால் நேற்று (டிசம்பர் 23) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள மஞ்சள் பை இயக்கம், எங்கு, யார் யாரால் விதையாக இடப்பட்டது என்பதை உறுதிபடச் சொல்லமுடியாது என்றாலும், பத்து ஆண்டுகளுக்கு முந்தைய துணிப்பை இயக்கம் இதன் முன்னோடி எனக் கூறலாம்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர், சென்னைப் புத்தகக் காட்சியில், ‘மழை மண் மரம் மானுடம்’ என்கிற குழுவினர், பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்.  லட்சக்கணக்கான மக்கள் வந்துசெல்லும் மிகப்பெரிய திருவிழாவான சென்னைப் புத்தகக் காட்சியில் தொடங்கினால் நிச்சயமாக நல்ல பலன் தரும் என அந்தக் குழுவினர் நம்பிக்கையுடன் தொடங்கினார்கள்.

உத்தராகண்ட்: தலித் பெண் சமைத்த உணவை சாப்பிட மறுத்த ஆதிக்க சாதி மாணவர்கள்

சாதிய ரீதியில் பாகுபாட்டுக்கு உள்ளாகியுள்ள தலித் பெண் சுனிதா தேவி
தலித் பெண் சுனிதா தேவி
தீபா ஜோஷி
வட்டார உறுப்பினர் தீபா ஜோஷி
தலித் பெண் சமைத்த உணவை சாப்பிட மறுத்த ஆதிக்க சாதி மாணவர்கள்
பிபிசி இந்திக்காக : Rajesh Dobriyall  -  BBC  :  சாதிய ரீதியில் பாகுபாட்டுக்கு உள்ளாகியுள்ள தலித் பெண் சுனிதா தேவி
உத்தராகண்ட் மாநிலம், சம்பாவத் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், சமையலர் பணியில் இருக்கும் தலித் பெண்மணி சமைத்த உணவை ஆதிக்க சாதிக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் சாப்பிட மறுத்துள்ளனர்.
இந்த விவகாரம் வெளியில் வந்ததையடுத்து, உணவு சமைத்த பெண்மணியை பணியிலிருந்து நீக்கியது மட்டுமின்றி, இந்தப் பதவிக்கு புதிதாக ஒருவரை நியமனம் செய்வதாகவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் இந்த விவகாரம் தீர்க்கப்பட்டுவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த விவகாரம் மேலும் சிக்கலாக மாறக்கூடும் என்று பிபிசி இந்தியின் கள நிலவர ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சம்பாவத்தில் உள்ள சுக்கிடாங் இண்டர் காலேஜில் மொத்தம் உள்ள 230 மாணவர்களில், ஆறாம் முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 66 மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு தயார் செய்யப்படுகிறது.
தலித் பெண் சமைத்த உணவை சாப்பிட மறுத்த ஆதிக்க சாதி மாணவர்கள்

பாக்ஸ்கான் தொழிலாளர்களுக்கு நிம்மதி.. தமிழக அரசு எடுத்த ஆக்‌ஷன்!

tamil.samayam.com : பாக்ஸ்கான் நிறுவன தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தித்தர தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் – சுங்குவார்சத்திரம் சிப்காட் தொழில்பூங்காவில் அமைந்துள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் பாக்ஸ்கான் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்கும் விடுதியில் உணவின் தரம் மற்றும் குறைபாடுகளைக் களையக்கோரி, கடந்த 18-12-2021 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிர் பயத்தால் 8 டோஸ் தடுப்பூசி போட்ட நபர்: 9-வது முறையாக ஏமாற்ற முயன்றபோது கைது ... பெங்களூர்

Karnataka coronavirus update: 1,262 new Covid-19 cases, 17 deaths |  Business Standard News
file pictue

மாலைமலர் : ஒரு டோஸ் தடுப்பூசி போடவே பலர் பயந்து வரும் நிலையில் உயிர் பயத்தில் போலி ஆவணங்கள் மூலம் 8 டோஸ் தடுப்பூசி போட்ட நபர் போலீசில் சிக்கிய சம்பவம் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது.
பெங்களூரு:  கொரோனா என்ற கொடிய அரக்கன் இந்தியாவில் காலூன்றி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இருப்பினும் அதன் தாக்கம் இன்னும் இருந்து வருகிறது. இதற்கிடையே ஒமைக்ரான் என்ற உருமாறிய வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதில் மக்களை காக்க மத்திய அரசு கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை போடும் பணியை முடுக்கி விட்டுள்ளது. ஒரு நபர் 2 டோஸ் தடுப்பூசி போட அரசு அனுமதி உள்ளது. அத்துடன் ஒமைக்ரான் பரவலை தொடர்ந்து மக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

திருமாவளவன் : பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய கூட்டணி அமைய ஸ்டாலின் முன் முயற்சி எடுக்க வேண்டும்

 மின்னம்பலம் : பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய கூட்டணி அமைய ஸ்டாலின் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் வைத்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆண்டுதோறும் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு அம்பேத்கர் சுடர் விருது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், பெரியார் ஒளி விருது வைகோவுக்கும், காமராஜர் கதிர் விருது நெல்லை கண்ணனுக்கும், அயோத்தி தாசர் ஆதவன் விருது குடியரசுக் கட்சி மூத்த தலைவர் கரியமால், காயிதே மில்லத் பிறை விருது இந்திய தேசிய லீக் தமிழ் மாநில தலைவர் பஷீர் அகமது, செம்மொழி ஞாயிறு விருது மொழியியலாளர் முனைவர் ராமசாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இலங்கை திருக்கோவில் போலீஸ் நிலைய துப்பாக்கி சூடு 4 போலீசார் உயிரிழப்பு

உள் நுழையத் தடை

 BBC - Tamil  : இலங்கையின் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள போலீஸ் நிலையத்தில் நேற்று (24) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு போலீசார் உயிரிழந்தனர்.
குறித்த நிலையத்தில் பணியாற்றி வந்த – போலீஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.
நேற்றிரவு 11.40 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக பிபிசி தமிழிடம், திருகோவில் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் போலீசார் மூவர் உயிரிழந்தனர். காயமுற்று வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் ஒரு போலீஸ் உத்தியோகத்தர் பின்னர் உயிரிழந்தார்.

மீண்டும் வேளாண் சட்டங்கள்..? மத்திய அமைச்சர் தோமர் பேச்சு ...

 மாலைமலர் : பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தமான வேளாண் சட்டங்கள் சிலருக்குப் பிடிக்கவில்லை என நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
நாக்பூர்:  மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் காரணமாக திரும்ப பெறப்பட்டது.  வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச தேர்தலைக் கருத்தில் கொண்டே மத்திய பாஜக அரசு இந்த முடிவை எடுத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்நிலையில் வேளாண் சட்டங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம் என மத்திய வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

கலைஞரை சண்முகநாதன் சொற்படிதான் ஸ்டாலினே சந்திப்பார் .. புரோட்டோகால் முக்கியம்.. கோபாலபுரத்து நினைவுகள்

May be an image of 2 people

Umamaheshvaran Panneerselvam  :  கலைஞர் கருணாநிதியை சந்திக்க ஒருமுறை கோபாலபுரம் சென்றிருந்தோம்.அவர் உடல் நலிவுறத் தொடங்கியிருந்த நேரம் அது. ஆதலால் பார்க்க வருபவர்களை எல்லாம் சற்றே அதிகமாக காக்கவைத்து சோதித்து அவசியம் இருப்பின் மட்டுமே அனுமதித்து வந்தார்கள்.
கலைஞர் இல்லத்தின் வலதுப்புற இடம் எப்பொழுதும் ஒருவித நிதானம் தவழும் இடமாக இருக்கும். நிறைய பேர் காத்திருந்தாலும் உள்ளே சலசலப்பே எழவில்லை எனில் அங்கே சண்முகநாதன் இருக்கிறார் என்று புரிந்துகொள்ளலாம்.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழலில்ஹெலிகாப்டர் பேர ஊழலில் சோனியா காந்திக்கு தொடர்பு இல்லை- அமலாக்கப் பிரிவு. AgustaWestland ‘SG’ stands for Sushen Gupta, not Sonia Gandhi

There is no quid pro quid : Sonia Gandhi denies Rahul's involvement in  AgustaWestland scam | Indiablooms - First Portal on Digital News Management

Mathivanan Maran -   Oneindia Tamil  : டெல்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழலில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு தொடர்பு இல்லை என அமலாக்கப் பிரிவு விளக்கம் அளித்திருக்கிறது.
2010-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.
அப்போது ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட விவிஐபிகளுக்காக 12 அதிநவீன சொகுசு ஹெலிகாப்டர்களை இத்தாலியின் அகஸ்டா வெஸ்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது.
ரூ3,600 கோடி மதிப்பிலானது இந்த ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்துக்காக அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு ரூ400 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சை வெடித்தது.
நாட்டின் விமானப் படை தளபதியாக இருந்த தியாகி உள்ளிட்ட பலரது தலைகள் இந்த விவகாரத்தில் உருண்டன.
பின்னர் 2014-ல் மத்திய அரசு இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்திருந்தது!
link click not Sonia Gandhi
 2016-ம் ஆண்டில் விவிஐபி ஹெலிகாப்டர் பேர ஊழலில் சோனியா காந்திக்கு தொடர்பிருப்பதாகவும் சர்ச்சை வெடித்தது. ஆனால் சோனியா காந்தி இதனை திட்டவட்டமாக மறுத்திருந்தார். மேலும் இது தொடர்பான விசாரணைகளை எதிர்கொள்ளவும் தாம் தயார் எனவும் சோனியா கூறியிருந்தார்.

மராட்டியத்தை விட அம்பேத்கர் புகழை பரப்பியது திராவிட இயக்கம்தான்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

 Vignesh Selvara கலைஞர் செய்திகள் : "அம்பேத்கர் சுடர் விருதை பெரியார் திடலில் பெறுவதை விட வேறென்ன பெருமை கிடைத்துவிடப் போகிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
“மராட்டியத்தை விட அம்பேத்கரின் புகழை அதிகமாகத் தமிழ்நாட்டில் பரப்பியது திராவிட இயக்கம்தான்!” என அம்பேத்கர் சுடர் விருது பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்தினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு சான்றோருக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. முத்தமிழறிஞர் கலைஞர், ஆசிரியர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், கே.எஸ்.அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன் உள்ளிட்ட பலருக்கு இதுவரை வி.சி.க-விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

மாரிதாஸ் விடுதலை நீதிமன்றத்துக்கு ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!

 மின்னம்பலம்:   மாரிதாஸ் மீதான வழக்குகளை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
யு ட்யூபர் மாரிதாஸ் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை மதுரை உயர் நீதிமன்றம் அடுத்தடுத்து ரத்து செய்தது. குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து பற்றி மாரிதாஸ் இட்ட ட்விட்டர் பதிவுக்கு எதிரான வழக்கையும், கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவலுக்கு தப்லிக் ஜமாத் மாநாடுதான் காரணம் என்று அவர் வெளியிட்ட வீடியோவுக்கு எதிரான வழக்கையும் அண்மையில் மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.

வெள்ளி, 24 டிசம்பர், 2021

கொல்கத்தாவில் மம்தா பிரதமர் கோஷம் ஸ்பீடு ..போட்டியில் ராகுல் - ஸ்டாலின்- சரத் பவார்.......

May be an image of 1 person and text that says 'VoLTE 00:52 28% Kathir RS Dravidam for India Movement Publications Pages 117 Price 150Rs #BookReview #வாசிப்புவசப்படும் #வாசிப்பைநேசிப்போம் WHY DO WE NEED MKS ASPM OF INDIA?'

Mathivanan Maran  -  Oneindia Tamil :  கொல்கத்தா: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மமதா பானர்ஜி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா தலைவர் பினய் தமங் அறிவித்துள்ளார்.
க்கா ஜன்முக்தி மோர்ச்சா தலைவர் பினய் தமாங், முன்னாள் எம்.எல்.ஏ. ரோஹித் சர்மா ஆகியோர் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மோலாய் கடாக், பிரத்யா பாசு ஆகியோர் முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தனர்.
மோலாய் கடாக் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரும் டார்ஜிலிங் அரசியலில் புதிய பயணம் எங்களுக்கு... இந்த தலைவர்கள் வருகையால் திரிணாமுல் காங்கிரஸ் வலிமை பெறும் என்றார். பிரத்யா பாசு கூறுகையில், பாஜக மக்களை மத ரீதியாக பிரித்து கொண்டிருக்கிறது. ஆனால் பாஜகவின் அரசியலை திரிணாமுல் காங்கிரஸ் தோற்கடித்தது. டார்ஜிலிங் மேம்பாட்டுக்காக மமதா பானர்ஜியை அந்த மக்கள் நம்புகின்றனர் என்றார்.

ஈஷா யோகா ஜாக்கியின் யானை வழித்தட ஆக்கிரமிப் பு- மீண்டும் ஆய்வு ! அமைச்சர் ராமச்சந்திரன் அதிரடி

  Mathivanan Maran -   Oneindia Tamil :  s தஞ்சாவூர்: ஈசா யோகா மையத்தின் ஆக்கிரமிப்பு குறித்து மீண்டும் ஆய்வு நடத்தப்படும் என்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 டெல்டா மாவட்ட விவசாயிகள், எம்.எல்.ஏபங்கேற்ற ஆலோசனை கூட்டம் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற விவசாயிகள் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள், விளைநிலங்களை பாழ்படுத்தும் கருவேல மரங்களை அழிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், கோவை ஈஷா யோகா மையம் ஒரு சென்ட் கூட ஆக்கிரமிக்கவில்லை என ஏற்கனவே அறிக்கை கொடுத்திருக்கிறது. வனத்துறையின் அருகில் உள்ள கட்டுப்பாடுகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

பரமக்குடி அரசு பள்ளியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

 மாலைமலர் : தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளுக்கே சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அதன்படி சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பெருமாள் கோவில் மலை அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

நடிகர் வடிவேலுக்கு கொரோனா.. ராமச்சந்திரா மருத்துவமனையில்

 மாலைமலர் : உடல்நிலைக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சுராஜ் இயக்கி வருகிறார்.
இப்படப்பிடிப்பிற்காக நடிகர் வடிவேலு லண்டன் சென்றிருந்தார். இந்நிலையில் உடல்நிலைக்குறைவு காரணமாக லண்டனில் இருந்து திரும்பிய அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பழங்குடியினர் பாட்டு - இருளர் இன பாரம்பரிய இசை

 Makkal Athikaram  :; பழங்குடி மக்களின் மத்தியில் பல்வேறு மெட்டுகளில் பாடல் பரவிக்கிடக்கிறது. உழைக்கும் மக்களின் தாளகதியும்,  உண்டு கொழுக்கும் கூட்டத்தின் தாளகதியும் வேறுவேறு என்பதை நிரூபிக்கின்றது பழங்குடி மக்களின் இந்த பாடல்.
கான்கிரீட் கூட்டுக்குள் அமர்ந்துகொண்டு உழைக்கும் மக்களின் விடுதலைக்கான பாடலை தேடுவதைக் காட்டிலும் அலைந்து திரிந்து விடுதலைக்கான மெட்டை தேடுவதே மக்களுக்கான கலையாக இருக்கும்!
தேடுவோம்!
பகிர்வோம்!
விடுதலைக் குரலாய் ஒலிப்போம்!

"பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் பாடல்" ... சரவெடி சரண் மற்றும் டோனி ராக் ஆகிய இரு கானா பாடகர்கள்

 கலைஞர் செய்திகள் : "பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் பாடல்" : கொதித்த திருவள்ளூர் எஸ்.பி - அதிரடி ஆக்‌ஷனில் போலிஸார்!
பள்ளிச் சிறுமிகள் குறித்து ஆபாசமாக பாடல் பாடிய நபர் குறித்து திருவள்ளூர் எஸ்.பி வருண்குமார் ட்விட்டரில் பதிவிட்ட நிலையில், அவர் மீது போலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பள்ளிச் சிறுமிகள் குறித்து ஆபாசமாக பாடல் பாடிய நபர் குறித்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி வருண்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நிலையில், அவர் மீது போலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கக்கன் அந்தக் காலத்து அன்னா அசாரே?

May be an image of 1 person and text that says 'வடி கனவு நனவாகிறது பினர். அந்த வழியில்தான் முதலமைச்சர் அதற்கான செயல் வத்தைப் ப ற்பட் வருமசன வரம்பின் மூலம் தந்துள்ளார். காம்ரா கண்டகளவைனவாக்கும் வகையில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். செயல்பட்டு வருகிருர். லஞ்சம், நல்லாட் முதலமைச்சர் எம். ஜி. ஆரப் பாராட்ட வேண்டும். ஊமலற்ற ஏமை-எளிய மக்கள் வேண்டுமென்றம் பெற பெருர் தலவர் காமராஜர் விரும் கக்கன் (முன்னுள் காங்கிரஸ் மைச்சர்)'

Arul Ezhilan    அந்தக் காலத்து அன்னா அசாரே!
பெரியாரும், அண்ணாவும், கலைஞரும், என்ன  செய்தார்கள் என பக்கம் பக்கமாக எழுதலாம்.
கக்கன் என்ன செய்தார்?
“அவரு ரொம்ப எளிமையானவருங்க”
இதைத் தவிற இந்த முழு மூடர்களிடம் வேறு ஏதாவது கக்கனைப் பற்றி சொல்ல இருக்கிறதா? (சட்டியில் இருக்கணும் அல்லது சொல்கிறவன் மூளையில் இருக்கணும்)  கக்கன் அந்தக் காலத்தில் வாந்த அன்னா அசாரே மோசமான அரசியல் தலைவர். நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாதவர். அவர் போலீஸ் மந்திரியாக இருந்த போதுதான்  மொழிப்போர் தியாகிகள் கொல்லப்பட்டார்கள். தமிழகத்தின் அடிப்படையான சமூகக் கட்டமைப்பின் அஸ்திவாரம் இட ஒதுக்கீடு. அதில் முதன் முதலாக பொருளாதார அளவுகோலை நுழைத்து சிதைத்தவர் எமுஜியார் அந்த எம்ஜிஆரை ஆதரித்தவர் கக்கன்.
பொதுவாக அரசியலில் எதையும் சாதிக்காத மக்களுக்கு நல்லது செய்யாதவர்களைப் புகழ ஒரே ஒரு வரி போதும் “அவுரு  ரொம்ப எளிமையானவருங்க”

நாம் தமிழர் ஹிம்லர் மீது தாக்குதல் நடத்துவதா?.. திமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்துவதா?.. திமுகவுக்கு  எடப்பாடி பழனிசாமி கண்டனம்! | Tamil Nadu Opposition Leader Edappadi  Palanisamy condemns DMK - Tamil ...

  Rayar A  -   Oneindia Tamil    சென்னை: தருமபுரி மாவட்டம், அரூரில் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் சில நாட்களுக்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மேடையில் பேசிக் கொண்டிருந்தனர்.
நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் என்பவர் திமுக அரசை மிக மோசமாக விமர்சித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும் திமுகவினரையும் தமிழக முதல்வரையும் ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.     இதனால் ஆத்திரம் அடைந்த திமுகவினர் சிலர் திடீரென மேடையேறி பேச்சை நிறுத்தும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து திமுகவினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அங்கு போடப்பட்டு இருந்த நாற்காலிகளும், மேஜைகளும் வீசப்பட்டு அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.

மாரிதாஸ் மீது 2 ஆவது வழக்கு ரத்து: அதே நீதிபதி உத்தரவு!

 மின்னம்பலம் : யு ட்யூபர் மாரிதாஸ் மீதான மற்றொரு வழக்கும் இன்று (டிசம்பர் 23) மதுரை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. மாரிதாஸ் பதிவு செய்த ட்விட்டர் பதிவு தொடர்பாக அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்த நீதிபதிதான் இந்த வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
மாரிதாஸ் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் இறந்தது தொடர்பாக பதிவு செய்த ட்விட்டர் பதிவு தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை ரத்து செய்யுமாறு மதுரை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இந்த வழக்கில் மாரிதாஸ் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றப் பிரிவுகள் பொருந்தாது என்று கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். இது வழக்கறிஞர்கள் மத்தியிலும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் கூட விவாதிக்கப்பட்டது.

வியாழன், 23 டிசம்பர், 2021

பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் கேரள பள்ளி சீருடை - இஸ்லாமிய குழுக்கள் போராடுவது ஏன்?

Students

Protesting muslim groups

பி பி சி தமிழ்  : கேரள அரசு பள்ளி ஒன்றில், பதின்ம வயது மாணவிகள் கால் சட்டைகள் அணிய அனுமதிக்கப்பட்ட பின், அது அம்மாநிலத்தில் சர்ச்சையானது. இந்த உடைகள் மீதுள்ள சர்ச்சை குறித்து டெல்லியில் உள்ள பிபிசியின் கீதா பாண்டேவும், கேரளாவில் அஷ்ரஃப் படன்னாவும் விளக்குகின்றனர்.
புதன்கிழமை காலை, ஸ்ரீங்கி சி.கே தனது புதிய சீருடையுடன் பள்ளி பேருந்திற்காக காத்துக்கொண்டிருக்கும் போது, முன் பின் அறிகம் இல்லாத பெண்ணிடமிருந்து வந்த பாராட்டு அவருக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது.

திருநங்கையாக மாறிய மகனை ஆட்களை வைத்து கொலை செய்த தாய்.. சேலத்தில்


BBC : சேலம் மாநகர் ஜாகிர் அம்மாபாளையம் சேர்ந்தவர் உமாதேவி. கணவரை பிரிந்து வசிக்கும் இவரது மகன் நவீன்குமார் .திடிரென இவர் சமீபத்தில் திருநங்கையாக மாறி தனது பெயரை அக்க்ஷிதா என மாற்றிக் கொண்டார்.
இந்நிலையில் கடந்த வாரம் வீட்டின் அருகே உள்ள ஒரு முட்புதரில் நவீன்குமார் காயங்களுடன் கிடந்துள்ளார் அவரை மீட்ட உமாதேவி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
இதில் சிகிச்சை பலனின்றி கடந்த இரு தினங்களுக்கு முன்பு நவீன் குமார் என்ற அக்ஷிதா உயிரிழந்தார். சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேக மரணம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

கட்டாய மதமாற்ற தடைச்சட்ட மசோதா கர்நாடகாவில் நிறைவேறியது

 மாலைமலர் : கட்டாய மதமாற்ற தடைச் சட்ட மசோதா மீது சட்டசபையில் இன்று விவாதம் நடைபெற்றபோது மசோதாவை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது.
பெங்களூரு:  கர்நாடகாவில் கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா கடந்த இரு தினங்களுக்கு முன்பு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதா விவாதத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவக்குமார், சட்ட நகலை கிழித்து தரையில் வீசினார்.
பின்னர் காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.