செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

ஒரு மாதமாக கொரோனா தடுப்பூசி செலுத்திவரும் சீனா - அதிர்ச்சி .. சீனாவின் ஒரு பகுதியில்

தினத்தந்தி :  சோதனை முயற்சியில் உள்ள கொரோனா தடுப்பூசியை கடந்த ஒரு மாதமாக தங்கள் நாட்டை சேர்ந்த குறிப்பிட்ட பிரிவினருக்கு சீனா செலுத்தி வருகிறது.
தங்கள் நாட்டை சேர்ந்த குறிப்பிட்ட பிரிவினருக்கு கடந்த ஒரு மாதமாக கொரோனா தடுப்பூசி செலுத்திவரும் சீனா - அதிர்ச்சி தகவல்
கொரோனா சிகிச்சை மையத்தில் சீன அதிபர் ஜூ ஜுங்பிங் பிஜுங்: 
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் இறங்கியுள்ளன. வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் இறுதிகட்ட பணியில் உள்ளதாக பல நாடுகள் தெரிவித்துள்ளன. குறிப்பாக ஆக்ஸ்போர்டு தடுப்பூசி உள்ளிட்ட பல தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளது.  
கொரோனா உருவான சீனாவும் தான் கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பல நாட்களாக தெரிவித்து வருகிறது.ஆனால் அங்கு சோதனை கட்டத்தில் உள்ள தடுப்பூசியை அந்நாட்டு அரசு குறிப்பிட்ட பிரிவினருக்கு கடந்த ஜூலை 22 ஆம் தேதி முதல் செலுத்தி வருவது தெரியவந்துள்ளது.    
இது தொடர்பாக சீனாவின் தேசிய சுகாதாரத்துறை அமைப்பின் சேங் ஹூவாங்வி கூறியதாவது:-

கோமாவில் வடகொரியா சர்வாதிகாரி...கிம் ஜாங் உன்...ஆட்சியில் சகோதரி!!

vanthana Lakshm - tamil.oneindia.co : சியோல்: சமீபத்தில் வெளியாகி இருந்த வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னின் புகைப்படங்கள் அனைத்தும் போலியானவை என்று தென் கொரியாவின் மறைந்த முன்னாள் அதிபருக்கான முன்னாள் உதவியாளர் சாங் சாங் மின் தெரிவித்துள்ளார். 
மேலும், கிம் ஜாங் உன் கோமாவில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். Kim கோமாவில் இருக்கிறார்..அதனால் தான்...!-Korean Herald கூறுகிறது | Oneindia Tamil இவரது சகோதரி கிம் யோ ஜாங்க் தற்போது அந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர்தான், அமெரிக்கா, தென்கொரியா நாடுகளுடன் ராஜாங்க உறவுகளை கவனித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. பொருளாதாரம் மற்றும் ராணுவப் பணிகள் நம்பிக்கையான அதிகாரிகளுடன் கிம் ஜாங் உன் பகிர்ந்து கொண்டு இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
வடகொரியா நாட்டின் சர்வாதிகாரியான கிம் ஜாங் உன் கடந்த பல மாதங்களாக பொது வெளியில் தலையை காட்டுவதில்லை. எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்பது அனைத்தும் மர்மமாக இருக்கிறது.  

பூ பறித்த தலித் சிறுமி, 40 குடும்பத்துக்கு தண்டனை அளித்த சாதி இந்துக்கள் – ஒடிஷா... வீடியோ

சுதந்திரம் அடைந்து 74 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்தியாவில் தலித்துகளின் வாழ்க்கை நிலையை விவரிக்கிறது , ஒடிசாவின் டேங்கனால் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம். டேங்கனால் மாவட்டத்தில் ஒரு சிறிய விஷயத்தால் ஆரம்பித்த பிரச்சனை காரணமாக, ஆதிக்க சாதியான சவர்ணாக்கள், சமூக ரீதியாக தலித்துகளை புறக்கணித்தனர். இதன் காரணமாக அவர்களின் நிலைமை மிகவும் கடினமாகிவிட்டது. புறக்கணிப்பு நடந்து நான்கு மாதங்களுக்குப் பின்னர், ஊடகங்களில் செய்திகள் வெளியான பிறகு, நிர்வாகம் இப்போது இந்த விஷயத்தில் தலையிட்டுள்ளது. உயர் சாதியினர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.   

இருப்பினும், சமூக புறக்கணிப்பு குற்றச்சாட்டுகளை சவர்ணாக்கள் மறுத்துள்ளனர். தங்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என்றும் கூறியுள்ளனர். 

இலங்கை கடலுக்குள் இழுவை படகுகளை தடுக்க புதிய திட்டம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

BBC : இந்திய இழுவைப்படகு அச்சுறுத்தல் தொடர்பில் விரைவில் தீர்வு எட்டப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா

கிளிநொச்சியில் இன்று ஊடகவியாளர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி – இரணை தீவு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் இந்திய இழுவைப்படகுகளின் பிரவேசம் அதிகரித்துள்ளதாகவும், இந்த ஆட்சி காலத்தில் அதனை தடுக்க எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  இந்திய இழுவைப்படகு பிரச்சினை இரணைதீவு பகுதியில் மாத்திரமல்லாது, அது இலங்கையின் வட மாகாணத்திற்கே பாரிய அச்சுறுத்தலாகியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். 

மும்பை அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 70 பேர் உயிரோடு புதைந்தனர் விடிய, விடிய மீட்பு பணி

  தினத்தந்தி :  மும்பை அருகே 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த துயர விபத்தில் 70 பேர் உயிரோடு புதைந்து இருக்கலாம் என்று கருதப்படும் நிலையில் விடிய, விடிய மீட்பு பணி நடந்தது. மும்பை, > மராட்டிய மாநிலத்தில் தலைநகர் மும்பை அருகே உள்ள ராய்காட் மாவட்டம் மகாட், காஜல்புரா பகுதியில் தாரிக் கார்டன் என்ற 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இருந்தது. இந்த கட்டிடத்தில் சுமார் 45 வீடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மாலை 6.50 மணியளவில் கட்டிடத்தின் மேல் 3 மாடிகள் திடீரென இடிந்து விழ தொடங்கியது. இதையடுத்து கீழ் தளத்தில் வசித்து வரும் மக்கள் அலறி அடித்து கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். இந்தநிலையில் சில நிமிடங்களில் கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் இருந்து வெளியேறிய புழுதியால் அந்த பகுதியே புகை மண்டலம் போல ஆனது.

6 இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி

 dinamalar ": கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி

வாஷிங்டன்:  அமெரிக்கா கடலில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசய காட்சி வெளியாகி உள்ளது.  லூசியானா, மிசிசிப்பி, அலபாமா மற்றும் மேற்கு புளோரிடா பகுதிகளில் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லூசியானா மாகாணத்தின் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றிருந்தவர்கள் கடலில் பேரதிசயத்தைக் கண்டனர்.    ஒரே நேரத்தில் அருகருகே 6 இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்தது. ஹாலிவுட் படங்களில் வருவது போன்று இந்தக் காட்சி இருந்ததாக இதனைப் படம் பிடித்தவர்கள் தெரிவித்துள்ளனர்

திமுக கொடுத்த 'ஷாக்'! அதிர்ச்சியில் காங்கிரஸ்..!

 nakkeeran :  காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி இன்று காலை டெல்லியில் கூடியது. இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் சோனியா காந்தி தொடர வேண்டும் என காரிய கமிட்டி கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட பலர் வலியுறுத்தியுள்னர். இதனிடையே, அடுத்து நடைபெறக்கூடிய பீகார் மற்றும் தமிழ்நாடு தேர்தல் தொடர்பாக இன்று நடக்க உள்ள காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுப்பதால் ஆரம்ப கட்டமாக தி.மு.க.வை சேர்ந்த ஒரு குழுவுடன் சோனியாகாந்தி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆட்சியில் பங்கு வேண்டும் என தொடங்கிய சோனியா காந்தியிடம், 10 சீட்டுதான் உங்களுக்கு என தி.மு.க. குழு பேசிவிட்டு சென்றுள்ளது என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

சாமியாரை புரட்டி எடுத்த அமெரிக்க பெண்!.. திருவண்ணாமலையில்

 அத்துமீறல்: தி.மலையில் சாமியாரை புரட்டி எடுத்த அமெரிக்க பெண்!

 மின்னம்பலம் : ஆன்மீகத் தலமாகவும்,  சித்தர்கள் வாழும் இடமாகவும் திருவண்ணாமலை அறியப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயில் அமைந்துள்ளதால் இங்கு வெளிநாட்டுப் பக்தர்களும் வந்து செல்வர். ஆன்மீக பக்தி கொண்ட பலரும் இங்கு வந்து தங்கி தியானம் குறித்தும், சாதுக்கள் குறித்தும் ஆய்வு செய்வார்கள்.   இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் திருவண்ணாமலைக்கு வந்து, கிரிவலப்பாதையில் உள்ள அருணாச்சலா நகரில் கடந்த 5 மாதங்களாக அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.  வெளிநாடு செல்ல திட்டம்

இந்த பகுதியில் ஏராளமான சாமியார்களும் வசித்து  வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருமலை பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற சாமியாரும் வசித்து வந்துள்ளார். அமெரிக்கப் பெண் வசித்துவந்த வீட்டிற்குச் சென்று மணிகண்டன் அடிக்கடி அவரைப் பார்த்து வந்துள்ளார். அதோடு கடந்த ஒரு மாதமாக அப்பெண்ணின்  நடவடிக்கைகளை நோட்டமிட்டு வந்துள்ளார்.  இந்த நிலையில், அவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாடு செல்லும் கனவில் சாமியார் மிதந்துகொண்டு இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே நேற்று காலை அப்பெண் தங்கியிருந்த வீட்டுக்குச் சாமியார் மணிகண்டன், தங்க தாலி மற்றும் அரிவாளுடன் சென்றுள்ளார்.  அப்பெண்ணை அரிவாளைக் காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். 

காங்., கட்சிக்குள் பூகம்பம்: தலைவராக சோனியாவே தொடர முடிவு

 தினமலர் :  புதுடில்லி: டில்லியில் இன்று 7 மணி நேரம் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், இடைக்கால சோனியா நீடிப்பார் எனவும், அடுத்த 6 மாதத்தில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடிதம் கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வியடைந்ததை தொடர்ந்து, தலைவர் பதவியில் இருந்து ராகுல் பதவி விலகினார். இதனையடுத்து இடைக்கால தலைவராக சோனியா நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்று ஓராண்டை கடந்து விட்ட நிலையில், புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. இதனையடுத்து, கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் ஏற்கும் திறமையுள்ள தலைமை தேவை என ஒரு பிரிவினர் கடிதம் எழுதினர்

விலக தயார்.....இந்நிலையில், இன்று டில்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மூத்த நிர்வாகிகளின் கடிதம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்து சோனியா அனுப்பிய கடிதத்தை, காங்., மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் வாசித்தார். அதில், தலைவர் பதவியில் இருந்து விலக தயாராக உள்ளதாகவும், புதிய தலைவரை தேர்வு செய்யும்படியும் சோனியா குறிப்பிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூத்த தலைவர்கள் எழுதிய கடிதத்திற்கு மன்மோகன் சிங் மற்றும் ஏ.கே. அந்தோணி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  

காங்கிரஸ் கட்சியின் பதவியை துறந்தார் சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சோனியா காந்தி அறிவித்துள்ளார். 

மேலும் பதவியில் இருந்து விலகுவது தொடர்பாக, அவர் தனது இராஜினாமா கடிதத்தையும் கட்சியிடம் கையளித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைமை தொடர்பான விடயத்தில் கட்சிக்குள் இரு வேறு கருத்துகள் வலுவாக எழுந்துள்ளன.       அதாவது, நிலையான முழுநேரத் தலைமை தேவை என மறைமுகமாக சோனியா காந்தியின் தலைமைக்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதில் மற்றொரு தரப்பினர், சோனியா காந்தி அல்லது ராகுல் காந்தி தலைமையை ஏற்க வேண்டுமென காந்தி குடும்பத்துக்கு ஆதரவாக நிற்கின்றனர். மேலும், அடுத்தடுத்து தேர்தல் வரும் நிலையில், தலைமைப்பதவிப் பிரச்சினைக்கு உரிய தீர்மானத்தை எட்டாதமையினால் காங்கிரஸ் கட்சி பலமற்ற கட்சியாக காணப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக உள்ள சோனியா காந்தி, பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதை குறிப்பிடத்தக்கது.

"பா.ஜ.க.வுடன் காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு" -ராகுல்காந்தி குற்றச்சாட்டு?

CONGRESS PARTY MEETING RAHUL GANDHI SPEECHnakkheeran.in - nakkheeran :அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் இன்று (24/08/2020) காணொளி காட்சி மூலம் தொடங்கியது. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல்காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் எம்.பி.செல்லக்குமார் காணொளி மூலம் கலந்து கொண்டார். ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவாரா? என்ற எதிர்ப்பார்ப்பு கட்சியினரிடையே எழுந்துள்ள நிலையில், சோனியா காந்தியே தொடர வேண்டும் என கபில் சிபல், சசிதரூர், குலாம் நபி ஆசாத், பிருத்விராஜ் சவான், ஆனந்த் சர்மா உள்ளிட்ட 23 தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர். மேலும் நேரு குடும்பத்தை அல்லாத ஒருவர் தலைவராக நியமிக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினர் வலியுறுத்தினர். 

 இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்பது குறித்து கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றதாக தகவல் வெளியாகியிருந்தது.   

இரட்டைத் தலைநகர்! பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். பாகப்பிரிவினைத் திட்டம்! தமிழகத்தை குறி வைத்து

nakkheeran.in - இரா. இளையசெல்வன் :  தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக மதுரையை உருவாக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நிறைவேற்றி அதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சுக்கும் அனுப்பி வைத்துள்ளார் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்.இவரது தீர்மானத்திற்கு அரசியந்ல் கட்சிகள், சமுக அமைப்புகள், தொழிற் நிறுவனங்கள் என பல தரப்பிலிருந்தும் ஆதரவு குரல்கள் அதிகரித்தாலும், அமைச்சர் உதயக்குமாரின் தீர்மானத்தின் பின்னbjpணியில் மத்திய பா.ஜ.க. அரசின் மெகா ப்ளான் இருப்பதாக டெல்லியிலிருந்து தகவல்கள் கசிகின்றன.   தமிழகம், புதுவை, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மே மாதம் இரண்டாம் வாரத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான பணிகளில் வேகம் காட்டி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம். மேற்கண்ட மாநிலங்களில் இறுதி வாக்காளர் பட்டியலை ஜனவரியில் வெளியிட வேண்டும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு கடந்த வாரம் அறிவுறுத்தியுள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, கரோனா நெருக்கடிகள் சூழ்ந்துள்ள நிலையில் தேர்தலை நடத்துவது குறித்த கருத்துருக்களை அனுப்பி வைக்குமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டிருக்கிறார்.  

நீதி துறையில் 80 வீதமானோர் ஊழல்வாதிகள்.. நீதிபதி கர்ணன் உண்மையை கூறியதால் சிறை .. . இன்று பிரசாந்த் பூசனுக்கு ஓவர் ஜால்ரா

ஒரு தலித் நீதிபதி உண்மையை கூறினால் அவருக்கு பைத்தியம் அவருக்கு சிறை வாசம் . அசல் ஆர் எஸ் எஸ் பிரசாந்த் பூசனுக்கு தியாகி பட்டம் அடுத்த இந்திய தேச பிதா என்ற பில்டப் ..

கோயிலுக்குள் கொலை .. அர்ச்சகர் கோபிநாத் கைது .. கோயிலுக்குள் உடலை புதைத்தார் .. பண்ருட்டி

  Isai Inban : · பண்ருட்டி கோவிலுக்குள் கொலை!    பண்ருட்டி வேணு கோபாலசாமி கோவில் அர்ச்சகர் கோபி நாத் (வயது 52). இவர் ஜோதிட பலா பலன்களையும் கூறி வந்துள்ளார். இவர் வீட்டில் வேலை செய்த பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தால், அப்பெண்ணுடன் குடும்பம் நடத்திவந்த கண்ணதாசன் என்பவரைக் கொலை செய்து ோவிலிலே புதைத்த சம்பவம் அரங்கேறி யுள்ளது. பண்ருட்டி வி.ஆண்டிக்குப்பத்தை சேர்ந்த மஞ்சுளாவுக்கு (வயது 29) 3 குழந் தைகள் உள்ளனர். கணவன் மோகனைப் பிரிந்த மஞ்சுளா பணிக்கன்குப்பத்தை சேர்ந்த கண்ணதாசன்(34) என்பவருடன் கடந்த 5 ஆண்டுகளாக, குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஆனால், தன்வீட்டில் வேலை செய்யும் மஞ்சுளாவுடன் அர்ச் சகர் கோபிநாத் பழக்கத்தைத் தொடர்ந் துள்ளார். இருவரும் அடிக்கடி செல் பேசியில் பேசி வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அர்ச்சகர் கோபிநாத்,மஞ்சுளா இருவரையும் கண்ணதாசன் கண்டித் துள்ளார்.

தாழ்த்தப்பட்டவர்கள் என்று இந்து மதத்தால் சொல்லப்படுபவர்கள் யார்?

 Gomathy Bsr : தாழ்த்தப்பட்டவர்கள் என்று இந்து மதத்தால் சொல்லப்படுபவர்கள் யார்???? * நேரம் ஒதுக்கிப் படிக்கவும். மறைக்கப்பட்ட வரலாறுகள்:--- 

* சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் தமிழ் நாக அரச வம்சத்தினர் சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர்.... 

 நாக வம்சத்தினர் காலத்தில்தான் அரப்பா,மொகஞ்சதரோ,காளிபங்கன், போன்ற சிந்து சமவெளி ,நகரங்கள் உருவாக்கப்பட்டு..செழிப்பாக இருந்தது...
*அப்போது,நாடோடிகளாக,ஆடு,மாடுகளோடு வந்த ,வெளிறிய ஆரியர்கள் ..இங்கு நிரந்தரமாகக் குடியேற வேண்டும் என ஆசைப்பட்டனர்...

நீண்ட காலப் போரில் ஈடுபட்டனர்.நாக அரசர்களிடம் பணியில் அமர்ந்து சூழ்ச்சி செய்து,அரசர்களிடையே பிரிவினையை உருவாக்கினர்...
*
வெள்ளையர்கள் போல் பிரித்தாளும் கொள்கையைக் கடைப்பிடித்து...சில ராஜ்யங்களைக் கைப்பற்றினர்..   *
பிறகு வேதங்களைச் சொல்லி, அரசர்களிடம் , நாங்கள் கடவுள் பாஷை தெரிந்தவர்கள் என சொல்லி பிராமணர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது..

கலைஞர் பற்றி மலையாள தேசாபிமானியில் வெளியான கவர் ஸ்டோரி

 Bava Chelladurai : தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணாவுக்குப் பின் வேறெந்த சமூக, அரசியல் தலைவனின் இறுதி அஞ்சலிக்கும் இத்தனை லட்சம் மக்கள் திரண்டதில்லை என அரசியல் விமர்சர்கள் கலைஞரின் இறுதி அஞ்சலி நிகழ்வை மதிப்பிடுகிறார்கள். கிட்டதட்ட தமிழ்நாட்டின் அத்தனை கிராமங்களும், நகரங்களும் தங்கள் இயல்பை அப்படியே நிறுத்திவிட்டு சென்னையை நோக்கி திரும்பியது. ஒரு மகத்தான தலைவனால் மட்டுமே எந்த புற உந்துதல்களுமின்றி மக்களை இப்படி உந்தித் தள்ள முடியும். கலைஞர் கருணாநிதி நம் ஒவ்வொருவரின் மதிப்பீடுகளையும் மீறி உலகம் முழுக்க வியாபித்திருக்கும் மக்கள் மனதில் உறைந்திருந்தார். மொழியாக்கம் செய்தவருக்கு நன்றிகள் பல! மலையாள இதழ் தேசாபிமாணியில் வெளிவந்த கவர் ஸ்டோரி.

நீதிக்கட்சி, திராவிடக்கழகம், திராவிடமுன்னேற்றக்கழகம் என ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பெயரில் அடையாளப்படுத்தப் பட்டாலும், சமூக நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கான நியாயம் கேட்கும் அந்த இயக்கத்தின் குரல் காலத்துக்கு காலம் உரத்தும், தேய்ந்தும் இப்போதும் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றன.     .     கடந்த நூறாண்டுகளை சமமாக நாம் பிரித்துக் கொண்டால் முன் பாதிக்கான போராட்டத்தை பெரியாரும், அண்ணாவும் முன்னெடுக்கிறார்கள். அவர்களிடமிருந்து கொள்கையையும் போராடும் குணத்தையும் அப்படியே சுவீகரித்துக் கொண்ட கருணாநிதி அடுத்த ஐம்பதாண்டுகளை தன் தலைமையின் கீழ் முன்னெடுத்தார்.

சுனிதா.. பழங்குடி மாணவி NEET தேர்வுக்கு ஆன்லைனில்..

  இரா. இராஜகோபாலன் : இது சுனிதா.. மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் , கனக்வாலியை சேர்ந்த மலைவாழ் பழங்குடி மாணவி. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 98% எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது , NEET தேர்வு க்கு படித்து வருகிறார்... நல்லுள்ளங்கள் உதவியுடன் online coaching classல் இடம் கிடைத்துள்ளது.. ஆனால் தான் குடியிருக்கும் பகுதியில் கிராமத்தில் எங்கேயும் இன்டர்நெட் கிடைக்காது அதனால் அவளின் சகோதரர்கள் ஒரு மலை உச்சியில் இந்த சிறிய கொட்டகை போட்டு தந்துள்ளார்கள்... இங்கே கொஞ்சம் கொஞ்சமாக இன்டர்நெட் கிடைக்கிறதாம் ‌‌.காலை ஏழு மணிக்கு இங்கே வந்து மாலை ஏழு மணி வரை இங்கேயே தங்கி படித்து வருகிறாளாம் சுனிதா .. Such an inspiration..all the very best Sunita.. இறைவன் அருள் உன் துணை இருக்கும்.

ஆனால் தமிழகம் முழுவதும் ‌.. ஏன் இந்தியா முழுவதும்.... இப்படி படிப்பில் தாகம் கொண்ட சுனிதா க்கள் ஆங்காங்கே இருப்பார்கள்.... மருத்துவர் ஆக‌.. கலெக்டர் ஆக ஆவல் கொண்டு...   பலருக்கு ஆன்லைன் க்ளாஸ் க்கு மொபைல் இல்லை.      பலருக்கு இப்படி நெட் இருக்கும் இடத்தில் கொட்டகை போட்டு தர சொந்தங்கள் இல்லை.         பலருக்கு இப்படி ஆன்லைன் கோச்சிங் க்ளாஸ் நடக்கும் என கூட தெரியாது..       ஆன்லைன் விடுங்கள்,..

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

இன்பநிதி! – அரும்பிய மீசையுடன் அப்பா உதயநிதியுடன் இணைந்து.....

tamil.indianexpress.com:   உதயநிதிக்கு இவ்ளோ பெரிய பையனா?   

திமுக இளைஞரணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் மக்கள் இன்பநிதி இவ்வளவு பெரிய பையனாக வளர்ந்துவிட்டாரா என்று வாயடைத்து போயிருக்கின்றனர் உடன்பிறப்புகள்.            அவ்வப்போது மட்டும் இன்பநிதி குறித்த புகைப்படம் சமூக தளங்களில் வெளிவந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் படத்தை பார்க்கும் போது, உதயநிதியின் தம்பி போலயே தோற்றமளிக்கிறார்.        அரும்பிய மீசையுடன் அப்பா உதயநிதியுடன் இணைந்து போஸ் கொடுத்திருக்கிறார் .       இன்பநிதி. இவ்ளோ பெரிய பையனா? என்று வியக்கும் அதே வேளையில், அரசியல் ரீதியாகவும் சில கருத்துக்கள் பதிவிடப்படுவதை காணமுடிகிறது.          திமுகவில் குடும்ப அரசியல் நடப்பதாக எதிர்க்கட்சிகள் காலங்காலமாக குற்றம் சாட்டி வருவது தெரிந்த ஒன்றே. 

சினிமா படப்பிடிப்பிற்கு அனுமதி: கட்டுப்பாடுகள் கடைபிடிக்க வேண்டும் என்கிறது மத்திய அரசு

மாலைமலர் : வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்தால் சினிமா ஷூட்டிங் நடத்தலாம் என மத்திய அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார். சினிமா படப்பிடிப்பிற்கு அனுமதி: ஆனால் இவற்றையெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்கிறது மத்திய அரசு கொரேனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் இருந்து தற்போது வரை சினமா ஷூட்டிங் நடத்தப்படவில்லை. இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.    
மத்திய அரசுக்கும், அந்தந்த மாநில அரசுகளுக்கும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலதரப்பில் இருந்தும் ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.   
இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் ஜவடேகர், மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்தால் சினிமா ஷூட்டிங் நடத்தப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை தடுக்க களிம்பு - அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

மாலைமலர் : வாஷிங்டன்: உலக நாடுகளையெல்லாம் உலுக்கி வருகிற கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் அமெரிக்க மருந்து நிறுவனம் ஒன்று, கொரோனாவை தடுக்கும் களிம்பு ஒன்றை உருவாக்கி உள்ளது. இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்பேரில் இந்த களிம்பு பரிசோதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பரிசோதனைக்கூட அறிக்கை, இந்த களிம்பை (மூக்கில்) தடவிக்கொண்ட 30 வினாடிகளுக்கு பிறகு எந்த வைரஸ் தொற்றும் கண்டறியப்படவில்லை என கூறுகிறது. இந்த களிம்பு ‘டி3எக்ஸ்’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.           இதுபற்றி அட்வான்ஸ்டு பெனிட்ரேசன் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான டாக்டர் பிரையன் ஹூபர் கூறும்போது, “இந்த களிம்பு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வைரஸ் பரவ காரணமாக உள்ள மூக்கு வழி பரவல் வாய்ப்பை குறைக்கும். இது ஒரு பெரிய விஷயம்.இது .     கொரோனாவுக்கு எதிரான முதல் வரிசை தற்காப்பாக இருக்கலாம். இது சக்தி வாய்ந்த மற்றும் பயனுள்ள தடுப்பு மருந்து” என தெரிவித்தார்.

மயில்களுக்கு உணவளிக்கும் பிரதமர் மோடி!

 
   நக்கீரன் : மயில்களுக்கு உணவளிக்கும் வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்யும் நேரத்தில் தோட்டத்தில் நடமாடும் மயில்களுக்கு பிரதமர் மோடி உணவளிக்கும் ஒரு நிமிடம் 47 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில் வீட்டிலிருந்து அலுவலகம் வரை பிரதமர் மோடி நடை பயிற்சி செய்வதும் இடம் பெற்று இருக்கிறது.

 

ஆயிரக்கணக்கான நிர்வாண வீடியோக்கள் நூற்றுகணக்கானோர் பாலியல் வன்முறை .. பெண்ணின் அதிரடி குற்றசாட்ட்டுக்கள் .. தெலுங்கான பிரபலங்கள் உட்பட? வீடியோ

tamil.oneindia.com - VelmuruganP : ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் மகளின் உதவியாளர் உள்பட 143 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேல் நிர்வாணமாக வீடியோக்கள் எடுத்துள்ளனர். அவற்றை ஆன்லைனில் வெளியிட்டுள்ளார்கள் என இளம் பெண் ஒருவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தெலங்கானா மாநில முதல்வர் மகளின் முன்னாள் உதவியாளர், வக்கீல்கள், திரை உலகினர் உட்பட பலர் தன்னை கடந்த 10 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்து விட்டதாக, தெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த சரிதா (25) என்பவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். ஹைதராபாத்தின் பச்சகுட்டாவைச் சேர்ந்த சரிதா தனது மனுவில் 'கடந்த 2009ம் ஆண்டு கொண்டாரெட்டி கிராமத்தை ரமேஷ் என்பவருக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு கணவரின் பெற்றோர் மற்றும் சகோதரர், சகோதரி ஆகியோர் 9 மாதங்களாக தொடர்ந்து சித்ரவதை செய்தார்கள் 

கல்லூரியிலும் பலாத்காரம்என்னுடைய கணவரின் குடும்பத்தை சேர்ந்த ஆண்களே பலமுறை என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்கள். இதனால், கடந்த 2010ம் ஆண்டு என் கணவர் என்னை விவகாரத்து செய்தார். இதனால் அதன்பிறகு படிப்பதற்காக கல்லூரிக்கு சென்றேன். அப்போது, எனக்கு சிலர் அறிமுகம் ஆனார்கள். அவர்கள் என்னுடைய வாழ்க்கையை முழுவதுமாக சீரழித்துவிட்டார்கள்.

ஒங்க பொதுவுடமை நடிப்புல தீய வைக்க ! வேண்டாம் மின்னணு வாக்குப்பதிவு !

Parthiban Pakirisamy : ஒங்க பொதுவுடமை நடிப்புல தீய வைக்க ! தெரிந்தே சூத்திர மக்களுக்கு எதிராக நன்றி மறந்து சுயநலத்திற்காக காவிகளின் பின்னால் போகிறவனை சங்கி என்று முழங்கும் நாம்; மின்னணு வாக்கு தவறு அதனால் நாம் இழந்தது ஏராளம் என்று தெரிந்திருந்தும் அதுபற்றி ஒரேயொரு வார்த்தை மருதுக்காக கூட பேசாமல், வெறும் கடந்த கால பெருமைகளையும் வெட்டி கதைகளையும் பேசும் நாம்தான், உண்மையான மற்றும் சுயமரியாதை எனும் பெயரில் உலவும் தன்மானமற்ற படித்த அதிபயங்கர ஆபத்தான மேட்டுக்குடி சங்கிகள் என்க. காவிகளின் பின்னால் ஓடுபவனுக்கு இத்தனை சிந்தனை அறிவு இல்லை. ஒருநாள் இல்லையொருநாள் அவன் மாற வாய்ப்புள்ளது; ஆனால் தெரிந்தே நடிக்கும் நாம்தான் அதிபயங்கர ஆபத்தான சமூக விலங்குகள். வருங்காலத்தில் இந்த நாட்டில் ஏதேனும் கேடு விலையுமானால் அது நம்மால் மட்டுமே என்க!

மின்னணு வாக்கிற்கு எதிராக குரல்கொடுத்தால் செத்தா போயிடுவீங்க? பொழுதனிக்கும் பெண்களை வருணிக்கும் கதைகளை எழுத நமக்கு நேரமிருக்கிறது, சினிமா கூத்தாடிகளை பாராட்ட நேரம் இருக்கிறது, வெட்டி கதை பேச நேரம் இருக்கிறது, எங்க ஊட்டுல கறி சோறு மீன்கொழம்பு ன்னு எழுத நேரமிருக்கிறது...... தக்காளி, மின்னணு வாக்கு தவறுன்னு ரெண்டு வார்த்தை பதிவு போட நமக்கு நேரமில்லை....!

தாவூத் இப்ராஹிம் கராச்சியில் உள்ளார்': முகவரியை வெளியிட்ட பாகிஸ்தான்

BBC : மும்பை   BBC  :   1993ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல வழக்குகளில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என்று அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டுள்ளது. 

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள கிளிஃப்டன் பகுதியில் சௌதி மசூதிக்கு அருகே இருக்கும் 'ஒயிட் ஹவுஸ், எனும் வீட்டில் அவர் இருப்பதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.கராச்சி நகரில் உள்ள ஹவுசிங் அத்தாரிட்டி பகுதியில் இருக்கும் முப்பதாவது தெருவில் 37வது எண் வீடு மற்றும் கராச்சியில் உள்ள நூர்பாத் பகுதியிலுள்ள மலைப்பகுதியில் இருக்கும் ஒரு பங்களாவும் தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமானவை என்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான பொருளாதார தடை நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக அந்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள 88 தீவிரவாத அமைப்புகள் குறித்த விவரங்களை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது. அதில் மேற்கண்ட தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

விடாப்பிடியாக இந்தியில் பேச்சு.. தமிழ் மருத்துவர்களை மிரட்டிய ராஜேஷ் கோட்சே.. நடந்தது என்ன?

tamil.oneindia.com - VelmuruganP : டெல்லி: ஆயுஷ் அமைச்சக கூட்டத்தில்

விடாப்பிடியாக இந்தியில் பேசியதுடன், இந்தி தெரியாத அதிகாரிகளை வெளியேற சொன்ன மத்திய ஆயுஷ் அதிகாரி ராஜேஷ் கோட்சே குறித்தும், அங்கு என்ன நடந்தது என்பது குறித்த பின்னணியையும்  இப்போது பார்ப்போம்..           ஆயுஷ் கூட்டம்...இந்தி தெரியாத மருத்துவர்கள்...கலந்து கொள்ள வேண்டாம்...செயலாளர்  அடாவடி !!

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் யோகாவை கொண்டு சேர்க்கும் வகையில் யோகா படித்த சுமார் 1.25லட்சம் பேரை நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.முதற்கட்டமாக 350 நியூரோபதி மற்றும் இயற்கை மருத்துவர்களை தேர்வு செய்து அவர்களின் பட்டியல் மத்திய ஆயுஷ் அமைச்கத்தற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து மாவட்டத்திற்கு ஒரு மருத்துவர் என 38 யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களின் பெயர் பட்டியல் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.