புதன், 29 ஜூலை, 2020

தமிழக மகிளா காங்கிரஸ் தலைவியாக சுதா நியமனம்:

தினகரன் :  சென்னை: தமிழக மகிளா காங்கிரஸ் தலைவியாக வக்கீல் சுதாவை நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக ஜான்சி ராணி நியமிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அந்த இடத்திற்கு புதிய நபர் ஒருவரை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டது. அதற்கான நடைமுறைகளை தொடங்கியதால் மகிளா காங்கிரசில் உள்ள முக்கிய நிர்வாகிகளிடையே தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி எழுந்தது.
இந்த போட்டியில் ஜான்சி ராணி மீண்டும் வாய்ப்பு கேட்டு மேலிடத்தை அணுகினார். அதேபோன்று வக்கீல் சுதா, ஹசீனா சையத், சுமதி அன்பரசு, மானசா, கோவை கவிதா, மைதிலி தேவி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

பள்ளி மாணவி பாலியல் புகார்- முன்னாள் அதிமுக எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் தலைமறைவு

பள்ளி மாணவி பாலியல் புகார்- முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் தலைமறைவு  வெப்துனியா :  பள்ளி மாணவி கொடுத்த பாலியல் புகாரை தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி  வருகின்றனர். 
முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன்நாகர்கோவில்: நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க 10-ம் வகுப்பு மாணவி கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் சென்று விட்டார். இதுகுறித்து மாணவியின் தாயார் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மாணவி மற்றும் அவரை அழைத்துச் சென்ற வாலிபர் ஆகிய இருவரையும் போலீசார் மீட்டனர். அதன் பிறகு மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, பல திடுக்கிடும் தகவல் வெளியானது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு பலர் தனக்கு பாலியல் தொல்லை செய்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். எனவே இது குறித்து குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன்


புதுவை என் ஆர் காங்கிரஸ் பொதுசெயலாளர் வி பாலன் காலமானார்

தூண் சரிந்தது: கண்கலங்கிய ரங்கசாமி மின்னம்பலம் : கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என்.ஆர்.காங்கிரஸ் பொதுச் செயலாளர் வி பாலன், இன்று (ஜூலை 28) மரணம் அடைந்தார். இதனால் கட்சியின் நிறுவனர் ரங்கசாமி கலங்கிப் போயிருக்கிறார்.
முன்னாள் முதல்வர் ரங்கசாமி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைத் துவக்க முக்கிய காரணமாகவிருந்தவர், கட்சியை வழி நடத்தியவர், கூட்டணி விஷயமாக மாற்றுக்கட்சியின் தலைவர்களைச் சந்திப்பவர் என ஒட்டு மொத்த வேலைகளையும் கவனித்து வந்தவர் வி.பாலன்தான். அதேநேரம், ரங்கசாமியை தொண்டர்கள், நிர்வாகிகள் என யாரும் நெருங்காத அளவுக்கு வளையமாக இருந்தவரும் பாலன்தான் என்றும் பரவலாகப் பேசப்பட்டுவந்தது. இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியுடன் அறிமுகம் மிக்க பாலன் தேசிய அரசியல் கட்சித் தலைவர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தவர்.

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 வருட சிறை தண்டனை

சதீஷ் பார்த்திபன் - பிபிசி தமிழுக்காக, மலேசியாவிலிருந்து : மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 வருட சிறைதண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.முன்னதாக மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மீதான பண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருந்தது.
நஜிப் மீது அரசுத்தரப்பு நம்பிக்கை மோசடி, பணமோசடி, அதிகார அத்துமீறல் உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இது தொடர்பான நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
எம்டிபி (1MDB) எனப்படும் மலேசிய மேம்பாட்டு நிதியத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றாக இருந்த எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் நிதியில் இருந்து சுமார் 42 மில்லியன் மலேசிய ரிங்கிட் மதிப்பிலான தொகையை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்பதே நஜிப் துன் ரசாக் மீதான அடிப்படைக் குற்றச்சாட்டு ஆகும்.
நஜிப் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இத்தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.இந்த தீர்ப்பின் காரணமாக மலேசிய அரசியல் களத்தில் அதிரடித் திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

பிரகாஷ் போர்செழியன் காலமானார் .. திமுக களப்பணியாளர் ... கொரோனாவால் தொடரும் இழப்புக்கள்

Suriya Krishnamoorthy : நேற்று இரவு மூன்று முறை அழைத்திருந்தார், கவனிக்கவில்லை. நேரமாகிவிட்டது காலையில் திரும்ப அழைக்கலாம் என்று நினைத்தேன்.
ஏதோ நினைப்பில் இரவே அழைத்தேன். ஓபிசி இடஒதுக்கீடு குறித்து சில தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
பேசிவிட்டேன் என்று மகிழ்வதா, கடைசியாக பேசியிருக்கிறேனே என்று அழுவதா என்று தெரியவில்லை.
இன்றைக்கு காலையில் அண்ணன் பிரகாஷ் இல்லை என்று செய்தி வந்ததிலிருந்து, எதுவுமே ஒடவில்லை.
தென் தமிழகத்தின் கீழ்மத்திய தர வர்க்கத்திலிருந்து புறப்பட்டு, படிப்பின் துணை கொண்டு மட்டுமே சொந்த வாழ்வில் உயரங்களை தொட்டவர். 80களின் இலட்சியவாத தலைமுறை, கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி எப்படி மேலெழுந்தது வந்தது என்பதை அவர் வாழ்வின் கதைகளை கொண்டே அனுமானித்து வைத்திருந்தேன்.
அரசு வேலைகளில் நம்மவர்கள் அமர வேண்டிய அவசியத்தை அவர் பேசாத நாளில்லை.

விஜயலட்சுமியை மறந்த ME TOO பெண்கள் ..

 A Sivakumar : Metoo என்பது. . - ஆண்களால் பாதிக்கப்பட்ட   பெண்கள் குரல் எழுப்புவதற்கும், தவறு செய்த ஆண்களை பொதுவில் குற்றம் சொல்லி அப்படியான ஆண்களின் உண்மை முகத்தை உலகிற்கு உணர்த்துவதற்கும், - பாதிக்கப்பட்டு உள்ளுக்குளேயே குமுறிக்கொண்டிருக்கும் பெண்கள் தைரியமாக வெளியே வந்து சொல்வதற்கும், அது ஒரு ஆரம்ப முயற்சி என்று தான் சொல்லப்பட்டது
கடைசியில் அது சாட்டையடி பதிவு தோழி கூட்டத்திற்கு பயன்பட்ட அளவுக்கு கூட பெண்களுக்கு பயன்படவில்லை என்பது தான் சோகம். பாருங்களேன்...
அந்த நேரத்தில் யார் யார் மீதோ யார் யாரோ குற்றம் சொன்னாலும், சுமார் ஒரு வருடம் கழிந்த நிலையில் அதில் சிக்கிய வைரமுத்துவை அடிப்பதற்கு இன்றும் தயாராக இருப்பவர்கள் எவருமே நேற்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் இருக்கும் நடிகை விஜயலட்சுமி குறித்து மறந்தும் வாயை திறக்க மறுக்கிறார்கள்.
வைரமுத்து - சின்மயி - சீமான் - விஜயலட்சுமி நால்வரில் யார் பக்கம் உண்மை இருக்கிறது என்று நமக்கு தெரியாது.

இணைந்த வடக்கு கிழக்கு மாகாண வரை படங்களை ராஜீவ் காந்திக்கு கொடுத்தோம் ... இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு 12

  திரு. அ . அமிர்தலிங்கம் : இலங்கை அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை !



திம்பு பேச்சு வார்த்தையில்போராளி இயக்கங்கள் எல்லாம் கலந்துகொண்டன. ஆனால் 1986 ஜூலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள அவை மறுத்துவிட்டன. ஆனாலும் தமிழர் விடுதலை கூட்டணி கலந்து கொள்வதை அவை எதிர்க்கவில்லை என கூறினர்
சிதம்பரம் திட்டத்தில் பல குறைபாடுகள் இருப்பினும் அதை ஒரு ஆரம்ப பத்திரமாகவே அதை கைக்கொண்டோம். அதே நேரத்தில் நாம் 1985 . முன் வைத்த திட்டத்தையும் எடுத்து கொண்டு  அத்திட்டத்தை அடையும் நோக்கத்தோடு நாம் முயற்சி செய்தோம். இந்தியாவில் ஒரு மாநிலத்துக்கு உரிய அதிகாரத்தை பூரணமாக பெறுவதற்கான அரசியல் அமைப்பு திருத்த சட்ட மூலம்   மாகாண சபை  சட்ட மூலம்  ஆகிய இரண்டையும் பரிசோதனை செய்தோம் .
விரிவான விவாதத்தின் பலனாக ஒன்றை திருத்தி ஒன்றாக  ஏழு சட்ட வரைவுகள் தயாரிக்க பட்டன.  ஜூலை ஆகஸ்டு இரண்டு மாதங்களிலும் இருபது நாட்களுக்கு மேலாக பேசினோம்.
முதல் சுற்று பேச்சு முடிந்தவுடன் விடுதலை புலிகள் உட்பட தமிழகத்தில் பலருடனும் டெல்லையில் அமைச்சர்கள்  சிவசங்கர் , சிதம்பரம்  ஆகியோர் மற்றும் திரு. ஜி பார்த்தசாரதி  திரு வெங்கடேஸ்வரன் சட்ட நிபுணர் பாலகிருஷ்ணன்  ஆகியோரிடம் கலந்து ஆலோசித்தோம்.
இரண்டாவது சுற்று பேச்சு  ஆகஸ்ட் 29 ஆம் திகதி முடிவடைந்தது..
அன்று முக்கியமாக  வடக்கு கிழக்கு இணைப்பு பற்றியே விவாதித்தோம் .
இணைப்பு உட்பட சில முக்கிய விடயங்களில் உடன்பாடு எதுவும்  ஏற்படாத  நிலையில் பேச்சு வார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது.
மூன்றாவது சுற்று பேச்சு வார்த்தைக்கு போராளிகளும் கலந்து கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தினோம்.

தியேட்டர்கள் திறப்பு: பாமரர்கள் முதல் பங்குச் சந்தை வரை!

 மின்னம்பலம் :  கொரோனா ஊரடங்கு உத்தரவால் சினிமா தியேட்டர்கள் மார்ச் 22 ஆம் தேதி முதல் மூடப்பட்டிருக்கின்றன. முழுதாக நான்கு மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் வரும் ஆகஸ்டு 1 முதலான அடுத்த ஊரடங்குத் தளர்விலாவது தியேட்டர்கள் திறக்கப்படுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
என்னதான் அமேசான், ஓடிடி என்று செல்போனிலும் கம்ப்யூட்டரிலும் சினிமா பார்த்தாலும் குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று பார்த்து வரும் அனுபவத்தை இந்தத் தொழில் நுட்பங்கள் ஈடுகட்டப் போவதில்லை.இந்த நிலையில் மக்கள் மத்தியில் பொழுதுபோக்கு என்றால் சினிமா தியேட்டர்கள் உரிமையாளர்களுக்கு தியேட்டர்கள் திறப்பு என்பது முக்கியமான வர்த்தகப் பிரச்சினையாகிவிட்டது. நான்கு மாதங்களாக தியேட்டர் ஊழியர்களுக்கு சம்பளம், பராமரிப்பு செலவுகளை செய்ய வேண்டும். ஆனால் தியேட்டரை திறக்க இயலாத நிலையில் பற்பல தியேட்டர்களை வைத்திருக்கும் பெரு நிறுவனங்களே திணறி வருகின்றனர். பங்குச் சந்தை வரைக்கும் இவர்களது சரிவு எதிரொலிக்கிறது.

செவ்வாய், 28 ஜூலை, 2020

அப்துல் கலாம் ... ஒரு போலி புனித பிம்பம்

Fazil Freeman Ali
: இந்தியாவில் ஒரு முஸ்லீம் எப்படி இருக்கவேண்டும் என இந்திய இறையாண்மை வகுத்த வரையறைக்கு சரியான உதாரணம் அப்துல் கலாம்..
ஒரு அரசாங்க அலுவலகத்தில் ஒரு சராசரியான மத்தியவர்க்க குமாஸ்தா வின் மனநிலைதான் கலாமுடையதும். இந்திய இறையாண்மை கோடிட்ட இடத்தில் மறு பேச்சில்லாமல் கையெழுத்திட்டு ஊதியம் வாங்கியவர்.
கிண்டி குதிரை ரேஸ் கிளப் காலரியில் உட்கார்ந்துகொண்டு 'கமான், கமான்' என கத்துவார்கள். இதைத்தான் மாணவர்களிடம் இறுதிவரையில் சொல்லிக்கொண்டு சுயமுன்னேற்ற அறிவுரைகளை அள்ளி வீசினார்.வாழ்நாள் முழுவதும் மானுட குலத்திற்கு எதிரான தொழிற்நுட்பங்களை கண் மூடித்தனமாக ஆதரித்தவர். ஏவுகணை கள், அணு உலை போன்ற ஆபத்தான தொழிற்நுட்பங்களை உச்சி முகர்ந்து கொண்டாடி இந்தியாவை ''ஆயுத‌ வல்லரசு'' பாதையில் செலுத்தியவர்.ஆக அவர் வாழ்நாள் முழுவதும் செய்தது ஆயுத பூஜை. இந்த அசட்டு ஆயுத பூசைக்கு விசுவாசமாக இருந்தார். இந்த விசுவாசத்திற்கு சன்மானமாக அதிபர் பதவியும் வந்தது. இன்னும் இறையாண் மைக்கு நெருக்கமாகவும், பல நேரங்க ளில் பூசையோடு, மவுன விரதத்தை கடைபிடித்தார்.  ..இந்தியாவின் ஜனாதிபதியாக 2002 முதல் 2007 வரை பதவி வகித்தார். கொந்தளிப்பான காலக்கட்டம். இந்துத்துவா எழுச்சிப்பெற்ற நேரம்...

விஜயலட்சுமி : ஏன் எல்லோரும் சீமானை காப்பாற்றி கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை .. வீடியோ

Actress Vijayaludchumi : I want to know . Whe they are saving Seemaan?

நடிகை வனிதா மீது 3 பிரிவுகளில் ( பழிவாங்கும் வழக்குகள்) வழக்குப் பதிவு!

வெப்துனியா : நடிகை வனிதா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கரோனா காலத்தில் தடையை மீறி நிகழ்ச்சி நடத்திய புகாரில் நடிகை வனிதா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐயப்பன்தாங்கல் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை வனிதா அனுமதியின்றி நிகழ்ச்சி நடந்தியாக அந்தக் குடியிருப்பின் பொதுச் செயலாளர் நிஷா கோட்டா என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் 3 பிரிவுகளில் நடிகை வனிதா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முத்தையா முரளிதரன் மகிந்தா கட்சியில் தேர்தல் பிரசாரம் வீடியோ


இலங்கைநெட் : முரளீதரனுக்கு எதிராகக் குற்றஞ்சுமத்துகிறார் சம்பிக்க ரணவக்க!
முத்தையா முரளீதரன் பொதுஜன பெரமுனவின் அரசியல் மேடையில் ஏறியிருப்பது தனது சுயலாபத்திற்காகவே அதாவது கிரிக்கட்டுக்காக அல்ல வியாபார நோக்கத்திற்காவே என குற்றஞ்சாட்டுகிறார் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க. டோல் நிறுவனத்தின் இந்நாட்டு வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வது முத்தையா முரளீதரனும் அவரது சகோதரனுமே.
இலங்கை மக்களின் காணிகள் சிலவற்றையும் வௌிநாட்டுக் கம்பனிகளுக்கு வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் தற்போது கண்ணுங்கருத்துமாக இருந்துவருகின்றது எனவும் அவர் மக்கள் கூட்டமொன்றின்போது தெரிவித்தார். By Kalaimahan

அமெரிக்கா தடுப்பூசி பரிசோதனை - 30 ஆயிரம் தன்னார்வலர்கள்.. வீடியோ


மாலைமலர் : கொரோனாவுக்கு எதிராக அமெரிக்கா உருவாக்கிய தடுப்பூசி இறுதிக்கட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. நேற்று தொடங்கிய இந்த பரிசோதனையில் 30 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
அமெரிக்கா உருவாக்கிய தடுப்பூசி இறுதிக்கட்ட பரிசோதனை - 30 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்பு கொரோனா வைரஸ் பரிசோதனை வாஷிங்டன்: சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் சுமார் 8 மாதங்களாகியும் எந்தவித மந்தமும் இல்லாமல் வேகமாக உலக நாடுகளை ஆக்கிரமித்து வருகிறது.
இதில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியும், ஆயிரக்கணக்கானோர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியும் வருகின்றனர். எனவே இந்த ஆட்கொல்லி வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசியை உருவாக்கும் பணிகளில் அனைத்து நாடுகளும் இறங்கி உள்ளன. இதில் பல நாடுகள் தொடக்ககட்ட வெற்றியை ஈட்டியுள்ளன. இதனால் இந்த தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளன.

நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன்.. கோடிக்கணக்கில் நிலம் வாங்கி ஏமாந்துள்ளனர் ...


கோடிக்கணக்கில் நிலம் வாங்கி ஏமாந்த நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன்? மாலைமலர் : நடிகைகள் நயன்தாராவும், ரம்யா கிருஷ்ணனும், கோடிக்கணக்கில் நிலம் வாங்கி ஏமாந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னணி நில வணிக நிறுவனம் ஒன்று தெலுங்கானா மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான ஏரி நீர் ஆதாரம் கொண்ட புறம்போக்கு நிலத்தை நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் சச்சின் மனைவி அஞ்சலி டெண்டுல்கர் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது. விவசாயிகளிடமிருந்த புறம்போக்கு நிலங்களை ஏக்கர் ஒன்றுக்கு 5 லட்ச ரூபாய்க்கு மட்டுமே வாங்கி, அதனை ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு பிரபலங்களிடம் விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடிகை நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், அஞ்சலி டெண்டுல்கர் உள்ளிட்டோர் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏக்கர் கணக்கில் இந்த நிலத்தை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திரா ரம்யா 4 பேரை திருமணம் செய்து லட்சக்கணக்கில் பணம் மோசடி


மாலைமலர் : வெவ்வேறு பெயர்களில் மூன்று ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருப்பதி: ஆந்திரப் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சநேயலு. இவர் டென்மார்க் நாட்டில் சாப்ட்வேர் என்ஜினீயராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், திருமண தகவல் மேட்ரிமோனி இணைய
தளத்தின் வாயிலாகத் திருப்பதியைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சொப்னா எனும் பெண்ணைச் சந்தித்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்துகொண்டார்திருமணத்துக்குப் பிறகு ஆஞ்சநேயலுவும் சொப்னாவும் ஐதராபாத்தில் மூன்று மாதங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். விடுமுறை முடிந்ததும், சொப்னாவை, ஆஞ்சநேயலு டென்மார்க்கிற்கு அழைத்துள்ளார். ஆனால் சொப்னாவோ, எனக்கு வேலை தான் முக்கியம் என்று கூறி, டென்மார்க் செல்ல மறுத்து, ஹைதராபாத்திலே தங்கியுள்ளார்.

ஓபிசி இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு தாக்கல் !

மின்னம்பலம் :ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழக அரசு, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
இந்த வழக்குகளில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஓபிசி வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை மறுக்க முடியாது எனவும், இதுதொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்றும் தீர்ப்பளித்தது.இதுதொடர்பாக குழு அமைத்து 3 மாதத்தில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு வரவேற்பு தெரிவித்த தமிழக அரசியல் கட்சிகள், தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செல்லக்கூடாது என வலியுறுத்தினர். இந்த நிலையில் ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் இன்று (ஜூலை 28) கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடிகை விஜயலட்சுமி மருத்துவ மனையில் இருந்து வெளியேற்ற பட்டார் .. பின்னணியில் சீமான்?

  மின்னம்பலம் : சிகிச்சை கூட முடியாமல் தன்னை மருத்துவ மனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்துவிட்டதாக நடிகை விஜயலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து குற்றம்சாட்டி, சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் ஜூலை 26 ஆம் தேதி திருவான்மியூரில் உள்ள தனது இல்லத்தில் உயர் ரத்த அழுத்த மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். முன்னதாக தனது முகநூலில் வீடியோ வெளியிட்ட அவர், சீமானும் அவரது கட்சியினரும் கொடுத்த அழுத்தம் காரணமாக நான் இந்த முடிவை எடுக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
காவல் துறையினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எழும்பூர் நீதிமன்ற குற்றவியல் நடுவர் வெங்கடேசன், விஜயலட்சுமியிடம் நேரில் சென்று ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினார்.

பா.ஜ.க முருகனின் பச்ச துரோகப் பேட்டி தாழ்த்தப்பட்ட மக்களே எச்சரிக்கை!

Thangaraj Gandhi : · பன்றிகளுக்கு சாக்கடை சொர்க்கமே! மலமள்ளும் சமூகத்தில் பிறந்த எல்.முருகன் சொல்கிறார் #வர்ணாசிரம் சமூகநீதியாம். அதைவிட அது அறிவியலாம்..! நாசாவுக்கு தெரியுமா? எங்க அய்யா அதியமான் சொல்வார். "சாதி அமைப்பினாலும் தலைவிதி முன்ஜென்ம பாவம் போன்ற இந்து மதத்தின் மூடநம்பிக்கையால் தான் மலமள்ளும் தொழிலில் அவர்களை அமிழ்த்து வைத்துள்ளது"
Manjai Vasanthan :  பா.ஜ.க தலைவர் முருகனின்
பச்ச துரோகப் பேட்டி
தாழ்த்தப்பட்ட மக்களே எச்சரிக்கை!
தாழ்த்தப்படடோருக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை  இந்துத்துவா அமைப்பினர் அக்காலத்திலிருந்து இக்காலம் வரைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.தாழ்த்தப்பட்டவர்களை இந்துக்களாக ஏற்பதில்லை, சகமனிதர்களாகவும் ஏற்பதில்லை.இன்றைக்குக் குடியரசுத் தலைவராக இருக்கும் தாழ்த்தப்பட்டவரான ராம்நாத் கோவிந்தின் நிலையும் அதுவே!
ஆனால், இவற்றையெல்லாம் அறவே மறைத்துவிட்டு, அண்ணல் அம்பேத்காரின் புகழ்பரப்ப பி.ஜே.பி அரசு என்னென்ன செய்துள்ளது என்று பட்டியலிட்டு தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை ஏமாற்றுகிறார் முருகன்.
இவர்கூறும் அம்பேத்கார் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களை இந்துத்வாதிகள் எப்படி கேவலப்படுத்தி அடக்கி, ஒடுக்கி, நசுக்கி,ஒதுக்கி,இழிவுப்படுத்துகின்றனர் என்பதை கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டுள்ளார்.

சீனாவிடம் கடனில் சிக்கியுள்ள 50 வளரும் நாடுகள்

சிசிலியா பாரியா - பி பி சி :  ஏழை நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் சீனா வழங்கும் கடன் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) அல்லது வேறு எந்த அரசாங்கம் வழங்கும் கடனையும் விட அதிகம். பொருளாதார உதவி, தொழில்வளர்ச்சிக்காக வழங்கப்படும் கடன் என்பவற்றை எப்போதுமே உலக நாடுகளனைத்தும் தமது வெளியுறவுக்கொள்கையின் ஒரு பகுதியாகவே வைத்துள்ளன.
ஆனால், சீனாவின் விஷயத்தில் 'கடன் ராஜீய உத்தி' என்ற சொல் நடைமுறையில் உள்ளது.
உலகப் பொருளாதாரம் குறித்த கல்வி நிறுவனமான, ஜெர்மனியின் கியெல் இன்ஸ்டிட்யூட்டின் பொருளாதார நிபுணர் கிறிஸ்டோஃப் ட்ரெபேஷ் இந்த கடன் ராஜீய உத்தி அல்லது debt diplomacy பற்றிக் கூறுகையில், “வளரும் நாடுகளுக்கு சீனா வழங்கும் கடனில் பாதி மறைந்த கடனாகத் தான் உள்ளது.” என்று குறிப்பிடுகிறார். ட்ரெபேஷ், கார்மென் ரீன்ஹார்ட் மற்றும் செபாஸ்டியன் ஹார்ன் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வுகளில் வெளிவந்த முடிவுகளின் ஒரு பகுதி இது. இந்தக் குழு 1949 முதல் 2017 வரை சீனா வழங்கிய 5,000 கடன்களை ஆய்வு செய்துள்ளது.
பல ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களை ஆய்வு செய்ததில், உலகின் நிதி அமைப்பில் சீனாவின் உண்மையான பங்களிப்பு குறித்துக் கண்டறிய

தமிழ்நாடு - நூற்றாண்டு கால சமூகநீதி மண்.

Suriya Krishnamoorthy.: இது நூற்றாண்டு கால சமூகநீதி மண் என்று அவ்வப்போது எழுதும்போதும், பேசும்போதும், இப்படியெல்லாம் வீராப்புக்காக எழுதுகிறோமோ.
இடஒதுக்கீட்டால் பயன்பெற்ற, சமூகத்தில் பெரும்பகுதி மக்களுக்கு இடஒதுக்கீடு குறித்த நேர்மறையான அணுகுமுறை இல்லாத காலத்தில், இதை சமூகநீதியில் பண்பட்ட மண் என்று சொல்லவதன் வழியே நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோமோ என்றெல்லாம் தோன்றும்.
இன்றைக்கு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் ஆவணத்தை படிக்கும்போது, அப்படி எழுதுவதில் எந்த தவறும் இல்லை என்று அழுத்தமாக தோன்றியது.
மொத்தம் பதிமூன்று வழக்குகள்.
திமுக, அதிமுக, திக, பாமக, மதிமுக, சி.பி.ஐ, சி.பி.ஐ.எம், நாதக, தமிழ்நாடு அரசு, இரண்டு மருத்துவர்கள், புதுச்சேரி தொடர்பில் இரண்டு வழக்குகள். எதிர் தரப்பில் மத்திய அரசு மற்றும் எம்.சி.ஐ.state specific reservation வேண்டும் என்று 12 வழக்குகள். -
மத்திய அரசின் இடஒதுக்கீடு கொள்கை அடிப்படையில் 27% வேண்டும் என்று பா.ம.க வின் வழக்கு. அரசியலமைப்பு சட்டம், உச்சநீதிமன்ற / உயர்நீதிமன்றங்களின் பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகள், MCI விதிகள், தமிழ்நாடு அரசின் 1993 ஆம் ஆண்டு சட்டம் என்று மிக விரிவாக திமுக வழக்கறிஞர் வில்சன் வாதிட்டிருக்கிறார்.
முடிவில் state specific reservation வேண்டும் என்பது அவருடைய வாதம். பெரும்பாலும் ஏனைய அனைத்து தரப்புகளும் வில்சன் அவர்களை முன்மொழிந்து கூடுதல் தகவல்களை சேர்த்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு தரப்பில் திரு. விஜய் நாராயணா விரிவாக வாதிட்டிருக்கிறார்.

சென்னை வி எச் பி அலுவலக உதவி காவல் ஆய்வாளர் சுட்டு கொலை .. தற்கொலையா ?

 தினகரன் : சென்னை: வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் சேகர்(47). இவர் தமிழக காவல் துறையில் 16.3.1994ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தார். படிப்படியாக உயர்ந்து தற்போது சென்னை ஆயுதப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு சொந்த ஊர் காட்பாடி. இவர், மதுரவாயலில் சொந்தமாக வீடு கட்டி மனைவி சங்கீதா மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். ஆயுதப்படையில் பணியாற்றி வந்த சேகருக்கு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநில தலைவர் வேதாந்தத்துக்கு பாதுகாப்பு பணி வழங்கப்பட்டிருந்தது.
நேற்று மாலை வேதாந்தம் சென்னை தி.நகர் பார்த்தசாரதிபுரம் ராமானுஜம் தெருவில் உள்ள விஷ்வ இந்து பரிஷத் அலுவலகத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சிறப்பு உதவி ஆய்வாளர் சேகரும் உடன் வந்தார்.பிறகு அலுவலகத்தில் உள்ள ஓய்வு அறைக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் சென்றார். சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் துப்பாக்கி வெடித்தது.
அதை கேட்டு அலுவலகத்தில் இருந்து நிர்வாகிகள் மற்றும் அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர், தனது கையில் வைத்திருந்த சிறிய வகை துப்பாக்கியால் வலது பக்க தலையில் வைத்து விசையை அழுத்தி தற்கொலை ெசய்து கொண்டார்.இதில்

சர்ச்சிலின் ஆட்சி நிர்வாகம்: கதாநாயக பிம்பம் குறித்து கேள்வி எழுப்பும் ( பார்ப்பன பனியாக்கள்) இந்தியர்கள்.. BBC

வின்ஸ்டன் சேர்ச்சில் : இந்திய பார்ப்பனர்கள் எப்போதும் மேலை நாடுகளின் ஜனநாயகம் சுதந்திரம் தத்துவம் பற்றி எல்லாம் உரத்த குரலில் பேசுவார்கள் . ஆனால் அதே பார்ப்பனர்கள் தங்கள் நாட்டில் உள்ள அறுபது கோடிக்கும் மேலான மக்களை தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டதகதவர்கள் என்று அந்த மக்களின் உயிர்வாழும் உருமையை கூட மறுத்தே வந்துள்ளார்கள் . அதை விட கொடுமை ஆயிரக்கணக்கான அந்த ஒடுக்குமுறையை அவர்கள் ஏற்று கொள்ளும் மனோ நிலையில் வைத்துள்ளார்கள்
BBC :யோகித்தா லிமாயே -பிபிசி :
நான் குழந்தையாக இருந்தபோது முதலில் வின்ஸ்டன் சர்ச்சில் பற்றி அறிந்து கொண்டேன். எனிட் பிளைட்டன் எழுதிய புத்தகம் ஒன்றில் வரும் ஒரு பெண் கதாபாத்திரம் விளக்கின் பிரேமில் இவருடைய படத்தை வைத்திருப்பார். `அந்த அளவுக்கு இந்த தேர்ந்த நிர்வாகியின் மீது அவருக்கு பற்றுதல்' இருப்பதால் அப்படி வைத்திருப்பார். நான் வளர்ந்தபோது, இந்தியாவில் கடந்த கால காலனியாதிக்கம் பற்றி நிறைய உரையாடி இருக்கிறேன். போர்க்கால பிரிட்டிஷ் பிரதமரைப் பற்றி, முற்றிலும் மாறுபட்ட கருத்து என் நாட்டில் பெரும்பாலான மக்களிடம் இருப்பதை நான் அறிந்து கொண்டேன்.காலனி ஆட்சிக் காலம் பற்றியும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன.
சர்ச்சிலின் ஆட்சிரயில் வசதி உருவாக்கியது, தபால் சேவைகள் உருவாக்கியது போன்ற பல நல்ல விஷயங்களை இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உருவாக்கியதாக சிலர் கூறுவார்கள். ``தங்களின் சொந்த தேவைகளுக்காக அவற்றை எல்லாம் அவர்கள் செய்தார்கள். அவர்கள் இந்தியாவை ஏழையாக்கிவிட்டனர். இந்தியாவைக் கொள்ளையடித்து விட்டனர்'' என்பது மற்றொரு தரப்பாரின் கருத்தாக உள்ளது. ``கொடுமைக்கார பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு'' எதிராக போராட்டங்களில் பங்கேற்றதைப் பற்றி எனது பாட்டி எப்போதும் பெருமையுடன் சொல்லிக் கொண்டிருப்பார்.

திங்கள், 27 ஜூலை, 2020

தனியார் கல்வி நிறுவனங்கள் ’’மனசாட்சியற்ற மாபாதகர்கள்’ ஆன்லைன் கல்விக்கும் அதே கொள்ளை ..

சாவித்திரி ண்ணன் : படுபாவிங்க, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ’’மனசாட்சியற்ற மாபாதகர்கள்’’ என்றொரு பட்டம் வழங்கலாம்!
பள்ளி,கல்லூரிகள் மூடிக் கிடக்கின்றன! பிள்ளைகள் படிக்க வகையின்றி , பேருக்கு ஆன்லைன் கல்வி என்ற ஆகாத்திய வழிமுறை ஒன்று இவர்களுக்கு பணம் பறிக்க கிடைத்துவிட்டது. அதுவும் கொஞ்சமும் குறைக்காமல் முழுப் பணமும் கேட்கிறார்கள்! தாமதிக்க கூடாதாம்!
இன்று காலை என் நண்பர் சொன்ன செய்தி அதிர்ச்சி ரகம்! ’’என் பொண்ணு கோவை பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரியில் படிக்குது கண்ணன். அரசு கோட்டாவில் இடம் கிடைத்தது.ஆனால்,அதற்கே வருடத்திற்கு நான்கு லட்சத்து 77 ஆயிரம் வாங்குகிறார்கள்! இது தவிர, விடுதிக் கட்டணம் மாதம் 16,000. மார்ச் 20 ந்தேதி முதல் காலேஜ் மூடப்பட்டு பொண்ணு வீட்டுக்கு வந்தாச்சு! இப்ப முழு கல்விக் கட்டணத்தோடு,ஆண்டு முழுவதுக்குமான விடுதிக் கட்டணமும் அப்படியே கட்ட சொல்கிறார்கள்!
மருத்துவ கல்வியை ஆன்லைனில் கற்பிக்க முடியாது.அதுவும் குறிப்பாக மூன்றாவது, நான்காவது ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவமனையில் பிராக்டிக்கலாக நோயாளிகளை பார்ப்பதிலும், பேசுவதிலும்,பெரிய மருத்துவர்களோடு சேர்ந்து இயங்குவதிலும் தான் உண்மையான கல்வியே இருக்குது!

என்னை ஏன் முடக்க பார்க்கிறீர்கள்? ரஜினியின் IPS அண்ணாமலை .... வரலாற்றை தப்பு தப்பாக பேசும் காணொளி ..


Devi Somasundaram : கேள்வி கேட்டா அதுக்கு பேர் முடக்குவதா அண்ணே ? ....பதில் சொல்ல முடியவில்லை என்றால் முடக்குவதாக சொல்லிக் கொள்ளலாம் ..காமராசர் எந்த வருடம் முதல்வரா இருந்தார், கக்கன் எந்த துறை அமைச்சர் பதவி வகித்தார் என்ற சாதாரண விஷயம் கூட அறியாமல் எப்படி ஐ பி எஸ் தேர்வு எழுதினீர்கள் என்பது புரிய்வில்லை . கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் பொலிடிகல் லீடர் என்று சொல்லிக்கொள்வது வெட்கமாய் இல்லயா ? . ஒரு லீடர் என்பவர் வழி நடத்துபவராக இருக்கனும்.. மிஸ் மிஸ் கிள்றாங்க என்று கம்ப்ளைண்ட் செய்பவர் லீடராக முடியாது .. நாங்க் கேக்ற கேள்விக்கே இப்படி பயந்தா நாளை மக்கள் கேப்பாஙகளே ...அப்ப என்ன செய்வீங்க ? ்்.. உங்கள நாங்க அடக்க நினைக்கவில்லை ..அவ்வளவு ஒர்த் நீங்க் இல்லன்னு உங்களுக்கே சுட்டி காட்டுகிறோம் அண்ணா . தற்சார்பு அறிவு தான் அரசியலுக்கு அவசியம் பிரதர் .
அண்ணாமலை  தற்சார்பு பொருளாதாரம் .

ஸ்டாலின் : நான்கு ஆண்டுகளாக BC, MBC மாணவர்களுக்கு பாஜக அரசு இழைத்த அநீதி

தினகரன் : சென்னை: நான்கு ஆண்டுகளாக BC, MBC மாணவர்களுக்கு பாஜக அரசு இழைத்த அநீதிக்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது
இப்படி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், சமூகநீதி வீழ்த்தப்படும் போதெல்லாம் தமிழகமே ஓரணியில் நிற்கும் என்றும், மேல்முறையீடு தவிர்த்து உடனே இடஒதுக்கீடு வழங்குக எனவும் அவர் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாது, இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ இடங்களில் பிற்படுத்தப்பட்ட(பி.சி, எம்.பி.சி) சமுதாயத்திற்கு
இடஒதுக்கீடு உரிமை உண்டு என்று திமுக தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நான்கு வருடங்களாக இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை மத்தியில் உள்ள பாஜக அரசு நிராகரித்து வந்திருக்கிறது.
திமுக சார்பில் எம்.பி. வில்சன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார், நேரில் மனு அளித்தார், கழக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்கள்.