சனி, 26 டிசம்பர், 2015

கோவில்களில் தாலிபான் பாணி உடைகட்டுப்பாடு ..RSS அஜெண்டாக்களை தமிழக அறநிலைய துறை நிறைவேற்ற துடிக்கிற.

தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆனால் தமிழகத்தில் உள்ள சில ஆண் பக்தர்கள் கோயிலுக்கு வரும்போது டிரவுசர், டிராக் பேன்ட், பெண் பக்தர்கள் ஜீன்ஸ், டி சர்ட், டாப், லெக்கிங்ஸ் உள்ளிட்ட ஆடைகளில் வருகின்றனர்.இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்களில் ஒரு தரப்பினருக்கு சங்கடம் ஏற்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் அரை ட்ரவுசர், டிராக் பேன்ட், ஜீன்ஸ், லெக்கிங்ஸ்>அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று இந்து அறநிலையத்துறை அதிகாரிஒருவர் தெரிவித்தார்.

யமுனா விரைவு சாலை விற்பனை: 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனால் ஜே.பி., குழுமம்.....நொய்டா - ஆக்ராவை இணைக்கும்

புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலத்தில், கிரேட்டர் நொய்டாவையும், உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ், 2012 ஆக., 9ல், யமுனா விரைவு நெடுஞ்சாலையை, வாகனப் போக்குவரத்திற்கு திறந்து வைத்தார்.
ஆக்ராவையும் இணைக்கும், 165 கி.மீ., நீளமுள்ள, 'யமுனா விரைவு நெடுஞ்சாலை'யை, விற்பனை செய்யப் போவதாக, அதை அமைத்த ஜே.பி., குழுமம் அறிவித்துள்ளது.டில்லி அருகேயுள்ள கிரேட்டர் நொய்டாவையும், ஆக்ராவையும் இணைக்கும், அதிவிரைவு நெடுஞ்சாலை திட்டத்தை, 2003ல், உ.பி.,யின் அப்போதைய முதல்வராக இருந்த மாயாவதி அறிவித்தார். பின், ஆட்சி மாற்றம் காரணமாக, இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 2007ல், மாயாவதி மீண்டும் உ.பி., முதல்வரானதும், 'யமுனா விரைவு நெடுஞ்சாலை' என்ற பெயரில், இத்திட்டம் உயிர் பெற்றது.

காரமாக facebook இல் பதிலடி...ரசிகரின் ஆபாச பதிவுக்கு நடிகை பூஜா ....

சென்னை: சிம்பு - அனிருத்தின் பீப் விவகாரம் அடங்கும் முன்பே, இன்னொரு ஆபாச சர்ச்சை. இது இரு நடிகைகள் தொடர்பானது. நடிகைகள் பூஜா, பார்வதி மேனன் ஆகிய இருவரும், தங்கள் உடல் அழகை ஆபாச வார்த்தைகளால் சமூக வலைத்தளத்தில் வர்ணித்த ரசிகர்கள் மீது 2 பேருக்கு ஆவேசமாக பாய்ந்து பதிலடி கொடுத்துள்ளனர். பூஜா, ‘நான் கடவுள்' படத்தில் நடித்து பிரபலமானவர். பார்வதி மேனன், ‘சென்னையில் ஒருநாள், மரியான், உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
பூஜா பூஜாவின் பேஸ்புக்கில் ரசிகர் ஒருவர் புகுந்து நீங்கள் பிங்க் நிற ஆடையில் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறீர்கள் என்று கருத்து பதிவிட்டு விட்டு தொடர்ந்து அவரது முன்னழகைப் பற்றி ஆபாசமாக எழுதியுள்ளார்.

குட்டி ரேவதி :அது 'பீப்' பாடல் இல்லை; 'ஹேட்' பாடல்! ..பெண்கள்மீது அமிலம் வீசும்....வார்த்தைகளால் அமிலம் ..

பீப் பாடலுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. அது வெறுமனே ஒரு பாடலில் அல்லது
சினிமாவில் 'கெட்ட வார்த்தையைப் 'பயன்படுத்துதல் குறித்த உரிமை, கருத்துரிமை என்பதாகத் திசைதிருப்பப்படுகிறது. அநியாயம். அந்த 'பீப்'பாடல் ஒரு hate song. பெண் வெறுப்புப்பாடல். இலக்கியம், சினிமா, ஊடகம் என எல்லா துறைகளிலும் வியாபித்திருக்கும் பெண் வெறுப்பின் சீழ் தான் இப்படி அதிகாரத்துடன், மறைமுக இச்சையுடன், நமுட்டுச்சிரிப்புடன் வெளிப்பட்டிருக்கிறது.
இதையெல்லாம் கலையாகவும் கலையுரிமையுடனும் ஒப்பிட்டு முழக்கமிடுவது என்பது செய்வதையும் செய்துவிட்டு அப்படிச் செய்யவில்லை என்பதான தப்பித்தல் தந்திரம் தான். இன்றைய சமூக ஆண்களிடம், தாய்ப்பாசம், அண்ணன் - தங்கைப்பாசம், தோழி, காதலியர் என்பதெல்லாம் அர்த்தமற்ற, உணர்வுகளற்ற வெற்று வார்த்தைகள். எல்லாமே Use & Throw.
காலங்காலமாக, கலை ஊடகங்களால் விதைக்கப்பட்டுவந்த 'ஆணாதிக்க' (அரதப்பழசான வார்த்தை தான்) பழக்கங்கள் தாம் இன்று அனிருத்தாகவும் சிம்புவாகவும் வெடித்திருக்கிறது. பெண்கள் மீது குருட்டாம்போக்கில் அமிலத்தை வீசும் ஆண்களாய் இன்றைய தலைமுறை மாறிவிட்டதற்கு, அதிலும் எந்தக்குற்றவுணர்வுமில்லாமல் பொதுவெளியில் வெளிப்படுத்த வாய்ப்பு உண்டாக்கித் தந்ததற்கு, நம்முன் உள்ள எல்லா ஊடகங்களும் பொறுப்பு ஏற்கவேண்டும்.

மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி குமரி அனந்தன் தொடங்கிய நடைபயணத்தில் கலந்துகொண்ட

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி குமரி அனந்தன் தொடங்கிய நடைபயணத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் | படம் உதவி: ஸ்டாலின் முகநூல் பக்கம் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) தனது நடைபயணத்தை தொடங்கினார். மு.க.ஸ்டாலின், நல்லகண்ணு, வைகோ, ஈவிகேஎஸ் இளங்கோவன், சரத்குமார் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்து நடைபயணத்தை தொடங்கிவைத்தனர்.
*அகில இந்திய மதுவிலக்கு பேரவை சார்பில் சென்னையில் தொடங்கிய இந்த நடைபயணத்தில் குமரிஅனந்தனுடன் 30 பேர் கலந்துகொண்டனர்.

வெள்ளி, 25 டிசம்பர், 2015

உணர்ச்சி வசப்பட்ட நடிகை ரோஜா தகாத வார்த்தைகளை ஏன் பேசினார்? சந்திரபாபுவின் கந்து வட்டி கொடுமைதான் காரணமாம் ...


நகரி,டிச.25 (டி.என்.எஸ்) முதல்வர் சந்திர பாபுநாயுடுவை தரக்குறைவாக பேசியதாக கூறி, நகரி தொகுதி எம்.எல்.ஏ-வான நடிகை ரோஜாவை சபாநாயகர் கோடல சிவபிரசாத் சட்டசபையில் இருந்து ஒரு ஆண்டுக்கு நீக்கம் செய்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி சட்டப்பேரவை செயலாளர் சத்திய நாராயணாவிடம் நோட்டீசு வழங்கினார்

உலக அழகியாக இராக் பெண் தெரிவு 40 வருடங்களின் பின்பு.....


பாக்தாத்,டிச.25 (டி.என்.எஸ்) ஈராக்கில் சமீபத்தில் நடந்த அழகிப் போட்டியில்
ஷாய்மா குயாசிம் அப்துல் ரகுமான் என்ற 20 வயது பெண் ‘மிஸ் ஈராக்’ பட்டம் வென்றார். இந்த நிலையில், அவருக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களது இயக்கத்தில் சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். இல்லையெனில் அவரை கடத்திவிடுவோம், என்று மிரட்டல் விடுத்துள்ளனர். செய்தி நிறுவனம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து அழகி ஷாய்மா கூறுகையில், “ஈராக் பெண்ணாகிய நான் எனது சமூகத்தில்தான் வாழ்கிறேன். ஆண்கள் போன்று பெண்களுக்கும் வாழ உரிமை உள்ளது என்பதை நிரூபிக்க விரும்புகிறேன். மிரட்டலுக்கு நான் பயப்படவில்லை. ஏனெனில் நான் எந்த தவறும் செய்யவில்லை’’ என நம்புகிறேன்.

மோடி லாட்டரி..நைஜீரியாவோடு போட்டி ...The Lord Of The Lottery Rings

வாழ்த்துக்கள், முகநூல் அதிர்ஷ்ட குலுக்கலின் மூலம் நீங்கள் 4,000,000
பிரிட்டன் பவுண்டுகளை வென்றுள்ளீர்கள்” என்றது அந்த மின்னஞ்சல். அந்த தொகையைப் பெற என்னுடைய வங்கி கணக்கு விவரங்களையும், செயலாக்க கட்டணமாக 150 பிரிட்டன் பவுண்டுகளையும் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஒருவருக்கு கொடுக்க வேண்டிய சில்லரை வேலை மட்டும் பாக்கி. அதைச் செய்ய முடியும் என்று தான் நினைக்கிறேன்.
இணைய லாட்டரிகளை நான் எப்போதும் விரும்புவேன். ஏனென்றால் நீங்கள் அதில் எப்போதும் கெலித்துக் கொண்டே இருக்கலாம். எனது மின்னஞ்சல் நிரம்பி வழிந்து, மாதா மாதம் அதிக சேமிப்பிடத்திற்காக கூகிள் நிறுவனத்திற்கு 2 டாலர் கொடுக்குமளவிற்கு நான் இணைய லாட்டரிகளில் ஜெயித்துக் கொண்டே இருக்கிறேன் என்றால் பாருங்களேன்.

பாகிஸ்தானுக்கு நரேந்திர மோடி திடீர் விஜயம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானுக்கான தனது முதலாவது
பயணத்தை இன்று மேற்கொண்டுள்ளார். முன்னறிவிப்பில்லாத திடீர் விஜயமாக பாகிஸ்தானின் லாஹூர் நகருக்கு அவர் சென்றுள்ளார்.
இந்த திடீர் விஜயம் தொடர்பில் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்ட அவர், பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷரிப்பை இன்று மதியம் லாகூரில் சந்திக்கவிருப்பதாக தெரிவித்திருந்தார்.
அத்துடன் இன்று பிறந்த நாள் கொண்டாடும் நவாஸ் ஷரிப்புக்கு தான் வாழ்த்து தெரிவித்ததாகவும் அவர் ட்வீட் செய்துள்ளார். 
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று மதியம் பாகிஸ்தானின் லாஹோர் நகருக்கு செல்லவிருப்பதாக தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மோடி இந்தியா திரும்பும் முன்பு பாகிஸ்தான் செல்கிறார். வரலாறு முக்கியம் அமைச்சரே ....அதைவிட விளம்பரம் ரொம்ப முக்கியம் அமைச்சரே

ட்ராபிக் ராமசாமி மீது தமிழக அரசு வழக்கு....வெள்ளம் செயற்கை பேரழிவுதான் ! நான் உண்மையைத்தான் சொல்வேன் டிராபிக் ராமசாமி முழக்கம்

Govt can sue me, I am not scared of going to jail', Traffic Ramaswamy declares -
www.thenewsminute.com
He is 83 years old and has filed over 400 public interest litigation in the past two decades. He says 'he is just 83 years old' and seems unperturbed by the latest complaint filed against him. This time, it is CM Jayalalithaa who has filed a defamation case against him for allegedly spreading messages about distribution of flood relief material on WhatsApp. 
Traffic Ramaswamy says he will not withdraw or apologise for his WhatsApp audio. "I have spoken only the truth. This was not a natural disaster, it was a man made one. The state cannot get away with claiming that the rains alone caused the flooding. The DMK and AIADMK have done a lot to bring the state to this condition, especially the AIADMK," he says.

சென்னை வெள்ளத்தில் 5000 கிளிகளுக்கு புகலிடம் தந்த ஜோசெப் சேகர்....பறவை மனிதர்


சென்னை: பறவை மனிதன் என்று இவருக்குச் செல்லப் பெயர் உண்டு. சமீபத்திய சென்னை வெள்ளத்தின்போது இவரது வீடு பறவைகளுக்கான நிவாரண முகாமாக மாறிப் போயிருந்தது.
ஜோசப் சேகரின் வீடு முழுக்க கிளிகள் குவிந்திருக்க அந்தப் பகுதியே கீச் கீச் சத்தத்தால் திக்குமுக்காடிப் போனது. வழக்கமாகவே இவரது வீட்டுக்கு ஏகப்பட்ட கிளிகள் தினசரி வருமாம். இரை உண்ணவும், ஓய்வெடுக்கவும் ஜோசப் சேகரின் வீடுதான் இந்த கிளிகளுக்கு விருப்ப இடமாக விளங்குகிறது.
இந்த நிலையில் சமீபத்திய மழை வெள்ளம் பல ஆயிரம் கிளிகளை ஜோசப் சேகரின் வீடு தேடி வர வைத்து விட்டது. இதுகுறித்து தி நியூமிஸ்மினிட் போட்டுள்ள ஒரு சுவாரஸ்ய செய்தி
10 நாட்கள் தஞ்சமடைந்த கிளிகள் "வெள்ளம் பாதித்த அந்த பத்து நாட்களும் எனது வீடு ஒரு நிவாரண முகாம் போலவே இருந்தது. காலையில் வந்தால் மாலை வரை எனது வீட்டிலேயே இருக்கும் இந்தக் கிளிகள்

ஜெர்மன் விசாவுக்காக சென்னையில் குவியும் சிரியர்கள்...அரபு நாடுகள் கதவுகளை மூடிவிட்டன ...

இந்தியா மட்டும்தான் விசா பெறுவதற்காக வர அனுமதி அளிக்கிறது. அரபு நாடுகள் தங்கள் கதவுகளை மூடிவிட்டன.   சிரியாவில் கடும் யுத்தம் நடந்துகொண்டிருக்கும் நிலையில், சிரிய நாட்டவர்கள் ஜெர்மனிக்குச் செல்வதற்கு விசா பெறுவதற்காக தமிழகத்தின் சென்னைக்கு வந்துசெல்வது சமீப நாட்களாக அதிகரித்துள்ளது.
சிரியாவில் போர் தீவிரமடைந்த பின்னர், அங்கிருந்து தப்பி கடல் வழியாக ஜெர்மனி சென்று, அகதித் தஞ்சம் பெற்றுள்ள ஆண்களின் குடும்பத்தினரே தற்போது விசா பெறுவதற்காக சென்னையில் காத்திருக்கின்றனர்.
சென்னையில் உள்ள ஜெர்மானிய தூதரகத்தில் "குடும்பத்தினருடன் இணைவதற்கான" விசாவுக்கு விண்ணப்பித்திருக்கும் இவர்களில் யாரும் தற்போது வெளிப்படையாக பேச விரும்பவில்லை.
இந்த நிலையில், அவர்களுக்காக மொழிபெயர்ப்பாளராக உதவிவரும் சிரியாவைச் சேர்ந்த அகமது ஹுசைன் என்பவர் பிபிசியிடம் பேசினார்.

வியாழன், 24 டிசம்பர், 2015

சிம்புவின் அம்மா உஷா கண்ணீர்....தமிழ்நாடே வேண்டாம் எங்காவது போகிறோம்


சிம்புவின் ஆபாச பாடல் விவகாரம் பெண்கள் மத்தியில் எதிர்ப்பை சம்பாதித்திருக்கும் நிலையில் அவரது குடும்பத்தினர் இந்த பிரச்சனையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர், சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் 17 நிமிடம் ஓடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு உருக்கமாக பேசி இருந்தார். அதில், சிம்புவின் பாடல் தமிழக பெண்களின் மனதை நெருடி இருந்தால், அந்த களங்கத்தை கண்ணீரால் துடைக்க விரும்புகிறேன் என்று உருக்கமாக பேசி இருந்தார். இந்த நிலையில் சிம்புவின் தாய் உஷா, கண்ணீர் மல்க உருக்கமாக பேசியுள்ள வீடியோ ஒன்று இன்று வாட்ஸ்–அப்பில் வெளியானது. அதில் உஷா கூறியிருப்பதாவது:– என் மகன் செய்ததை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. நான் ஒப்படைக்கிறேன் என் பையனை. அப்படி என்ன தப்பு செய்து விட்டார் சிலம்பரசன். 24 மணி நேரமும் கேமராவோட வீட்டு வாசலில் உட்கார்ந்தா எங்களுக்கு என்ன நிம்மதி இருக்கு. எங்கள் வீட்டில் நிம்மதி இல்லை. வீட்டுக்கு வெளியில் வந்து கோலம்கூட போட முடியவில்லை.  பணக்கார வீடுகளில்  பிள்ளைகளை  தறுதலைகளாக வளர்த்துவிட்டு  பின்பு சமுகத்தை குற்றம் சொல்லும் பெற்றோர்கள் தண்டிக்க படவேண்டியவர்கள்தான்

உபியில் அரசு பஸ்சை ஓட்டிய குரங்கு..பயணிகள் ஓட்டம்..

பரேலி :உ.பி.,யில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்சை இயக்கிய சுட்டி அப்போது, அங்கு வந்தஒரு சுட்டிக் குரங்கு, டிரைவர் இருக்கையில் அமர்ந்தது. பின், இன்ஜினில் இருந்த சாவியை திருகியது. இன்ஜின் இயங்கிய சத்தம் கேட்டதும், பஸ்சில் இருந்த சில பயணிகளும், குட்டித் துாக்கம் போட்ட டிரைவரும் அலறினர். டிரைவர் வேகமாக ஓடிவந்து, குரங்கை விரட்ட முயன்றார்.
குரங்கு, பயணிகளை அலற வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீக்கப்பட்ட பாஜக MP கீர்த்தி ஆசாத்துக்கு சுப்பிரமணியம் சுவாமி பகிரங்க ஆதரவு

டெல்லி: கீர்த்தி ஆசாத் போன்ற நேர்மையானவரை கட்சி இழந்துவிடக்கூடாது என்பதால் அவருக்கு பதில் நோட்டீஸ் அனுப்ப உதவி செய்வதாகவும், கீர்த்தி ஆசாத் இன்னும் பாஜகவில்தான் தொடருகிறார் என்பதால், அவருக்கு உதவி செய்வதில் தப்பில்லை என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக மத்திய அமைச்சர், ஜேட்லி பதவி வகித்தபோது, பெரோஷா கோட்லா கிரிக்கெட் மைதான புனரமைப்புக்கு ரூ.24 கோடி மதிப்பிடப்பிடப்பட்டு, ரூ.114 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் இதுதொடர்பாக ஒப்பந்தப்புள்ளியில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. BJP shouldn't lose an honest person like Kirti Azad: Subramanian Swamy ஒரு லேப்டாப்புக்கு ரூ.36 ஆயிரம் ஒரு நாள் வாடகையாக வழங்கப்பட்டுள்ளது.

வைகோவின் : எங்களைப் பார்த்து கருணாநிதிக்கு கலக்கம்..நாமளும் வடிவேலுவுக்கு வசனம் எழுதுவோம்ல?

சென்னை: நாங்கள் விஜயகாந்தை அழைத்தது கருணாநிதிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் . விஜயகாந்தை நாங்கள் சந்தித்த பிறகுதான் அவர் அழைக்க வேண்டுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மக்கள் நலக்கூட்டணி தொகுதி உடன்பாடுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல. 6 மாதத்துக்கு முன்பே உருவாக்கப்பட்ட கொள்கை திட்ட கூட்டணி. மக்கள் நலக்கூட்டணி ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லாத பலமிக்க கவசதன்மை மிக்க நம்பிக்கைதன்மை கொண்டது. 65 சதவீத இளைய தலைமுறையின் கருத்து தாக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கூட்டணி என்றார். Karunanidhi is afraid of us, says Vaiko வெள்ளச்சேதத்தின் போது அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டது.

பாஜக எம்பி கீர்த்தி ஆசாத் மோடி மீது கடும் குற்றச்சாட்டு: கிரிக்கெட் சங்க ஊழல் சிபிஐ ஏன் சோதனை நடத்தவில்லை?

நான் செய்த தவறு என்ன என்பதை பாஜகவும், மோடியும் விளக்க வேண்டும்:
கீர்த்தி ஆசாத் எந்த காரணமும் தெரிவிக்காமல் தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக பாஜக எம்பி கீர்த்தி ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் நடந்ததாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மீது
குற்றச்சாட்டு கூறிய பாஜக எம்பி கீர்த்தி ஆசாத் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கீர்த்தி ஆசாத்,
ஊழலுக்கு எதிராக பேசியதால்தான் சஸ்பெண்ட் நடவடிக்கையா. நான் செய்த தவறு என்ன என்பதை பாஜக தலைமையும், பிரதமர் மோடியும் விளக்க வேண்டும். டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடு புகாரை எழுப்புவது கட்சிக்கு எதிரான நடவடிக்கை இல்லை. நான் யாருடைய முதுகிலும் குத்த விரும்பவில்லை. டெல்லி முதல் அமைச்சர் அலுவலத்தில் அதிரடி சோதனை நடத்திய சிபிஐ, டெல்லி கிரிக்கெட் சங்க அலுவலத்தில் ஏன் அத்தகைய சோதனையை நடத்தவில்லை.

பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ஏற்படலாம்..மோடி புடின் சந்திப்பு

ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின், கிரெம்ளின் மாளிகையில் தனிப்பட்ட இரவு விருந்துபசாரம் ஒன்றை அளித்துள்ளார். ரஷ்யப் பிரதமருடனான பேச்சுக்கள் 'பலனுள்ளவையாக' இருந்ததாக நரேந்திர மோடி அவரது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கு வரும் முஸ்லிம் பயணிகள் தடுக்கப்படுகின்றனர்? லண்டனில் முஸ்லிம் குடும்பம்...

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் குடும்பம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்லும் விமானத்தில் ஏறும் சமயத்தில் அவர்கள் தமது பயணத்தை தொடர்வதற்குத் திடீரென தடை விதிக்கப்பட்டது ஏன் என்று அமெரிக்காவிடம் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் விளக்கம் கோர வேண்டும் என்று பிரிட்டனின் நாடளுமன்ற உறுப்பினர் ஸ்டெல்லா க்ரீசி கோரியுள்ளார்.
இந்த குறிப்பிட்ட குடும்பம் அவரது தொகுதியைச்சேர்ந்தவர்கள் என்பதால் அவர் இந்த பிரச்சனையை எழுப்பியுள்ளார்.
வால்தாம்ஸ்டோ தொகுதியில் வசிக்கும் குடும்பத்தைச்சேர்ந்த 11 பேர் அமெரிக்காவின் டிஸ்னி லாண்டில் தங்களது விடுமுறையைக் கழிக்க திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் டிசம்பர் 15ஆம் தேதியன்று அவர்களது பயணம் கடைசி நிமிடம் இடைநிறுத்தப்பட்டது.

தமிழுக்கு அப்படி என்னதான் பெருமை? நெசமாலுமே ஏதாவது கீதா?




அனுஷ்காவுக்கு இஞ்சி இடுப்பழகியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை....அழகாகவே..

கமல் படத்தின் மூலம் பாப்புலர் ஆன ‘இஞ்சி இடுப்பழகி’ வார்த்தை தங்கள் படத்தையும் பாப்புலராக்கும் என்று டைட்டில் வைத்ததாக இயக்குனரே சொல்லியிருந்தாலும், அனுஷ்காவின் இடுப்பை பார்த்த பிறகு தான் இந்த டைட்டிலை வைத்தாரோ எனத் தோன்றுகிறது. கிட்டத்தட்ட 70 கிலோ இருப்பார் அனுஷ்கா. ஆனாலும் அந்த இடை வளைவும், பொலிவான தோற்றமும், அழகு பேசும் கண்களும் மாறவே இல்லை.
 இரவு பார்த்து பெருமைப்பட்டுக்கொண்டு உறங்கிய முகத்தில் காலையில் ஒரு முகப்பரு தோன்றினால் எவ்வளவு அதிர்ச்சியடைவோமோ, அவ்வளவு அதிர்ச்சியை தருகிறார் புடவையில் பாதி ஸ்கிரீனை மறைத்துக்கொண்டு வரும் அனுஷ்கா. இவரது கதாபாத்திரத்தை மாதிரியான பெண்களை நாம் பெரும்பாலும் காணலாம். ஆனால் குண்டாக இருக்கிறோம் என்பதை குறையாக நினைக்காதபடி மகிழ்ச்சியுடன் அப்பாவால் வளர்க்கப்படுகிறார்

ஆகமவிதியின் பெயரில் பார்ப்பன அடாவடி – வீடியோக்கள்


உச்சநீதிமன்றத்தின் அனைத்து சாதி அர்ச்சகர் தீர்ப்பையொட்டி மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றம் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு, தீர்ப்பைக் கண்டித்து நடந்த சென்னை ஆர்ப்பாட்டம் – வீடியோக்கள்; னைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் 2006-ல் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக, மதுரை மீனாட்சி கோயிலின் பார்ப்பன அர்ச்சகர்கள் தொடுத்த வழக்கில், தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, பார்ப்பன ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் பாதுகாக்கும் வகையில் மிகவும் தந்திரமான சொற்றொடர்களில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது.

கூட்டணி பேரத்தில் ஏதாவது பொறுக்க நினைக்கும் கொள்கை வீரர்கள்

இரண்டு பெரிய கம்பனிகளும் கூடாது? நாங்க நல்ல யோக்கியமானவுங்க
எங்களுக்கு ஒரு முறை சந்தர்ப்பம் கொடுத்துதான் பாருங்களேன் என்ற கோஷத்தில் சுமார் நான்கு கோஷ்டிகள் மூன்றாவது அணி அல்லது நாலாவது அணியாக ஷோ காட்டுகிறது.
இவர்கள் நிச்சயமாக ஷோதான் காட்டுகிறார்கள்.
உள்ளே இவர்களிடம் உருப்படியாக சொல்வதற்கு ஒன்றுமே இல்லை.
ஈழப்பிரச்சனை ஒட்டு வாங்கி தருமா என்று முயற்சித்து மௌனமாக ஏமாந்து போனவர்கள்.
ஊழல் என்று சொல்லிக்கொண்டே சொத்து குவிப்பு ராணியிடம் விலை போனவர்கள் . இது நிச்சயமான உண்மை. கடந்த தசாப்தங்களாக வேறு என்னதான் இவர்கள் செய்தார்கள்?
எப்படியாவது இவர்கள் காப்பற்றுவார்கள் என்று நம்பியவர்களை எப்படி இவர்கள் நட்டாற்றில் தள்ளி விட்டார்கள் என்பதை எல்லோரும் அறிவார்கள்.

சொந்தமாக எந்த அரசியல் கொள்கையும் உண்மையையில் இவர்களிடம் இல்லவே இல்லை.

நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று ஒரு ட்ராபிக் ராமசாமி அல்லது சகாயம் ஐ எ எஸ் போன்றவர்களின் கால்தூசிக்கு கூட இந்த மக்கள் நலன் போர்டுகாரர்கள் வரமாட்டார்கள்.

வெள்ள நிவாரணம் :.வந்தது வெள்ளம் அல்ல....அதிஷ்டம்....சொல்வது வசூல் கோஷ்டி...அடப்பாவிகளா?

"சென்னை நகரில் நிவாரணக் கணக் கெடுப்பில் யார் வேண்டுமென்றாலும் தங்களது பெயரை பதிவு செய்யலாம். வீடு பெறவேண்டு மென்றால் 1 லட்ச ரூபாய், பாதிப்பே இல்லாமல் வெள்ள நிவாரணத் தொகை 5,000 ரூபாய் பெற 2,500 ரூபாய் லஞ்சம் என ரேட்டை ஃபிக்ஸ் செய்து அடாவடி வசூலில் அதிகாரிகளுடன் கூட்டணிப் போட்டு அ.தி.மு.க.வினர் வசூல் வேட்டையில் இறங்கி கோடிக் கணக்கில் சுருட்டிக்கொண்டிருக்கின்றனர்'' என்கிறார்கள் பாதிக்கப்பட்ட சென்னை மக்கள்.வெள்ள நிவாரணம் எப்போது வரும் என்ற ஏக்கக்குரல் சென்னையில் பலமாக ஒலிக்கிறது."இன்று வரை எங்கள் வீடுகளுக்கு மின்சாரம் இல்லை. வெள்ளத்தை வடிய வைக்கத் தோண்டிய குழிகளில் இன்றுவரை தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கிறது. குடிசைக்குள் நுழைய முடியாமல் கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு ஒருவேளை சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் பட்டினியால் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கிறோம்'' என கண்ணீர் மல்கக் கதறும் சுகன்யாவின் சோகத்தைக் கேட்க அங்கே யாருமில்லை. சுகன்யா வசிக்கும் தாம்பரம் வரதராஜபுரம் சுற்றுப்பகுதி முழுவதும் இதே நிலைமைதான் என்பதை டெடல், ராஜா ஆகியோரும் உறுதி செய்கிறார்கள்.

கூட்டணி வியாபாரம் களை கட்டுகிறது : அருண் ஜெட்லி ஜெயலலிதாவை மறுபடியும் காப்பாற்றுவாரா ?

ஹலோ தலைவரே.. ..  போனவாரம் வெங்கையா நாயுடு வந்தாரு.. இந்த வாரம் அருண் ஜெட்லி வந்தாரு.'' 

""எல்லாமும் கூட்டணிக் கணக்குத்தானா?''

""தமிழகம், கேரளா, மேற்குவங்கம்னு அடுத்த வருடத்தில் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் வலுவா கால் ஊன்றணும்ங்கிறது மோடி- அமித்ஷாவோட கணக்கு. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் ஒரு ராஜ்யசபா சீட் வாங்குற அளவுக்கு சட்டமன்றத்தில் பா.ஜ.க.வுக்கு எம்.எல்.ஏ.க்கள் வேணும்னு நினைக்கிறாங்க. அந்தக் கணக்கோடுதான் அவங்க அ.தி.மு.க தலைமையை அப்ரோச் பண்ணுறாங்க.'அப்படின்னா 35 சீட்டுக்குக் குறையாம ஜெயிக்கணுமே, அந்தளவுக்கு பா.ஜ.க.வுக்கு ஜெ. சீட் கொடுப்பாரா என்ன?'வெள்ளநிவாரணத்துக்கு மத்திய அரசின் நிதி உதவி ஜெ.வுக்குத் தேவை. அதோடு சொத்துக்குவிப்பு அப்பீல் கேஸிலும் சட்ட உதவி தேவை. அதனால ஜெ இறங்கி வருவார்ங்கிறது பா.ஜ.க மேலிடத்தோட கணக்கு. நிவாரணப் பணத்தை நாமதான் கொடுக்குறோம்ங்கிறதை தமிழக மக்கள் உணரணும்னும் மோடி அறிவுறுத்தியிருப்பதோடு, மத்திய அமைச்சர்களையும் தொடர்ந்து தமிழகத்துக்கு அனுப்பி வைக்கிறாரு. ஆனா வெள்ள நிவாரணத்தை வச்சி, அ.தி. மு.க.வோடு கூட்டணின்னு பா.ஜ.க போட்ட கணக்கு ஒர்க் அவுட் ஆகலை.''