வேலூர் மாவட்ட பாமக முன்னாள் செயலாளர்
சாமுவேல் செல்லப்பாண்டியன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் கலைஞர் நேற்று
(3.1.2013) முன்னிலையில் திமுகவில் சேர்ந்தனர். சென்னை அண்ணா
அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலைஞர் பேசியபோது,’இந்தச்
சமுதாய மேன்மைக்காக, என் ஆயுள் இருக்கும்வரை பாடுபடுவேன். அப்படியானால்
அதற்குப் பிறகு என்ற கேள்விக்குப் பதில்தான் ஸ்டாலின். அவரை நீங்கள் மறந்து
விடக்கூடாது’’ என்றார்.தனக்குப்
பிறகு மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பார் என்று அறிவித்ததால், கட்சியில் ஒரு
தரப்பினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது.இந்நிலையில்
இன்று சென்னை விமான நிலையம் வந்திறங்கிய மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடம்
செய்தியாளர்கள், தனக்குப் பின் மு.க.ஸ்டாலின் என்று கலைஞர் கூறியுள்ளாரே
என்று கேட்டதற்கு, ‘’தி.மு.க. ஒன்றும் திறந்த மடம் இல்லை’’ என்று
ஆவேசமாக கூறினார்.&அவர் மேலும், திமுக ஒன்றும் திறந்த மடம் அல்ல என்று
கலைஞரே முன்பொரு முறை கூறியுள்ளார் என குறிப்பிட்டார்<
வெள்ளி, 4 ஜனவரி, 2013
இலங்கை. பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நான்கு வயது சிறுமி
மண்டைதீவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நான்கு
வயது சிறுமிக்கு நீதி கிடைக்க கோரியும் குற்றவாளிகளைத் சட்டம் விரைவாகத்
தண்டிக்க வேண்டும் எனக் கோரியும் பொது மக்களால் அமைதிப் பேரணியென்று இன்று
நடாத்தப்பட்டது. இப் பேரணிக்கான ஏற்பாட்டினை றோஜாவனம் சிறுவர்கழகம்
மேற்கொண்டது.மண்டைதீவு பேரருலானவர் தேவாலயத்தில் இருந்து ஆரம்பமான இந்த பேரணி மண்டைதீவில் உள்ள வேலணை உப பிரதேசசபை காரியாலயத்துக்கு சென்று, அங்கு இருந்து மண்டைதீவு வீதிகளை சுற்றி வந்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் நிலையமான மண்டைதீவு பொலிஸ் நிலையத்தை சென்றடைந்தது.
பொலிஸ் நிலையத்தில் வைத்து யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெவ்ரிஇ மண்டைதீவு பங்குத்தந்தை விஜிண்டஸ் ஆகியோரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இப்பேரணியில் தீவக வலயக்கல்விப் பணிப்பாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் வேலணை பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மற்றும் வேலணை சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள், உள்ளிட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர். இலங்கை
மாற்றுதிறனாளியாக நடிக்கிறார் பாவனா
சென்னை: விஐபி பற்றிய வில்லங்க கதையில் மாற்றுத் திறனாளியாக நடிக்கிறார்
பாவனா. தமிழில் ‘சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகமான பாவனா தொடர்ந்து
‘அசல், ‘தீபாவளி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிரபல நடிகைகளின்
ஆதிக்கத்தாலும், புதுமுக ஹீரோயின்களின் அதிரடி வரவாலும் தமிழில் பட
வாய்ப்பு குறைந்தது. இதையடுத்து மலையாள படங்களில் கவனம் செலுத்தியவர்
தொடர்ந்து கன்னட படங்களில் நடித்தார். மாறி மாறி இந்த இருமொழி படங்களில்
மட்டுமே தற்போது நடித்து வருகிறார் பாவனா.
பாமகவில் இருந்து 2000 பேர் திமுகவில் இணைந்தனர்
சாமியாருடன் கட்டாய உறவுக்கு தள்ளிய கணவன்: சீரழிந்த பெண் தீக்குளித்து மரணம்
மேற்கு வங்க மாநிலம் ஜபல்பூரி மாவட்டம் காமக்யாகுரி பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார். இவரது மனைவி ஸ்வப்னா(வயது 39). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால் ஆண் குழந்தை இல்லாததை ஒரு குறையாகக் கருதி ஸ்வப்னாவை அவரது கணவன் மற்றும் அவரது உறவினர்கள் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இந்த கொடுமையின் உச்சகட்டமாக, கடந்த டிசம்பர் மாதம் ஒரு சாமியாரை சுகுமார் அழைத்து வந்துள்ளார். பின்னர் அந்த சாமியாருடன், தன் மனைவியை கட்டாயப்படுத்தி உறவு வைக்கச் செய்துள்ளார். இவ்வாறு 3 நாட்கள் சாமியாரின் பிடியில் சிக்கிச் சீரழிந்த ஸ்வப்னா, கடந்த 17-ம் தேதி தீக்குளித்தார்.
பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரிடம் வாக்குமூலம் வாங்கக்கூட முடியவில்லை. அந்த அளவுக்கு உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில் அவர் 28-ம் தேதி இறந்தார். இறப்பதற்கு முன் அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை தன் தாயாரிடம் கூறி அழுதிருக்கிறார்.
இதுபற்றி ஸ்வப்னாவின் தாயார் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஸ்வப்னாவின் கணவர் சுகுமார், மாமனார் சுரேன், மாமியார் ஷோபா ராணி, மைத்துனி திரவுபதி ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஸ்வப்னாவின் சாவுக்கு மூல காரணமாக இருந்த சாமியார், அசாமில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். nakkheeran.in
Viswaroopam இஸ்லாமிய கூட்டமைப்பு எச்சரிக்கை
சென்னை: "விஸ்வரூபம் படத்தை எங்களுக்கு திரையிட்டு காட்டிய பிறகே,
தியேட்டர்களில், கமல்ஹாசன் வெளியிட வேண்டும். இல்லையேல் ஜனநாயக ரீதியாக
போராட்டம் நடத்த வேண்டியதிருக்கும்' என, தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும்
அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.கமல்ஹாசன்
இயக்கி, நடித்துள்ள,"விஸ்வரூபம்' படம், இம்மாதம், 11ம் தேதி
வெளியிடப்படுகிறது. இப்படம் வெளியாவதற்கு, 8 மணி நேரம் முன்பாக,
டி.டி.எச்., வசதி மூலம், "டிவி'யில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு,
சினிமா தயாரிப்பாளர்களின் ஒரு பிரிவினரும், தியேட்டர்கள் உரிமையாளர்கள்
மற்றும் வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பை சேர்ந்தவர்களும், எதிர்ப்பு
தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இஸ்லாமிய கூட்டமைப்பினாலும்,
படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வியாழன், 3 ஜனவரி, 2013
எனக்குப் பிறகு ஸ்டாலின் என் பணியை தொடர்வார
அறிவாலயத்தில் பா.ம.கவினர் , தி.மு.க வில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பாமக வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் சாமுவேல் செல்லப்பாண்டியன் தலைமையில் ஏராளமான பாமக வினர் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி ''என் உயிர் உள்ளவரைக்கும் கட்சிக்காகப் பாடுபடுவேன் என்று கூறினார். அதன் பின் யார் பொறுப்பேற்பார்கள் என்ற கேள்விக்கு, ஸ்டாலினை நோக்கி எனக்குப் பிறகு ஸ்டாலின் என் பணியைத் தொடர்ந்து செய்வார் '' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார திமுக தலைவர் கருணாநிதியின் இப்பேச்சு திமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஸ்டாலின் கட்சியின் தலைவராக மு.க.அழகிரி எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கருணாநிதியின் பேச்சு அழகிரி தரப்பினருக்கு அதிருப்தியை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் கழகத்தின் மூத்த உறுப்பினர்களையும் கருணாநிதியின் பேச்சு அதிரவைத்துள்ளது. tamil.webdunia.com
டெல்லி மாணவியை அதிகம் கொடுமை படுத்தியது 17 வயது மைனர்தான் விசாரணையில் தெரியவந்துள்ளது
டெல்லியில் ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியை
பாலியல் பலாத்காரம் செய்தவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் 6
குற்றவாளிகளில் பெயர் வெளியிடப்படாத 17 வயது மைனர் பையன் தான் அதிக பட்ச
குற்றம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
கல்லூரி மாணவியும் அவரது நண்பரும் கடந்த 16ம் தேதி இரவு பஸ்சில்
ஏறியதும் அந்த மைனர் பையன் முதலில் கிண்டல் செய்துள்ளான். அதனைத் தொடர்ந்து
தான் மாணவியின் நண்பருக்கும், 6பேர் கொண்ட கும்பலுக்கும் இடையே தகராறு
ஏற்பட்டுள்ளது. அப்போது டிரைவர் ராம்சிங் கம்பியை எடுத்து மாணவியின் நண்பரை
சரமாரியாக தாக்கியுள்ளார். அதை தடுத்த மாணவியையும் இரக்கமின்றி
தாக்கியதால் மாணவி அந்த வாலிபர்களை கடுமையாக திட்டியுள்ளார்.
ராம்சிங்கிற்கு இதை கேட்டதும் ஆத்திரமடைந்துஉனக்கு பாடம் கற்பிக்கிறேன்
பார் என்று மாணவியை பலாத்காரம் செய்துள்ளான். அவனது வெறிச்செயல்
அடங்கியதும் 17 வயதுடைய மைனர் பையன் அந்த மாணவியையும் இரக்கமின்றி பாலியல்
பலாத்காரம் செய்துள்ளான். அதற்கு பிறகு அக்ஷய் என்பவன் மாணவியை
சூரையாடியுள்ளான். ஓடும் பஸ்சில் சுமார் 30 நிமிடங்கள் அந்த மிருகங்களிடம்
இருந்து சிக்கி மாணவி போராடியுள்ளார். 3 வாலிபர்களும் ஒன்று சேர்ந்து செய்த
கொடூரத்தின் உச்சமாக மாணவி மயங்கி விழுந்தார்.
மாணவி மயங்கி விழுந்த பிறகு ராம்சிங்கும், அக்ஷயும் அங்கிருந்து
நகர்ந்து விட்டனர். ஆனால் அந்த மைனர் 17 வயது பையன் மட்டுமே மீண்டும் காம
கொடூரத்தில் ஈடுபட்டுள்ளான். அவனால் தான் மாணவி நிதானமிழந்து ஆழ்ந்த மயக்க
நிலைக்கு தள்ளப்பட்டாள். இது மட்டுமின்றி வயற்றிலும் அவன் தாக்கியுள்ளான்.
மாணவியின் சிறுகுடல் காயம் ஏற்படுவதற்கு இவனே காரணம் என்று தெரிய
வந்துள்ளது. இவ்வளவு அட்டூழியத்தையும் செய்துவிட்டுஅவன் மைனர் பையன் என்ற
போர்வையில் தப்ப நினைக்கிறான். அவனை தப்பவிடக்கூடாது என்பதற்காகத்தான் அவன்
உண்மையான வயதைகண்டுபிடிக்க போலீசார் எலும்பு சோதனை நடத்தியுள்ளனர்.
பிடிபட்ட 6 பேரில் அந்த மைனர் பையன் தான் மிகக்கொடூரமான முறையில் அந்த
மாணவியை பலாத்காரம் செய்ததாக விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
வெளியாகியுள்ளன thinaboomi.com
கேரளாவில் மரண தண்டனை ! மாணவியை கற்பழித்து கொன்றவனுக்கு
A court in Thiruvananthapuram on Thursday sent an autorickshaw driver to
the gallows who raped a Class 10 student and murdered her in March
2012.
Principal sessions judge B Sudheendrakumar awarded the death penalty to
Rajesh Kumar who raped the 15-year-old victim on March
6, 2012 கேரளாவில், பள்ளி மாணவி சௌமியாவை பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு மரண தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.2012ஆம்
ஆண்டு மார்ச் மாதம் 10ம் வகுப்பு பள்ளி மாணவியை, ஆட்டோ ஓட்டுநர் பலாலியல்
பலாத்காரம் செய்து கொலை செய்தான். இது குறித்த வழக்கு விசாரணை முடிந்து
இன்று தீர்ப்பளிக் கப்பட்டது. தீர்ப்பில், குற்றவாளிக்கு மரண தண்டனை
விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அமெரிக்காவில் ரூ.28,000 கோடி முதலீடு: சிக்கினார் தாராபுரம் கொப்பரை வியாபாரி ராமலிங்கம்!
Viruvirupu
இந்த விவகாரம் தொடர்பாக வருமானவரித் துறை விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த ரூ. 28,000 கோடியும் பங்குச் சந்தை புரோக்கருடையதாக இருக்க முடியாது. இவர் மூலமாக தமிழகத்தைச் சேர்ந்த பெரும் புள்ளிகள் யாராவது அமெரிக்கப் பத்திரங்களில் முதலீடு செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
அந்த விசாரணையில், முதலாவது நபர் சிக்கியுள்ளார். இவர், தாராபுரத்தை சேர்ந்த கொப்பரை வியாபாரி.
இவரது இடங்களில் நடத்தப்பட்ட ரெயிடில், பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை வருமானவரித் துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். மொத்தம் ரூ.28,000 கோடி பண விவகாரத்தில், தாராபுரம் கொப்பரை வியாபாரி மட்டும் 2,500 கோடிக்கு பண பரிவர்த்தனை செய்திருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
சென்னையில் உள்ள தனியார் வங்கி மூலம் சமீபத்தில் எக்கச்சக்க அளவில் இந்திய பணம் அமெரிக்க டாலருக்கு மாற்றப்பட்டு பரிவர்த்தனை செய்யப்பட்டதை அடுத்தே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதை ஒரு தனி நபர் மட்டுமே செய்ததால் வங்கி நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டு, இதுபற்றி நிதித்துறை அமைச்சகத்தின் புலனாய்வு பிரிவுக்கும் தகவல் கொடுத்தனர்.
அதையடுத்து, அமெரிக்காவுக்கு பணத்தை பரிமாற்றம் செய்த நபரின் பின்னணி குறித்து விசாரணை நடத்த வருமானவரித் துறைக்கு புலனாய்வு பிரிவு மூலம் பரிந்துரை செய்யப்பட்டது. வருமானவரித் துறையினர் நடத்திய விசாரணையில் நாடு முழுவதும் மொத்தம் 27,500 கோடிக்கு பரிவர்த்தனை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒரு நபர் மட்டுமில்லாமல் பலருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த வகையிலேயே திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த கொப்பரை தேங்காய் வியாபாரி ராமலிங்கம் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து வருமானவரித்துறை புலனாய்வு பிரிவினர் தாராபுரத்தில் உள்ள ராமலிங்கத்தின் அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். அவரது அலுவலகத்தில் இருந்து அமெரிக்காவுக்கு நடந்த பணப்பரிவர்த்தனை தொடர்பாக வங்கி ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
கோவை வருமானவரித்துறை அதிகாரிகள், “தாராபுரத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அமெரிக்காவில் முதலீடு செய்திருப்பது தொடர்பாக 5 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு ஆவணமும் ஒரு பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது. இதன் மூலம் எவ்வளவு பரிமாற்றம் நடந்தது, முழு பின்னணி குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்று கூறினர்.
அமெரிக்க சட்டத் திட்டங்கள்படி எந்த நாட்டை சேர்ந்தவரும் முதலீடு செய்ய முடியும். ஆனால், இந்தியாவை பொறுத்தளவில், வெளிநாட்டில் முதலீடு செய்வதற்கு சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த விஷயத்தில் நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்கு அதிகமாக அங்கு முதலீடு செய்வதற்கு பரிவர்த்தனை நடந்திருக்கிறது.
தற்போது, தாராபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தாராபுரத்தில் கொப்பரை வியாபாரி மட்டும் 2,500 கோடிக்கு பண பரிவர்த்தனை செய்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
கொப்பரையில் எண்ணை எடுக்கலாம் என்று தெரியும். இவ்வளவு கோடிகள் எடுக்கலாம் என்று இப்போதுதான் தெரிகிறது!
புதுவையிலும் பேருந்தில் மாணவியை கடத்தி 3 பேர் மாறி மாறி கற்பழிப்பு
டெல்லியை அடுத்து
புதுவையிலும் டியூசன் சென்ற பள்ளி மாணவியை பேருந்தில் கடத்திச் சென்று 3
பேர் மாறி மாறி கற்பழித்துள்ள சம்பவம் செய்வதறியாத அதிர்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது. புதுவை
திருபுவனை பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மகள் பனிரெண்டாம் வகுப்புப்
படித்து வந்தார். புதுவையில் டியூசன் செல்வதாக கூறிவிட்டு நேற்று காலை
சென்றார். ஆனால் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள்
திருபுவணை காவல் நிலையத்தில் புகார் செய்தனர்காவல்துறையினர்
பல இடங்களில் தேடி வந்தனர். ஆனால் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் இன்று காலை மாணவி தனது பெற்றோருக்கு போன் செய்து தான்
விழுப்புரம் பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் இருக்கிறேன் என்னை
அழைத்து செல்லுங்கள் என்று கூறி விட்டு இணைப்பைத் துண்டித்து விட்டார்.உடனே
பெற்றோர் மற்றும் உறவினர்கள் காரில் விழுப்புரம் சென்று அங்கு மயங்கி
கிடந்த சுந்தரியை காரில் ஏற்றிக்கொண்டு புதுவை வந்தனர். அப்போது அந்த மாணவி
தன்னை 3 பேர் பேருந்தில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக
தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள்
மருத்துவமனையில் சேர்த்தனர்அதன்பின்னர்
காவல்துறையில் மாணவியின் தந்தை அளிக்கப்பட்ட புகாரில், "என் மகள்
வில்லியனூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது வந்த பேருந்தில்
அவருக்குத் தெரிந்த நடத்துனர் இருந்துள்ளார். அவர், என் மகளிடம் உனது தாய்
பேருந்தில் இருக்கிறார் என்று கூறி அழைத்துள்ளார். இதனை நம்பி பேருந்தில்
ஏறிய என் மகளை கடத்திச் சென்று, 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
என் மகள் கண்விழித்து பார்த்தபோது விழுப்புரத்தில் மயக்க நிலையில்
கிடந்திருக்கிறாள்" என்று கூறியுள்ளார்.இதுதொடர்பாக
காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியை அழைத்துச் சென்றதாகக்
கூறப்படும் வாலிபர் மற்றும் அவரது கூட்டாளிகளை வலைவீசித் தேடி
வருகின்றனர். http://tamil.webdunia.com
திட்டமிட்டு பாழாக்கப்படும் அண்ணா நூலகம்,திருவள்ளுவர் சிலை
கன்னியாக்குமரியில்
திருவள்ளுவர் சிலையை காக்க போராட்டம் நடத்துவது குறித்து யோசித்துக்
கொண்டிருப்பதாக திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் 02.01.2013 அன்று செய்தியாளர்களை சந்தித்த கலைஞர், அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.கேள்வி
: குமரி முனையிலே உள்ள திருவள்ளுவரின் சிலையினை இந்த அரசு சரியாகப்
பராமரிப்பதில்லை என்று தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கிறதே?கலைஞர்
: அதற்காக ஒரு போராட்டம் நடத்துவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறோம்.
திருவள்ளுவர் சிலையை மாத்திரமல்ல. சென்னை மாநகரில் அண்ணா நூற்றாண்டு
நினைவு நூலகத்தையும் திட்டமிட்டுப் பாழாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
நீங்கள் நேரில் சென்று பார்த்தால் புரிந்து கொள்வீர்கள். அங்கே அமர்ந்து
படிப்பவர்களுக்கு எந்த வசதியும் இல்லையாம். கழிவறைகளும் அசிங்கமாக
இருக்கிறதாம், புத்தகங்களும் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு வருகிறதாம்.
இவ்வாறு கூறினார். nakkheeran.in/
Admk நாஞ்சில் சம்பத் அவதூறு வழக்குகள் வாபஸ்
கடந்த
201.01.2003 மற்றும் 21.01.2003 ஆகிய தேதிகளில் சென்னை தம்பு செட்டி தெரு
வேப்பேரி தானாதெருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ கைதை கண்டித்து
நாஞ்சில் சம்பத் பேசினார். இதேபோன்று 17.4.2004 அன்று வில்லிவாக்கத்தில்
நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சி முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்து நாஞ்சில்
சம்பத் பேசினார்.
இதுதொடர்பாக
நாஞ்சில் சம்பத் மீது தமிழக அரசு 3 அவதூறு வழக்குகளை தாக்கல் செய்தது.
சென்னையில் உள்ள 4வது மற்றும் 7வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் இந்த
வழக்குகள் விசாரணையில் இருந்து வருகின்றன.
இந்த
நிலையில் இந்த 3 வழக்குகளையும் வாபஸ் பெறுவது தொடர்பாக தமிழக அரசின்
பொதுத்துறை செயலாளர் சார்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி அரசாணை
வெளியிடப்பட்டது. இந்த அரசாணைகளின் அடிப்படையில் சென்னை மாநகர அரசு வக்கீல்
எம்எல் ஜெகன், நாஞ்சில் சம்பத் மீதான 3 அவதூறு வழக்குகளையும் வாபஸ்
பெற்றுக்கொள்ள அனுமதிக்க கேட்டு குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 321ன்
கீழ் மனுதாக்கல் செய்துள்ளார்.
COIMBATORE தொழிலதிபரின் வீட்டில் 28 ஆயிரம் கோடி,,அதிர்ச்சி
COIMBATORE: The investigation wing of the Income Tax (I-T) department in Coimbatore has seized US treasury bonds
worth about Rs 27,500 crore from a 45-year- old man claiming to be a
financial broker-cum-business consultant in Dharapuram in Tirupur
district.
திருப்பூரை சேர்ந்த ராமலிங்கம் என்கின்ற தொழிலதிபரின் வீட்டில் சுமார் 28 ஆயிரம் கோடி இந்திய ரூபாய் பெறுமதியான அமெரிக்க பாண்டு பத்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது . ஒரு சாதாரண கடலை உடைக்கும் தொழில் செய்து வந்த இவருக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது என்பது எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது http://timesofindia.indiatimes.com/city/coimbatore/I-T-finds-Tirupur-man-with-US-bonds-worth-5bn/articleshow/17864771.cms?
புதன், 2 ஜனவரி, 2013
கற்பழிப்புக்கு பின்பு மாணவி மீது பஸ்ஸை ஏற்றி கொல்ல நினைத்தனர்
The police charge-sheet has revealed the bus driver in the gang-rape
case tried to run over the girl but was saved by her male friend who had
also been assaulted with iron rods. The six accused are likely to face
murder charge now. கற்பழிப்புக்கு பின்பு மாணவி மீது பஸ்ஸை ஏற்றி கொல்ல நினைத்தனர் என்பது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது . பஸ் ஓட்டுனரை அப்படி செய்ய விடாமல் தடுத்தவரே பின்பு இரும்பு கம்பியால் அடித்து எழுத்தில் எழுத முடியாத அளவு சித்திரவதையும் செய்துள்ளமை தெரியவந்துள்ளது
Shashi Tharoor மாணவியின் பெயரை இனியும் ரகசியமாக வைத்திருப்பது ஏன்
டெல்லியில் பாலியல் பலாத்காரத்தினால் உயிரழந்த மருத்துவ மாணவியின் பெயரை இனியும் ரகசியமாக வைத்திருப்பது ஏன் என்று மத்திய மனிதவள அமைச்சர் சசி தரூர் கேள்வி எழுப்பி உள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு பெயர் இருக்கிறது அவரது போராட்டம் மக்களுக்கு ஒரு மக்களுக்கு என்றும் நினைவு கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும் .
புதிதாக இயற்றப்படும் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டத்திற்கு அவரின் பெயரே வைக்கப்பட வேண்டும் என்றும் தனது twitter இல் குறிப்பிட்டுள்ளார்
புதிதாக இயற்றப்படும் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டத்திற்கு அவரின் பெயரே வைக்கப்பட வேண்டும் என்றும் தனது twitter இல் குறிப்பிட்டுள்ளார்
Tamilnadu நாளும் பெண்கள் மீதான வன்கொடுமை அரங்கேற்றம்!
அரசுக்கு உயர்நீதிமன்றம் தாக்கீது! திருமண உதவி திட்ட நிதி உயர்நீதிமன்றம் உத்தரவு" வேலூர், டிச. 29- தூத்துக்குடி மாவட்டம், திருவை குண்டத்தில் 13 வயது சிறுமி புனிதா வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஈரம் காய்வ தற்குள் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட மற்றொரு சம்பவம் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நடந் திருக்கின்றது.
அ.தி.மு.க. ஆட்சியில் தூத்துக்குடி, நாகை,
விருத் தாசலம், சிதம்பரம் என காமுகர்களின் களியாட்டத் தில் தமிழகம்
திளைத்திருக்கிறது. அடுத்து என்ன நடக்குமோ என்று தாய்மார்கள், பெற்றோர்கள்
செய்வதறியாது தவித்திருக்கிறார்கள்.
டெல்லியில் 23 வயது மருத்துவ மாணவி பேருந்
தினுள் 6 கயவர்களால் சின்னாபின்னமாக்கப்பட்டு தற்போது சிங்கப்பூர்
மருத்துவமனையில் உயிர் இழந்தார் என்பது வேதனை! இச்சம்பவத்தை இந்தியாவில்
அனைத்து மாநில பத்திரிகைகளும், பெரும் தலைப்பிட்டு செய்திகள் வெளியிட்டு
வருகின்றன. அதேபோல் தமிழகத் திலும் அனைத்து நாளேடுகளும், ஊடகங்களும்
இச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகின்றன.
அம்பானியின் சேவையில் வீரப்ப மொய்லி
மைய அமைச்சரவை சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்டபொழுது, பெட்ரோலியத் துறை
அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு,
உப்பு சப்பில்லாத அறிவியல் – தொழில்நுட்பத் துறையின் அமைச்சராக
அமர்த்தப்பட்டார். ஜெய்பால் ரெட்டி இப்படிப் பந்தாடப்பட்டதற்கு ரிலையன்ஸ்
நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி கொடுத்த நெருக்குதல்தான் காரணம் எனப் பல்வேறு
தரப்பிலிருந்தும் குற்றம் சுமத்தப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டில்
எந்தளவிற்கு உண்மையுண்டு எனப் புருவத்தை நெறித்தவர்களின் ஐயத்தைத் தீர்த்து
வைத்தார், பெட்ரோலியத் துறையின் புதிய அமைச்சர் வீரப்ப மொய்லி. நாட்டின்
எரிசக்தி பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு சில முடிவுகளை விரைவாக எடுக்க
வேண்டியிருக்கிறது” எனக் கூறியதன் மூலமும்; கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்
படுகையில் எரிவாயு வயல்களைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் ரிலையன்ஸ்
நிறுவனத்தின் கணக்குகளை மைய அரசின் தலைமைக் கணக்காயர் தணிக்கை செய்வதைத்
தள்ளிப் போட்டதன் மூலமும் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப்
போட்டுடைத்தார், அவர். vinavu.com
செவ்வாய், 1 ஜனவரி, 2013
Jeya TV யை வளர்ப்பதற்காக அரசு கேபிள் தொடங்கப்பட்டதா?
சென்னை: அதிமுக அரசு கேபிள் டிவி தொடங் குவதற்கு முன்பு இலவச சேனலாக
இருந்த ஜெயா தொலைக்காட்சியை திடீரென்று கட்டண சேனலாக மாற்றியது ஏன்? ஜெயா
டிவிக்காக அரசு கேபிள் டிவி தொடங்கப்பட்டதா? என்று திமுக தலைவர் கருணாநிதி
கேள்வி எழுப்பியுள்ளார்.திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:கேபிள்
டிவி தொடர்பாக ஜெயலலிதாவின் குற்றச் சாட்டுக்கு கருணாநிதி மவுனம்
சாதிக்கலாமா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ராமகிருஷ்ணன்
கூறியிருக்கிறாரே? ஜெயலலிதா செய்தியாளர்களிடம் கூறும்போது,
தமிழகத்தில் அரசு கேபிள் டிவி தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்க மறுக்கிறது.
சென்னையில் கலைஞர் குடும்பம் பாதிக்கக்கூடாது என்பதற்காக மத்திய அரசு
அனுமதி மறுக்கிறது என்று சொல்லியிருக்கிறார். ஜெயலலிதாவின் இந்தக்
குற்றச்சாட் டுக்கும் நான் பதிலளித்து அது டிசம்பர் 29ம் தேதி செய்தியாக
வெளிவந்திருக்கிறது. தமிழக அரசு கேபிள் டி.வி.க்கு உரிமம்
வழங்குவது தொடர்பாக மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்)
பரிந்துரைப்படி தான் மத்திய அரசு முடிவு எடுக்க முடியும். கேபிள் டி.வி.
ஒளிபரப்புச் சேவையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடக் கூடாது என்று டிராய்
பரிந்துரை செய்து விட்டது.
திருச்சி :ஆசிரியை கல்லால் அடித்து கொலை
திருச்சி
மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள விடத்திலாம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்.
இவர் அரசு பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி
அன்னக்கிளி (வயது 35). இவர் மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்
தற்காலிக ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு
சொந்தமான தோட்டம் விடத்திலாம் பட்டியில் உள்ளது. நேற்று காலை செந்தில்
வேலைக்கு சென்று விட்டார். அன்னக்கிளி தனது தோட்டத்துக்கு சென்றார். மதியம்
ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு
சிறுவன் தோட்டத்துக்கு சென்ற போது அங்கு அன்னக்கிளி தலைநசுங்கி மூளை வெளியே
வந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். இதனை
பார்த்து அலறிய அந்த சிறுவன் அந்த பகுதி மக்களிடம் தெரிவித்தான்.
இதையடுத்து அந்த ஊர் மக்கள் அங்கு ஓடோடி சென்றனர். அங்கு உயிருக்கு
போராடிக் கொண்டு இருந்த அன்னக்கிளியை மணப்பாறை தனியார் மருத்துவ மனைக்கு
கொண்டு சென்றனர். பின்னர் திருச்சிக்கு கொண்டு வந்தனர். ஆனால்
வரும் வழியிலேயே அன்னக்கிளி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அன்னக்கிளி
உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டது. தோட்டத்துக்கு சென்ற அன்னக்கிளி கொலை செய்யப்பட்ட சம்பவம்
அவரது உறவினர்களுக்கு தெரிய வந்தது. அவர்கள்
அனைவரும் பதறியடித்துக் கொண்டு மருத்துவ மனைக்கு வந்தனர். அங்கு
அன்னக்கிளியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது பற்றிய தகவல் அறிந்ததும்
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லலிதா லட்சுமி, துணை சூப்பிரண்டு மீனா,
இன்ஸ்பெக்டர்கள் கும்மராஜா, அதிவீரராம பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ
இடத்துக்கு விரைந்து சென்றனர்.கொலைநடந்த
இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி னர். விசாரணையில் தோட்டத்துக்கு சென்ற
அன்னக்கிளியை மர்ம நபர்கள் அரளை கல்லால் தலையில் பலமாக தாக்கி உள்ளதும்,
அவர் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலி, மூக்குத்தி என மொத்தம் 10 பவுன் தங்க
நகைகள் மற்றும் கால் கொலுசும் கொள்ளையடித்து விட்டு கொள்ளையர் தப்பி ஓடியது
தெரிய வந்தது. இந்த
சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி
வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட
போலீஸ் சூப்பிரண்டு லலிதா லட்சுமி கூறுகையில், குற்றவாளிகளை விரைவில் கைது
செய்வோம் என்றார். விடத்திலாம்பட்டி
கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக வெளியூரைச் சேர்ந்த 4 வாலிபர்கள் இரண்டு
மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்து உள்ளனர். அவர்களது நடவடிக்கையில்
சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள் அவர்களிடம் விசாரித்தனர். அப்போது
அவர்கள் சரியான பதில் சொல்லவில்லையாம். அந்த வாலிபர்களுக்கும் அன்னக்கிளி
கொலை, கொள்ளைக்கும் சம்பந்தம் இருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார்
விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். nakkheeran.in/
Gun License கேட்டு விண்ணப்பிக்கும் பெண்கள்
துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்கும் பெண்கள் ஓடும் பஸ்சில் மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவம், டெல்லி பெண்களிடையே பெரும் பயத்தையும், பதற்றத்தையும் உருவாக்கி உள்ளது. இதன் விளைவாக, துப்பாக்கி வைத்துக் கொள்ள விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை டெல்லியில் பெருகி வருகின்றது.துப்பாக்கி லைசென்ஸ் பெறுவதற்கான நடைமுறைகள் என்ன? என கேட்டு கடந்த 2 வாரங்களாக டெல்லி போலீசாருக்கு இதுவரை 1200 பெண்கள் தொலைபேசியின் வாயிலாக தகவல் கேட்டுள்ளனர்.சிலர் டெல்லி கமிஷனர் அலுவலகத்திற்கே சென்று, துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி? என்று விசாரித்துள்ளனர். ஒருவரின் உயிருக்கு, நிச்சயமான முறையில் அச்சுறுத்தல் உள்ளது என்பது உறுதிபடுத்தப்பட்டால், துப்பாக்கி லைசென்ஸ் வழங்கப்படும் என கூறி போலீசார் பெண்களை சமாதானப்படுத்தியுள்ளனர்.2010-ம் ஆண்டு துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்த பெண்களின் எண்ணிக்கை 320 மட்டுமே. ஆனால், 2011-ல் 800 பெண்கள் லைசென்சுக்காக விண்ணப்பித்துள்ளனர். சில பெண்கள், தங்களது தந்தை அல்லது கணவருக்கு சொந்தமான கைத்துப்பாக்கிகளை தாங்கள் உபயோகிக்க அனுமதியளிக்க வேண்டும் என போலீசாரிடம் அனுமதி கோரியுள்ளனர்.கடந்த 2 வாரங்களாக லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை மட்டும் 22 சதவீதமாக உயர்ந்துள்ளது. நேற்று வரை புதிதாக 274 பெண்கள் துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளதை வைத்துப் பார்க்கும்போது, டெல்லி பெண்களின் நிலை, பாதுகாப்பற்றதாகவே உள்ளது என கருதத் தோன்றுகின்றது nakkheeran.in
குட்டைப்பாவாடை பற்றிய பேச்சு! நடத்தையை திருத்திக்கொள்ளுமாறு பாஜக எம்எல்ஏவுக்கு கிரண்பெடி அறிவுரை!
வக்கிரபுத்தி
கொண்ட ஆண்கள் பார்வையில் இருந்து தப்பிக்க மாணவிகள் குட்டைப்பாவாடை அணிய
தடை விதிக்கவேண்டும் என்று ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் தொகுதி பா.ஜனதா கட்சி
எம்.எல்.ஏ. பன்வாரி சிங்கால் யோசனை தெரிவித்துள்ளார்.பன்வாரி சிங்கால் எம்.எல்.ஏ.வின் இந்த கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.சமூக ஆர்வலரும் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமான கிரண்பெடி கூறியதாவது:-குட்டைப்பாவாடை
அணிவதால் ஒருவரின் குணம் கெட்டுப் போகும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
குட்டைப்பாவாடை என்பது ஒரு உடை, அவ்வளவே. குட்டைப்பாவாடை அணியத் தடை
விதிக்க வேண்டும் என்று உத்தரவிடும் மக்கள் பிரதிநிதிகள் முதலில் அவர்களின்
நடத்தையை திருத்திக் கொள்ள வேண்டும், தங்களைத் தாங்களே பகுத்தாய்வு செய்து
கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து. இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதேபோல்,
தேசிய பெண்கள் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் மமதா சர்மா, மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவரும், சமூக ஆர்வலருமான சுபாஷினி அலி மற்றும்
பல கல்லூரி மாணவிகளும் எம்.எல்.ஏ.வின் கருத்துக்கு கடும் கண்டனம்
தெரிவித்து உள்ளனர் nakkheeran.in/உங்கள் பணம் உங்கள் கையில் இன்று முதல்
புதுடில்லி: மத்திய அரசு வழங்கும் மானியத்திற்கான ரொக்கம், பொதுமக்களின்
வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும், "உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டம்,
இன்று முதல் துவக்கப்படுகிறது. முதற்கட்டமாக, 20 மாவட்டங்களில் இந்த
திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. மொத்தமுள்ள, 26 மானிய
திட்டங்களில், ஏழு திட்டங்களுக்கான மானிய ரொக்கம் மட்டும், "ஆதார்' அடையாள
அட்டை பெற்றுள்ளவர்களின் வங்கி கணக்குகளில், இன்று முதல், வரவு
வைக்கப்படுகிறது.உணவு பொருட்கள், அத்தியாவசிய பொருட்களுக்கு மத்திய அரசு
வழங்கும் மானியம் மற்றும் உதவி தொகை போன்றவற்றிற்கான பணம், பயனாளிகளின்
கைகளில் நேரடியாக கிடைப்பதற்கு முன், மூன்றாம் நபர் வசம் செல்வதால்,
உண்மையான பயன்கள், பயனாளிகளுக்கு கிடைக்காத நிலை உள்ளது.உதாரணமாக, ரேஷன்
கடைகளில், மானிய விலையில், ஒரு கிலோ கோதுமை, மூன்று ரூபாய்க்கு வழங்கப்படுகிறது என, வைத்து கொள்வோம். கொள்ளை
லாபம்:வெளி மார்க்கெட்டில், ஒரு கிலோ கோதுமை, குறைந்தபட்சம், 15 ரூபாய்
வரை இருக்கிறது என்ற நிலையில், பொது வினியோக திட்டத்தின் கீழ்
வழங்கப்படும், ஒரு கிலோ கோதுமையில், 12 ரூபாய் மானியம் இருக்கிறது.பொது
வினியோக முறையில் விற்கப்படும் கோதுமை கள்ள மார்க்கெட்டில்
விற்கப்படுவதால், உண்மையான மானியம், பொதுமக்களை சென்றடையாமல், மோசடி
பேர்வழிகளுக்கு கிடைத்து, அவர்களுக்கு கொள்ளை லாபம் கிடைத்து விடுகிறது.19 மாதங்களில் நாம் செய்த சாதனைகளை மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும்.
சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பேசுகிறார் முதல்வர் ஜெயலலிதா. உடன் (இடமிருந்து) கட்சியின் அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன், அவைத் தலைவர் இ.மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அமைப்புச் செயலாளர்கள் பி.எச்.பாண்டியன், ஈ.வெ.கி.சுலோசனா சம்பத்."
வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா
கட்சியுடன் அதிமுக கூட்டணி வைத்துக் கொள்ளாது என்று முதல்வரும்,
அக்கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்தார்.சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில்
திங்கள்கிழமை நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில்
அவர் பேசியது:
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயருக்கு முன்னால் அனைத்திந்திய
என்ற வார்த்தையை எம்.ஜி.ஆர். சேர்த்ததற்கான காரணத்தை வரும் மக்களவைத்
தேர்தலில் நாம் ஈட்டப்போகும் வெற்றியின் மூலம் அரசியல் உலகுக்கு எடுத்துக்
காட்ட வேண்டும்.
இந்த நேரத்தில் அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கட்சி
நமக்கு என்ன செய்தது என்பதைவிட கட்சிக்காக நாம் என்ன செய்தோம் என்பதை
நினைத்துப் பார்க்க வேண்டும்.
போலீசார் பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்
பாலியல் தொந்தரவு: புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை: போலீஸ் மீது குற்றச்சாட்டு
பெண்களுக்கு தொடர்ந்து பா-யல் தொந்தரவு தரும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மகளிர் அமைப்பினர் 31.12.2012 திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் நடந்த பாலியல் வன்கொடுமைக்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்யும் நபர்கள் குறித்து காவல்துறையினரிடம் புகார்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் குற்றம் சாட்டினர்
பெண்களுக்கு தொடர்ந்து பா-யல் தொந்தரவு தரும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மகளிர் அமைப்பினர் 31.12.2012 திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் நடந்த பாலியல் வன்கொடுமைக்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்யும் நபர்கள் குறித்து காவல்துறையினரிடம் புகார்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் குற்றம் சாட்டினர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)












