துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்கும் பெண்கள் ஓடும் பஸ்சில் மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவம், டெல்லி பெண்களிடையே பெரும் பயத்தையும், பதற்றத்தையும் உருவாக்கி உள்ளது. இதன் விளைவாக, துப்பாக்கி வைத்துக் கொள்ள விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை டெல்லியில் பெருகி வருகின்றது.துப்பாக்கி லைசென்ஸ் பெறுவதற்கான நடைமுறைகள் என்ன? என கேட்டு கடந்த 2 வாரங்களாக டெல்லி போலீசாருக்கு இதுவரை 1200 பெண்கள் தொலைபேசியின் வாயிலாக தகவல் கேட்டுள்ளனர்.சிலர் டெல்லி கமிஷனர் அலுவலகத்திற்கே சென்று, துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி? என்று விசாரித்துள்ளனர். ஒருவரின் உயிருக்கு, நிச்சயமான முறையில் அச்சுறுத்தல் உள்ளது என்பது உறுதிபடுத்தப்பட்டால், துப்பாக்கி லைசென்ஸ் வழங்கப்படும் என கூறி போலீசார் பெண்களை சமாதானப்படுத்தியுள்ளனர்.2010-ம் ஆண்டு துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்த பெண்களின் எண்ணிக்கை 320 மட்டுமே. ஆனால், 2011-ல் 800 பெண்கள் லைசென்சுக்காக விண்ணப்பித்துள்ளனர். சில பெண்கள், தங்களது தந்தை அல்லது கணவருக்கு சொந்தமான கைத்துப்பாக்கிகளை தாங்கள் உபயோகிக்க அனுமதியளிக்க வேண்டும் என போலீசாரிடம் அனுமதி கோரியுள்ளனர்.கடந்த 2 வாரங்களாக லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை மட்டும் 22 சதவீதமாக உயர்ந்துள்ளது. நேற்று வரை புதிதாக 274 பெண்கள் துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளதை வைத்துப் பார்க்கும்போது, டெல்லி பெண்களின் நிலை, பாதுகாப்பற்றதாகவே உள்ளது என கருதத் தோன்றுகின்றது nakkheeran.in
செவ்வாய், 1 ஜனவரி, 2013
Gun License கேட்டு விண்ணப்பிக்கும் பெண்கள்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக