புனே:மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மானியத்தை,
பயனாளிகளுக்கு நேரடியாக ரொக்கமாக வழங்கும் நடைமுறை, அடுத்த ஆண்டு, ஜனவரி,
1ம் தேதி அமலுக்கு வருகிறது. இதன்மூலம், ஒவ்வொரு குடும்பத்தினரும், ஆண்டு
ஒன்றுக்கு, 32 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.வரும், 2014ம் ஆண்டில் நடைபெற உள்ள
பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு, மக்களை கவரும் வகையில், இந்த திட்டம்
அறிமுகப்படுத்தப்படுகிறது.
சமையல் காஸ் மற்றும் மண்ணெண்ணெய்க்கு வழங்கப்படும் மானியம், மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை, ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிவோருக்கு வழங்கப்படும் சம்பளம் போன்றவை, தற்போது, பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்படுவதில்லை. மறைமுகமாக, பல்வேறு வழிகளில் வழங்கப்படுகின்றன.இதை மாற்றி, ஒவ்வொரு குடிமகனுக்கும், பிரத்யேக அடையாள எண்ணுடன் வழங்கப்பட உள்ள, "ஆதார்' அடையாள அட்டை மூலம், மானியத்தையும், பண பலன்களையும், பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. http://www.dinamalar.com/