வால்பாறை மலையில் பஸ் கவிழ்ந்து விழுந்ததில் 2 குழந்தைகள்
உட்பட 7 பேர் உயிரிழந்தனர். படுகாயமுற்ற 52 பேர் மீட்கப்பட்டு பொள்ளாச்சி,
கோவை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வால்பாறையில் இருந்து பழநி நோக்கி இரவில் அரசு பஸ் புறப்பட்டது. ஆழியாறு அருகே 3 வது கொண்டை ஊசிவளைவு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தடுப்புச்சுவரை இடித்து விழுந்தது. இதில் பயணிகள் அனைவரும் 200 அடி பள்ளத்திற்குள் விழுந்தனர். தீயணைப்பு படையினர் காயமுற்ற பயணிகளை மீட்டனர். இரவு நேரம் என்பதால் இன்னும் பயணிகள் பள்ளத்தாக்கில் சிக்கியிருக்கின்றனரா என மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

பஸ் கவிழ காரணம் என்ன ? : http://www.dinamalar.com/
நேற்று வானிலை மிக மோசமாக இருந்தது. பனிப்பொழிவு காரணமாக கும் இருட்டு இருந்தது என்றும் இதனால் பஸ் டிரைவர் நிலை தடுமாறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த பகுதியில் மின்சாரம் எதுவும் இல்லாததால் மீட்பு பணியில் பெரும் சிரமம் ஏற்பட்டது. வாகனங்களின் லைட்டுகள் துணையுடன் தீயைணைப்பு மற்றும் வனத்துறையினர் காயம் பட்டு பள்ளத்தாக்கில் விழுந்து கிடந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விடிய, விடிய ஆம்புலன்ஸ்சுகள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்தில் சிக்கியவர்களை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன், சிகிச்சை விவரம் குறித்து கேட்டறிந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக