ஜாதி மறுப்பு
திருமணங்களுக்கு எதிராக, குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆண்,
ஜாதி இந்து பெண்ணை திருமணம் முடித்தால் வெறிகொள்கிறார்கள் சூத்திரர்கள்.
தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளை தீ யிட்டு
முற்றிலுமாக அவர்களின் வாழ்க்கையை சீரழிக்கிற, அவர்களை கொலை செய்கிற இன்றைய
ஜாதி வெறியர்களின் மோசமான செயல்களுக்கு நடுவே,
திராவிடர் கழகத்தின் இந்த விழா முக்கியமான ஒரு பெரியார் பணி.
ஜாதி மறுப்பு திருமணத்தை ஆதரித்து பேசுகிற
தலித் அல்லாத முற்போக்காளர்கள் கூட, தன் ஜாதி பெண்ணை தலித் இளைஞன் திருமணம்
முடிக்கிறான் என்றால், அதை எப்படியாவது தடுக்கப் பார்க்கிறவர்கள்
மத்தியில்,இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது தி.க வின் ஜாதி மறுப்பு திருமண விழா.
ஆகையால், திராவிடர் கழகத் தோழர்களுக்கு நமது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வது, நிச்சயம் நமது கடமை.http://mathimaran.wordpress.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக