நடிகை ரோஜா ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரச்சார பீரங்கியாக உள்ளார். இந்நிலையில் அவர் ஜெகன் கட்சியின் நகரி சட்டசபை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் ரோஜா அவ்வப்போது நகரி தொகுதிக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டு வருகிறார்.
இந்நிலையில் படிக்க வசதியில்லாத ஏழைக் குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் கல்விச் செலவை ஏற்க முடிவு செய்த அவர் 22 குழந்தைகளை தேர்ந்தெடுத்தார். அக்குழந்தைகளின் கல்விச் செலவுக்காக அவர்களுக்கு மாதம் ரூ.300 வழங்கவிருக்கிறார்.
இதற்கான நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட ரோஜா தான் தேர்வு செய்துள்ள 22 குழந்தைகள் தங்கள் படிப்பை முடிக்கும் வரை உதவித் தொகை வழங்கப்படும் என்றார். அவர் மேலும் கூறுகையில், பள்ளிக்கு செல்லும் ஒவ்வொரு ஏழைக் குழந்தைக்கும் மாதம் ரூ.500 உதவித் தொகை வழங்க ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளார். அவர் மட்டும் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு மேலும் பல பலன்கள் கிடைக்கும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக