தர்மபுரியில்
நடந்த காதல் திருமணம் தொடர்பாக அங்குள்ள நத்தம் காலனியில் உள்ள வீடுகள்
சேதப்படுத்தப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள்
ஆறுதல் கூறி வருகிறார்கள். தற்போது இப்பிரச்சினையை பகுஜன் சமாஜ் கட்சியும்
கையில் எடுத்துள்ளது.இந்த
தாக்குதல் தொடர்பான விவரங்களை தமிழக பகுஜன் சமாஜ் நிர்வாகிகளிடம் இருந்து
அக்கட்சி தலைவர் மாயாவதி கேட்டறிந்தார். வன்முறையில் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு அதிக இழப்பீடு வழங்கக்கோரியும், தாக்குதலில் தொடர்புடைய நபர்களை
கைது செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக நிர்வாகிகளுக்கு அவர்
ஆலோசனை வழங்கியுள்ளார்.தர்மபுரி
வன்முறை நடந்த கிராமத்திற்கு வருகிற 26-ந்தேதி மாயாவதி வருகிறார். அவரது
தலைமையில் அன்று தர்மபுரியில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடக்கிறது. தர்மபுரி
வன்முறை நடந்த கிராமத்திற்கு அம்பேத்கரின் பேரன் பேராசிரியர் ஆனந்த்
டெல்டும்டே வந்தார். அவர் அங்கு சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக