டெல்லி: தமது ஆம் ஆத்மி கட்சியானது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில்
போட்டியிடும் என்று, அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். வரும்
திங்களன்று டெல்லி ஜந்தர்மந்தரில் ஆம் ஆத்மி கட்சி தொடக்கம் பற்றி,
முறைப்படி அறிவிக்கப்படும் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். மற்ற அரசியல்
கட்சிகளுக்கு தமது கட்சி சவாலாக அமையும் என்றும், கட்சியின் தேசிய
செயற்குழுவில் 30 பேர் இடம்பெறுவர் என்றும் கூறியுள்ளார்.
நாட்டில் சுயராஜ்ஜியத்தை கொண்டுவர வேண்டுமென்பதே கட்சியின் லட்சியம் என்று கூறியுள்ளார். அரசியல் மாற்றம் நிகழும் வரை லோக்பால் சட்டமசோதா நிறைவேறாது என்று குறிப்பிட்டுள்ளார்
நாட்டில் சுயராஜ்ஜியத்தை கொண்டுவர வேண்டுமென்பதே கட்சியின் லட்சியம் என்று கூறியுள்ளார். அரசியல் மாற்றம் நிகழும் வரை லோக்பால் சட்டமசோதா நிறைவேறாது என்று குறிப்பிட்டுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக