ஞாயிறு, 17 மே, 2026

பாகிஸ்தான் பெண் நடத்திவந்த மாபியா கேங் அன்மோல் எனும் பிங்கியின் கதை

 Neander Selvan  : இந்தியாவில், ஏன் அமெரிக்காவிலோ, தென்னமெரிக்காவிலோ கூட முழுக்க பெண்களே நடத்தும் போதை மருந்து கார்ட்டல்களை காண்பது அரிது
ஆனால் பாகிஸ்தானில் அப்படி ஒரு கார்ட்டலை நடத்தி வரலாறு படைத்திருக்கிறார் அன்மோல் எனும் பிங்கி
துரந்தரில் காட்டப்பட்ட கராச்சி நகரின் சட்டவிரோத கடத்தல் குடும்பங்களில் ஒன்றில் பிறந்தவர் அன்மோல். இவரது மூன்று சகோதரர்களும் போதைமருந்து பிசினஸில் இருந்தார்கள். அன்மோல் 14 வயதிலேயே மாடலிங் ஆசையில் வீட்டை விட்டு வெளியேறி மாடலிங் துறையில் பிங்கி எனும் பெயருடன் இறங்கினார். கராச்சி மற்றும் பின்னர் லாகூரில் மாடலிங் மற்றும் பார்ட்டி கலாச்சாரத்தில் கலந்து கொண்டார். 


ஃபேஷன் மற்றும் மாடலிங் வட்டாரங்களில் நடக்கும் எலைட் பார்ட்டிகள் மூலம் பாகிஸ்தானின் பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.
இந்த எலைட் நெட்வொர்க்கில் உயர்தர போதைப்பொருட்களுக்கான தேவை அதிகமாக இருப்பதை பிங்கி கண்டறிந்தார். மாடலிங் மூலம் தனக்கு கிடைத்த தொடர்புகளையே தனது வாடிக்கையாளர்களாக மாற்றிக் கொண்ட அவர், தன் கராச்சி நெட் ஒர்க்க்கை பயன்படுத்தி தொடக்கத்தில் ஒரு சப்ளையராக நுழைந்து, பின்னர் லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி ஆகிய நகரங்களை ஆட்டிப்படைக்கும் ஒரு மிகப்பெரிய கார்ப்பரேட் பாணி போதைப்பொருள் கார்டெல்லின்  தலைவியாக உயர்ந்தார்.
மாடலிங் துறையில் இருந்த 20 பெண்கள் இவரது கார்ட்டெல்லில் இணைந்தனர். பெண்களே நடத்தும் கார்ட்டெல் என்பதால் வன்முறை, அடிதடி, நம்பிக்கை துரோகம் எதுவும் இல்லாமல் இருக்க வாடிக்கையாளரின் நன்மதிப்பு பெருகியது
பிங்கி முழுமையான கார்ப்பரேட் பாணியில் கார்ட்டெல்லை நடத்தினார். ஒரு முறையான வணிக நிறுவனம் போல ஹோம் டெலிவரி, பிராண்டட் பேக்கேஜிங் மற்றும் ரிட்டர்ன் பாலிசி போன்ற நவீன உத்திகளுடன் போதைப்பொருள் சப்ளையை இயக்கி வந்தார். இத்தகைய சிறப்பான வாடிக்கையாளர் சேவையை கண்டு ஒட்டுமொத்த பாகிஸ்தான் கார்ட்டெல்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தன
விரைவில் தொழிலை விரிவாக்கம் செய்தார். மதுவிலக்கு இருக்கும் பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட உயர்தர ரெட் ஒயின் போன்ற மதுபானங்களை ரகசியமாகத் தயாரித்து விற்றார். ஆயுத கடத்தல் கும்பல்களுக்கும் ஏகே 47 சப்ளை செய்தார்
சுமார் 20 பெண்களைக் கொண்ட ஒரு தனிப் படையை வைத்து, சொகுசுப் பகுதிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் உள்ள எலைட் பிரிவினரைக் குறிவைத்து பிசினஸ் செய்ததால் லாபம் கொட்டியது
பிங்கியின் நடமாடும் போதைப்பொருள் ஆய்வகம் மற்றும் அவரது நெட்வொர்க் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்து முற்றுகையிட, பிங்கி ஆசிட்டில் தன் கையை முக்கி எடுத்து கைரேகை கிடைக்காமல் செய்ததாக ஒரு செய்தி,. அது விபத்து எனவும் சொல்கிறார்கள். ஆனால் பிங்கி கைதாகி, அவரது நெட் ஒர்க் சம்பந்தபட்ட தகவல்கள் வெளியே கசிய விரைவில் ஊடக சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார்
கைவிலங்கு கூட போடாமல் மரியாதையாக போலிஸ் அவரை கோர்ட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருக்கிறது. சமூக வலைதளங்களில் பிங்கி படுபிரபலம் ஆகிவிட்டார்
சீக்கிரம் இவரது வாழ்க்கை வரலாற்றை ஒரு படமா எடுங்க பாலிவுட் பிஸ்தாஸ்
~ நியாண்டர் செல்வ

கருத்துகள் இல்லை: