தினமலர் : சென்னை: சினிமா தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 85.
1983ம் ஆண்டு பிரம்மச்சாரிகள் என்ற படத்தின் மூலம் திரையுலகில் தயாரிப்பாளராக கே. ராஜன் அறிமுகம் ஆனார். நம்ம ஊரு மாரியம்மா, உணர்ச்சிகள் போன்ற படங்களை இயக்கியவர். அவள் பாவம், நினைக்காத நாளில்லை, டபுள்ஸ் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர். பாம்பு சட்டை, துணிவு, பரகாசுரன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
சினிமா விழாக்கள் மற்றும் சினிமா தொடர்பான விழாக்களில் கலந்து கொள்ளும் கே.ராஜன், திரைக்கலைஞர்களின் செயல்பாடுகளை விமர்சித்து பேசியவர். யூடியூப் சேனல்களிலும் பொது மேடைகளிலும் பலரையும் விமர்சித்து பேட்டியும் அளித்தவர்.
இந் நிலையில், இவர் இன்று (மே 17) அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி எந்த விவரங்களும் வெளியாகவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக