புதன், 20 மே, 2026

தவேகவின் கள்ள லாட்டரி குடும்பத்தின் ஆயிரம் ஊழல்கள் வெளி வருகிறதே....

May be an image of one or more people

 Dr.M.Wasim Raja : தோண்டத் தோண்ட கள்ள லாட்டரி குடும்பத்தின் ஆயிரம் ஊழல்கள் வெளி வருகிறதே....
அமாவசையிடம் மாட்டிக்கிச்சே தமிழ்நாடு (4):
ஆதவ் அர்ஜுனாவிற்கு திலகவதி ஐபிஎஸ் (முன்னாள்) அவர்கள் பெரியம்மா முறை வேண்டுமாம். போலிஸும், குற்றவாளியும் தொப்புள் கொடி உறவுகளாக இருப்பதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது. இப்போது ஆதவ் அர்ஜுனா மிகவும் பொருத்தமான முறையில் பொதுப் பணித்துறையின் கமிசன் அமைச்சராக்கப்பட்டுள்ளது அபாயகரமானது. 


ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் நகர்வுகள், முடிவுகளுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அவரது மனைவி டெய்சியும், மச்சான் சார்லஸ் மார்ட்டினும் பொறுப்பு துறந்தாலும், சமீபத்தில் ஆதவ் அர்ஜுனாவின் அத்தை லீமா ரோஸ் விஜயை பூச்செண்டு கொடுத்து வரவேற்ற விதமும், அவர் அதிமுக எம்.எல்.ஏவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் ஆட்சியை ஆதரித்ததும் அவரது குடும்பத்தினர் சொல்வதை பொய் என்றே உறுதிபடுத்தியுள்ளன.
சோபாவுக்குள் பணத்தை வைத்துத் தைத்து அனுப்பி எம்.எல்.ஏ பேரம் செய்ய நிதியளித்தவரும் இதே லீமா ரோஸ் தான். தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டைத் தடை செய்து மார்ட்டின் குடும்பத்தின் அபிலாசைகளுக்கு வேட்டுவைத்த ஜெயலலிதாவின் கட்சியிலேயே லீமா ரோஸ் இணைந்திருப்பது சந்தர்ப்பவாதம் என்ற கொள்கையின் அடிப்படையில் மட்டும் தானே. 
கள்ள லாட்டரி மார்ட்டின் மீதும் அவரது மனைவி லீமா ரோஸ் மீதும் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வராததற்கு காரணம் அவர்கள் எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சிகள் உட்பட எல்லா அரசியல் கட்சிகளுக்கும் வாரி வாரி நிதியளித்து அங்கிங்கெனாத படி எங்கும் பேர சக்தியைக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தான் குறிப்பிடுவதாக உள்ளது. 
2007லிருந்தே மார்ட்டின் குடும்பம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கி வருகிறது என்றாலும் கூட அமலாக்கத்துறையின் ரெய்டுகளுக்குப் பிறகு தான் அரசியல் கட்சிகளுக்கு மார்ட்டின் குடும்பம் கொடுக்கும் நன்கொடைகளின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. மார்ட்டின் குடும்பத்தின் ஃபியூச்சர் கேமிங்க் நிறுவனம் தேர்தல் பத்திரங்களின் மூலம் நிதியளித்த ₹1,368 கோடி மொத்த தொகையில் 50 சதவீதம், மத்திய முகமைகளின் தீவிர ரெய்டு நடவடிக்கைகளுக்குப் பிறகு உடனே செய்யப்பட்டவை தான். 
2022, ஏப்ரல் 2ல் அமலாக்கத்துறை மார்ட்டின் குடும்பத்தின் மீது லாட்டரி மோசடி விசாரணையை நடத்தி  ஃபியூச்சர் கேமிங்க் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்குச் சொந்தமான ₹409.92 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களை முடக்கியது. இந்த ரெய்டு நடந்து சரியாக ஐந்து நாட்களுக்குப் பிறகு, 2022 ஏப்ரல் 7, அன்று, ஃபியூச்சர் கேமிங்க் ஒரே நாளில் ₹100 கோடியை மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் வாங்கியது. அது அந்நிறுவனத்தின் அன்றைய தேதி வரையிலான மிகப்பெரிய ஒற்றை நாள் பரிவர்த்தனைகளில் ஒன்றாகப் பதிவானது. 
2023 செப்டம்பரில் கொல்கத்தா நீதிமன்றத்தில், 'பணமோசடி தடுப்புச் சட்டத்தின்' (PMLA) கீழ் அமலாக்கத்துறை தனது முறையான குற்றவியல் புகாரைத் தாக்கல் செய்தபோது, அந்நிறுவனம் ஏற்கனவே திட்டமிட்ட முறையில் மேலும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை இந்தத் தேர்தல் பத்திர அமைப்பின் வாயிலாகச் செலுத்தியிருந்தது. 
மார்ட்டின் குடும்பம் இப்போது மறைமுகமாக நிதியளிப்பதிலிருந்து பல அடிகள் முன் தாவி “முன்னேறி” நேரடியாக ஆட்சியதிகாரத்திலும் பங்கு வகிக்கிறது. மார்ட்டின் குடும்பம் தனது ஆதிக்க சக்தியையும், பேர வலிமையையும் பரவலாக எல்லா கட்சிகளிலும் நிலை நாட்டியுள்ளது. 
கார்ப்பரேட் விவகாரத் துறை அளிக்கும் தகவல்களின் படி லீமா ரோஸ் மார்ட்டின் (இயக்குநர் அடையாள எண்-DIN 00029522) 240 நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மைகளில் (LLPs) இயக்குநர், பங்குதாரர் அல்லது தொடர்புடைய உறுப்பினராகப் பதிவு செய்யப்பட்டுள்ளார். சாண்டியாகோ மார்ட்டின் மார்ட்டின் (இயக்குநர் அடையாள எண்- DIN 00029458) 267 இயக்குநர், பங்குதாரர் அல்லது தொடர்புடைய உறுப்பினராகப் பதிவு செய்யப்பட்டுள்ளார். 
350க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களையும், சந்தேகத்திற்குரிய வணிகக் கட்டமைப்புகளின் மூலம் பல்லாயிரம் கோடி சொத்துக்களைக் கண்டறிந்த பின்னும் கூட மார்ட்டின் குடும்பத்தினரை பொருளாதார குற்றவாளிகளாக இதுவரை நீதிமன்றம் அறிவிக்கவில்லை. அவ்வாறு அறிவித்திருந்தால் அவர்களது கள்ள லாட்டரி, தொழில்வணிக செயல்பாடுகள் அனைத்தும் முடக்கப்பட்டிருக்கும்.  மக்களுக்கு எதிரான மோடி ஆட்சி குற்றவாளிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளதால் மார்ட்டின் குடும்பத்தினரால் இயக்குநராகவும், பங்குதாரராகவும், போலி நிறுவனங்களின் உரிமையாளராகவும் மோசடிகளையும், கொள்ளைகளையும் தொடர முடிகிறது. தமிழ்நாட்டில் மீண்டும் அரசு அனுமதியுடன் லாட்டரி சீட்டைக் கொண்டு வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
கள்ள லாட்டரி முதலாளியிடம் நிதி பெற்று ஒரு முதலாளித்துவ அரசியல் கட்சி ஆட்சி நடத்துவதும், கள்ள லாட்டரி முதலாளியே நேரடியாக ஆட்சி நடத்துவதும் ஒன்றல்ல. இயங்கியல் பார்வை கொண்டவர்கள் இவை இரண்டையும் வேறுபடுத்தித் தான் பார்ப்பார்கள். இவை இரண்டுமே ஒன்று தான் என்பது இயக்க மறுப்பியல் பார்வை. நிர்வாகத்தில் ஊழல் செய்யும் திமுகவின் ஆட்சிக்கு ஊழலையே நிர்வாகமாக செய்யும் கள்ள லாட்டரி குடும்ப ஆட்சி ஒரு போதும் மாற்றாகுது.

கருத்துகள் இல்லை: