![]() |
![]() |
Dr.M.Wasim Raja : விஜய்யின் கார் ஓட்டுனர் மகனை எம்எல்ஏ ஆக்குனதை பக்கம் பக்கமாக பெருமை பேசிட்டு திரியறாங்க...
இராமநாதபுரம் தேர்தல் வரலாறு:
மன்னரை வென்ற குதிரை வண்டி ஓட்டுநர்!
இன்று திமுக சார்பாகப் போட்டியிட வாய்ப்புக் கேட்கும் அறிவிப்பு வந்தால், ஒரு தொகுதிக்கு 1,000 பேர் வரை மனு செய்வார்கள். ஆனால்,
1967-ல் நடந்த மெட்ராஸ் மாநில சட்டமன்றத் தேர்தலில்
திமுகவிற்கு இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வேட்பாளரே கிடைக்கவில்லை என்று சொன்னால் அதுதான் நிஜம்.
காரணம், அங்கு
இராமநாதபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத சக்தியாகவும், அமைச்சராகவும் இருந்த இராமநாதபுரம் ராஜவம்சத்து
மன்னர் ராஜா சண்முக ராஜேஸ்வர சேதுபதியை வேட்பாளராக
நிறுத்தியது , அவர்தான்
அவர் அந்தச் சமஸ்தானத்து அரசர் என்பதால், அவரை எதிர்த்துப் போட்டியிட யாரும் முன்வரவில்லை.
பேரறிஞர் அண்ணா,
நாவலர் நெடுஞ்செழியன்
அவர்களிடம் ஆலோசனை கேட்க, அவரும் "நாம் இராமநாதபுரம் தொகுதியை விட்டுக்கொடுத்துவிடலாம்" என்று கூறினார். அண்ணாவுவோ,
ஆழ்ந்த யோசனையில் இருந்த அந்த வேளையில்தான் உள்ளே நுழைகிறார் கலைஞர்...
கலைஞர்;
"அண்ணா பாருங்க,
வேட்பாளரை கூட்டி வந்திருக்கேன் !..
அறிஞர் அண்ணா:
"ஏம்பா கருணாநிதி, ராஜாவை எதிர்த்து நிற்க ஆள் இருக்கா?"
கலைஞர்:
"ஆமாம் அண்ணே, இதோ இங்க பாருங்க..." (வேட்பாளரை அழைக்கிறார் கலைஞர்).
அறிஞர் அண்ணா:
"உங்க பேர் என்ன?"
"என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?"
வேட்பாளர்:
டி.தங்கப்பன்
நகராட்சி உறுப்பினராக இருக்கிறேன்!
"பஸ் ஸ்டாண்டில் குதிரை வண்டி ஓட்டுகிறேன்."
(இதைக் கேட்டு அண்ணா ஆடிப் போய்விட்டார். அண்ணா கலைஞரிடம் தனியாகப் பேசுகிறார்...)
அறிஞர் அண்ணா:
"ராஜாவை எதிர்க்கிற ஆளா இவரு? கருணாநிதி... ராஜாவை எதிர்த்து நிற்க ஒரு ராஜா வேஷம் போட்டவர் கூடவாப்பா உனக்குக் கிடைக்கவில்லை?"
கலைஞர்: "வேட்பாளராக இவரைத்தான் நீங்க நிறுத்த வேண்டும் அண்ணா."
அண்ணா:
"இங்க பார் கருணாநிதி, ஒன்று நம்மைக் கேவலப்படுத்திக்கொள்ளக் கூடாது, அதே நேரத்தில் ராஜாவையும் கேவலப்படுத்தக் கூடாது.
கலைஞர்:
"பாருங்க அண்ணா, இதில் ஜெயித்தாலும் தோற்றாலும் நமக்கு வெற்றிதான் ! வேட்பாளரை
"நிறுத்துங்கள் அண்ணா, மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்."
கலைஞரின் பிடிவாதத்தால் அண்ணாவும் ஒத்துக்கொண்டார்
மன்னர் ராஜா சேதுபதி, "யாரடா என்னை எதிர்த்து நிற்பது?" என்று கேட்க, "நம்ம பஸ் ஸ்டாண்ட் தங்கப்பன்" என்று அவரின் பணியாள் கூறினார். மன்னருக்குத் தங்கப்பன் யார் என்றே தெரியாது. "அவன் என்ன செய்கிறான்?" என்று மன்னர் கேட்க, "குதிரை வண்டி ஓட்டுகிறான்" என்று பணியாள் பதில் சொல்ல. "அவனை நிற்க வைத்தது யார்?" என்று மன்னர் கேட்க, "திமுகவினர்" என்று பதில் வந்தது.
இதைக் கேட்ட மன்னர், "ஒரு குதிரை வண்டி ஓட்டுபவரை எதிர்த்து இதற்கு மேலேயும் நான் தேர்தலில் வந்து பிரசாரம் செய்ய வேண்டுமா?" என்று ஏளனமாக நினைத்து. அரண்மனைக்குள்ளே போனவர்தான், பிரசாரத்திற்காக வெளியே வரவே இல்லை. காரணம், 'தான் ஒரு ராஜா, தன்னை எதிர்த்து நின்று யாராலும் வெல்ல முடியாது' என்ற அதீத நம்பிக்கையும் கர்வமும்தான்.
கலைஞரின் இறுதிநேரப் பிரசாரம்
தேர்தல் பணிகளுக்கு நடுவே கலைஞர் தொலைபேசியில், "இராமநாதபுரம் நிலவரம் எப்படி இருக்கிறது?" என்று கேட்க, "மன்னர் அரண்மனையை விட்டு வெளியே வந்து ஓட்டுக் கேட்கவில்லை" என்ற தகவலை திமுகவினர் சொன்னார்கள். "சரி, கவலையில்லை. தேர்தல் பிரசாரத்திற்கு கருணாநிதி வருவதாக அறிவித்து விடுங்கள்" என்றார் கலைஞர்.
இறுதி நாள் பிரசாரத்தின் போது கலைஞர் இராமநாதபுரம் வந்தார். மக்களின் கூட்டத்தில் அவர் பேசும்போது:
"மக்களை மதிக்காத மன்னனைப் பார்த்தீர்களா? ஒரு ஏழை உங்கள் வீட்டிற்கு வந்து, உங்கள் காலில் விழுந்து ஓட்டுக் கேட்கிறான். நீங்களே முடிவெடுங்கள்! உங்களை மதிக்காத மன்னனுக்கு உங்கள் ஓட்டா? அல்லது உங்களுக்காகப் பாடுபடுவேன் என்று தெருவில் நின்று கேட்கும் இந்த ஏழைக்கே உங்கள் ஓட்டா?"
என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிப் பிரசாரத்தை நிறைவு செய்தார் கலைஞர்.
கலைஞரின் அந்த இறுதிநேரப் பிரச்சாரம் ஒட்டுமொத்தத் தேர்தலையே மாற்றி அமைத்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகின.
காங்கிரஸ் அமைச்சர்
ராஜா சேதுபதி 15,692
திமுகவின்
டி. தங்கப்பன் 24,302
8,610 வாக்குகள் அதிகமாகப் பெற்று,
எளிய வேட்பாளர் தங்கப்பன் வரலாற்று வெற்றி பெற்றார்!
இந்த அசாத்திய வெற்றியைப் பாராட்டிய மூதறிஞர் ராஜாஜி (சி. ராஜகோபாலாச்சாரி), எளிய பின்புலத்திலிருந்து வந்து ஒரு மன்னரையே தோற்கடித்த டி. தங்கப்பனை "தென்னிந்தியாவின் ஜூலியஸ் சீசர்" (The Julius Caesar of South India)என்று புகழ்ந்துரைத்தார்
இது வெறும் தேர்தல் அல்ல, வரலாறு!
திமுக எப்போதுமே வரலாற்றில் இடம்பெறும் சாதனைகளை நிகழ்த்திக் காட்டும் மக்களுக்கான இயக்கம்...
அது ராஜாவாக இருந்தாலும் சரி,
ராஜ் பவனில் இருப்பவராக இருந்தாலும் சரி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக