ஞாயிறு, 17 மே, 2026

திரு டி பி எஸ் ஜெயராஜ் அவர்கள் காலமானார்!

May be an image of one or more people and text that says "By yD.B.SJeyaraj D.B.S Jeyaraj"

 ராதா மனோகர் : இலங்கையின் புகழ் பெற்ற பத்திரிகையாளர் திரு டி பி எஸ் ஜெயராஜ் அவர்கள் காலமானார்!
ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகப்பெரும் ஆற்றலை கொண்ட எழுத்தாளர் 
மிகவும் சிக்கலான போர் சூழலில் மிக மிக நுட்பமாக செய்திகளை மோப்பம் பிடித்து எழுதுவதில் தனித்திறமையோடு செயல்பட்டார்.
ஈழ போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதையும்,
 பிரபாகரன் உட்பட ஏனைய தலைவர்களும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதையும் இவர் மூலம்தான் உலகம் அறிந்து கொண்டது. 
 இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் உயிராபத்து இருந்தும் துணிந்து பல இடங்களிலும் தொடர்புகளை பேணி அவற்றின் மூலம் பல செய்திகளை பொதுவெளிக்கு கொண்டுவந்தார் 
புலிகளால் கொலை அச்சுறுத்தல் அளவு கணக்கில்லாமல் இருந்த போதும் ஒரு கத்தி மேல் நடப்பது போல் நடந்து பணியாற்றினார் 
சமாதான ஒப்பந்த காலத்தில் இவர் ஆற்றிய எழுத்துப்பணி வரலாற்றில் என்றும் நினைவு கூறத்தக்கது 
இவரின் அந்த பணிக்கு பரிசாக கனடாவில் இவர் கொடூரமாக தாக்கப்பட்டார் 


இவரின் கால் முறிந்து அதன் வேதனையை பலநாள் அனுபவித்தார் 
காலமெல்லாம் ஒரு தமிழ் தேசியவாதியாகவே வாழ்ந்த திரு ஜெயராஜ் அவர்களையும் கூட புலிகள் மோசமாக நடத்தினார்கள்.
இத்தனைக்கும் திரு அன்டன் பாலசிங்கத்தோடு நல்ல நட்பில் இருந்தார்.
இலங்கையின் சமாதான முயற்சிக்கு ஆதரவாக செயல்பட்டதால் இவரின் மஞ்சரி பத்திரிகை துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டது 
அந்த காலக்கட்டத்தில் மஞ்சரி பத்திரிக்கை விற்பனையில் பிரமாண்டமான சாத்னையை நிகழ்த்தி கொண்டிருந்தது  .கொஞ்சம் தாமதமானாலும் கடைகளில் அவை விற்று தீர்ந்து விடும் 
அந்த இடத்தை இதுவரை புலம்பெயர் நாடுகளில் எந்த பத்திரிகையும்  பெறவில்லை.
இவரின் நீண்ட நாளைய நண்பரான ஹிந்து பத்திரிகையின் என் ராம் அவர்கள் உடனே இவரை தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி விசாரித்து விட்டு கவலை படாதீர்கள் உங்களுக்கு எமது ஹிந்து பத்திரிக்கை எப்போதும் துணையாக இருக்கும் என்று கூறிவிட்டு 
பணிபுரிய அழைத்தார். 
தனது இறுதி காலம் வரை உலகின் பல செய்தி நிறுவனங்களோடு தொடர்பில் இருந்தார்  
இவரின் எழுத்துக்களுக்கு  அவ்வளவு மரியாதையை இருந்தது. 
இவரின் அரசியல் கட்டுரைகள் மட்டுமல்ல பல்துறை சார்ந்த கட்டுரைகளும் சுவாரசியமானவைதான் 
குறிப்பாக கர்நாடக சங்கீதத்தில் இவருக்கு பரிச்சயம் உண்டு  
பல இசைமேதைகளின் வரலாறு மற்றும் கச்சேரிகள் பற்றியும் அடிக்கடி எழுதியுள்ளார் 
திரை உலகம் சார்ந்த கட்டுரைகளும்  தரம்வாய்ந்தவைதான் 
குறிப்பாக தமிழ் திரையுலகம் பற்றிய இவரது ஆங்கில கட்டுரைகள் சிங்கள வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவையாகும்.
திரு காமினி பொன்சேகா பற்றிய இவரின் கட்டுரை மிகவும் சிறப்பானது 
சிங்கள எழுத்தாளர்கள் கூட திரு காமினி பற்றி இவர் எழுதிய அளவுக்கு  பொருளோடு எழுதவில்லை 
எனது இலங்கை திராவிடம் பற்றிய கட்டுரைகளை வாசித்து விட்டு என்னோடு ஒரு முறை தொடர்பு கொண்டு  இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாண திராவிட வரலாறு பற்றி மிகவும் சுவாரசியமான கருத்துக்களை பரிமாறி கொண்டார்  
பல தடவை நாம் கருத்துக்களை பரிமாறி உள்ளோம் 
திராவிட கருத்தியலில் நண்பர் ஜெயராஜுக்கு கொஞ்சம் ஒவ்வாமை இருந்தது 
அது மட்டுமல்ல யாழ் மையவாத கருத்தியலுக்கும் மிகுந்த ஆதரவாக இருந்தார் 
இவை காரணமாக நான் திரு ஜெயராஜ் அவர்களோடு  கொஞ்சம் தூரத்திலேயே இருந்தேன் 
இவை கருத்து வேறு பாடுகள்தானே தவிர நட்பு முரண்பாடுகள் அல்ல! 
திரு டி பி எஸ் ஜெயராஜ் அவர்களின் எழுத்துக்கு நான் என்றும் ஒரு ரசிகன்தான் 
இவரின் எழுத்துக்கள் இலங்கை வரலாற்றை என்றும் நினைவு கூறும் 
எனது புகழஞ்சலி உரித்தாகட்டும் 
    

கருத்துகள் இல்லை: