தினமலர் : ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் தொடர்பான வழக்கில், காப்பிரைட் சட்டப்படி ‛‛ஒரு பாடலின் இசைக்கு மட்டுமே இசையமைப்பாளர் உரிமை கோர முடியும், முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது'' எனக் கூறி இளையராஜாவின் மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
‛என் இனிய பொன் நிலாவே' பாடல், பதிப்புரிமை தொடர்பாக இளையராஜா டில்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று (மே 21) நீதிபதிகள் ஹரி சங்கர் மற்றும் ஓம் பிரகாஷ் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது காப்பிரைட் சட்டப்படி ‛‛ஒரு பாடலின் இசைக்கு மட்டுமே இசையமைப்பாளர் உரிமை கோர முடியும், முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது'' எனக் கூறி இளையராஜாவின் மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ், இசைப் படைப்பு என்பதன் அடிப்படையில் பாடல் வரிகள் அல்லது ஒலிப்பதிவுகள் அடங்காது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக