![]() |
Giri Sundar : செம்மலை அஇஅதிமுகவிலிருந்து விலகும் முன் இரண்டு விஷயங்களை உறுதிப்படுத்திவிட்டுத்தான் விலகியிருக்கிறார்.
கட்சியை பலப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் மூத்த தலைவர்கள் முக்கிய நிர்வாகிகளிடம் இல்லை.அதிமுக தலைவர்கள் மூத்த நிர்வாகிகளிடம் இருக்கும் ஈகோ கட்சியின் வளர்ச்சியை வேகத்தடை போல் தடுக்கிறது.
தன்னுடன் சக அமைச்சரவையில் அமைச்சராக பயணித்த ஒருவரை முதல்வர் வேட்பாளராகவோ அல்லது இயக்கத்தின் தலைமையாகவோ ஏற்றுக்கொள்ளும் எந்த எண்ணமும் இவர்களிடத்தில் இல்லை.
தங்கள் மாவட்டங்களில் மற்றும் தங்களது மாவட்டங்களை கடந்தும் தாங்கள் கட்சியில் செய்யும் குறுநில மன்னர் ஆட்சியை கண்டும் காணாது இருக்க தங்கள் விருப்பம் போல் செயல்பட ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பொதுச்செயலாளரே இவர்களுக்கு தேவைப்பட்டார்.
அதற்காகவே இவர்கள் எடப்பாடியாரை முன்னிறுத்தினார்கள்.ஆனால் அவரோ தொண்டர்கள் விரும்பும்
இப்படியே போனால் நம் மாவட்ட பதவிக்கு ஆபத்து வந்துவிடும் எனக்கருதுவதால் இவர்கள் புதிதாக ஒரு ரப்பர் ஸ்டாம்பை தேடுகின்றனர்.அதற்கு இவர்களுக்கு அதிகாரம் வேண்டும் அதனால் தவெகவின் அமைச்சரவையில் பங்கேற்க தயாராகிவிட்டனர்.
கட்சியின் தோல்விக்கு பொதுச்செயலாளர் எடப்பாடியாரை குற்றம் சாட்டுவதை ஏற்க மாட்டேன். தேர்தலுக்கு அவர் கடுமையாக உழைத்தார்.அவர் வெற்றிக்கோட்டை எட்டாததற்கு ஏற்கனவே எங்கள் கட்சியில் குழப்பங்கள் இருந்தன.எங்களுடைய இயக்கத்தில் பிளவுப்பட்ட சூழல் நிலவியதால் அவரது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.அவரை குற்றம் சாட்ட முடியாது.அவர் கட்சியையும் சிறப்பாக நடத்தி வருகிறார்.
தேர்தலுக்கு முன் எடப்பாடியார் நீக்கிய அத்தனை பேரும் அவரது சுயவிருப்பத்தின் பேரில் நீக்கியது இல்லை.
எல்லாமே மாவட்ட செயலாளர்களின் பரிந்துரையை ஏற்று நீக்கம் சேர்த்தல் பதவிகள் வழங்குவது சட்டமன்ற தேர்தலுக்கு சீட்டு வழங்குவது என அனைத்துமே மாவட்ட செயலாளர்களின் பரிந்துரைகள் மட்டுமே முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
உதாரணம்....
விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் லட்சுமணனை சி.வி.சண்முகத்திற்காக ஒதுக்கி வைத்தார்.அந்த லட்சுமணன் திமுகவில் ஐக்கியமாகி 2021 தேர்தலில் சி.வி.சண்முகத்தை விழுப்புரத்தில் தோற்கடித்தார்.
அந்த லட்சுமணனுக்கு பயந்து கொண்டு 2026ல் மைலம் தொகுதிக்கு ஓடினார் சண்முகம்.ஏன் ஓடினார் என்று 2026 தேர்தலில் விழுப்புரம் சட்டமன்ற தேர்தல் முடிவுகளை பார்த்தாலே தெரியும்.
ஆம் அங்கு லட்சுமணனே மீண்டும் வெற்றிப்பெற்றுள்ளார்.
தஞ்சையில் பல்லாயிரம் ஏக்கர் நிலம் வேலுமணிக்கு சொந்தமாகியிருக்கிறது அதை எதிர்த்து கேள்வி கேட்ட வைத்திலிங்கம் கட்சியை விட்டு நீக்கப்படுகிறார்.
அவர் திமுகவில் இணைந்து எம்எல்ஏ ஆகிவிட்டார்.
அந்த பல்லாயிரம் ஏக்கரை பராமரிக்கும் சேகர்,சரவணனை மாவட்ட செயலாளராக பரிந்துரைக்கிறார் வேலுமணி அவர்களும் மாவட்ட செயலாளர்கள் ஆகிவிடுகின்றனர் இன்று மணியின் Money பவரால் அவரோடு இணைந்திருக்கிறார்கள்.
அரசியலில் வெற்றியை மட்டுமே நோக்கி பயணிக்கும் இன்னொருவர் செந்தில்பாலாஜி தான் வெற்றி பெற தான் நிறுத்திய வேட்பாளர் வெற்றிபெற என்ன வேண்டுமானாலும் செய்து வெற்றியை பெற்றுவிடுவார் செந்தில் பாலாஜி.அந்த செந்தில் பாலாஜி மீண்டும் இயக்கத்திற்கு வர நினைத்தபோது தடுத்தவர் விஜயபாஸ்கர்.
கோவையில் அம்மா காலத்திலேயே மாபெரும் மாவட்ட செயலாளராக விளங்கியவர் வேலுச்சாமி.அந்த வேலுச்சாமி கிட்டத்தட்ட 20ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டிறுந்தார் காரணம் மணி.
அவர் ஒதுங்கி இருந்தார் ஆனால் மாற்று இயக்கத்தில் சேரவில்லை எனவே இப்போது மீண்டும் மாவட்ட செயலாளராகியிருக்கிறார்.
தங்கத்தமிழ்செல்வன் மீண்டும் அதிமுகவிற்கு வரமுடியாமல் திமுகவிற்கு செல்லவைத்தவர் ஓபிஎஸ்.அந்த ஓபிஎஸ்சே திமுகவிற்கு போனார் என்பது இன்னொரு சுவாரசியம்.
பழனியப்பன் மீண்டும் அதிமுகவிற்கு வர எத்தனித்த போது தடுத்தவர் கே.பி.அன்பழகன்.பழனியப்பனும் திமுகவில் ஐக்கியம்.
Fill in the blanks போல் ஏனைய மாவட்டங்களில் ஒதுக்கப்பட்ட மூத்த நிர்வாகிகளின் பட்டியலை நீங்கள் கமெண்டில் தெரிவிக்கலாம்.
இதுபோன்று தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் தனக்கு போட்டியாக இருந்தவர்களை எல்லாம் ஒதுக்கி அவர்களை மாற்று இயக்கத்தில் பயணிக்க வைத்தவர்கள் இந்த கட்சியின் குறுநில மன்னர்கள்.
உங்கள் பேச்சை கேட்டு கட்சி தலைமை அவர்களை நீக்கியது அவர்களை மீறி உங்களால் அந்தந்த மாவட்டங்களில் கட்சியை உங்களால் வெற்றி பெற வைக்கமுடியவில்லை என்றால் நீங்கள் மாவட்ட செயலாளர்களாக இருக்கவே தகுதியற்றவர்கள் என்றுதானே அர்த்தம்???
இவர்களால் ஒதுங்கிய அனைவரையும் அரவணைக்க இவர்கள் நினைத்திருந்தால் இன்று கழகம் வெற்றிய்டைந்திருக்கும்.
இந்த பேருண்மைகளை மறைத்துவிட்டு கட்சியின் பொதுச்செய்லாளரின் முதுகில் குத்துவது எந்த விதத்தில் நியாயம்??

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக