சுப.மோகன் ராஜ் : காங்கிரஸார் ஆட்சியில் பங்கு என்று கேட்பதன் பின்னணி?
காங்கிரஸ் குரங்கு குட்டிகளை விட்டு ஆழம் பார்க்கும் தந்திரத்தை செய்கிறது, இது ஏதோ ராகுல் காந்தி அவர்களுக்கு தெரியாமல் நடக்கும் விசயம் கிடையாது அவர் ஆசியோடே தான் வாய்துணுக்கோடு மாணிக் தாகூர் ஜோதி மணி போன்றவர்கள் பேசுகிறார்கள் இதை உறுதி செய்ய பீட்டர் அல்போன்ஸ் அவர்களுடைய காணொளி உதவியது.
காங்கிரஸின் நோக்கம் இதை சாக்காக வைத்து அதிக இடங்களை பெறுவது, அதுவும் எம்எல்ஏ சீட் கேட்கும் ஆட்களை வைத்து பேசினால் அது தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் திமுக ஆட்கள் வேலை செய்ய மாட்டார்கள் என்று கருதி ஏற்கனவே எம்பியாகி விட்ட ஆட்களை வைத்து காங்கிரஸ் பேசுகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் இந்த மண்டை கோளாறு உண்டு அது மறந்துவிட கூடாது 2029 நாடாளுமன்ற தேர்தலை, இன்று தலைமை தூண்டி விட்டதை நம்பி திமுகவை சீண்டிய அனைவரும் பலியாடுகள் தான் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
ராகுல் அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் உங்கள் கட்சியே உங்களை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க தயங்கிய வேளையில் அதனை செய்தவர் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அதற்கு தக்க நன்றியை காட்டுகிறீர்கள் ஆனால் Stalin is more dangerous than kalaingar.
காங்கிரஸை தூக்கி எறிந்தால் திமுகவுக்கு அநேக நன்மைகள் கிடைக்கும், உங்களை போல 2ஜி வழக்கின் போது திமுகவை கைகழுவினீர்களே? ஆனால் இன்றைய திமுக தலைமை உங்களை இடது கையால் தான் அணுகுகிறது அது சரியும் கூட. இது போன்ற gimmicks களுக்கு அஞ்சுவது திமுக வின் வழக்கம் கிடையாது தேர்தல் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு உங்களுடன் அவர்கள் பேசும்போது தெரியும்.
ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026
காங்கிரஸ் குரங்கு குட்டிகளை விட்டு திமுகவின் ஆழம் அளக்கிறது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக