ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

மலையக பத்திரிகையாளர் திரு பாரதி ராஜநாயகம் காலமானார்

மூத்த பத்திரிகையாளர் இராஜநாயகம் பாரதி தனது 63ஆவது வயதில் இன்று(09)  காலமானார்...

எஸ்தர் - கவிஞர் ஃஎழுத்தாளர் - மலையகம் : ஒரு தலைமுறையின் மனசாட்சியாக திரு பாரதி ராஜநாயகம்
அன்னார் திரு பாரதி ராஜநாயகம் மறைவுபெற்ற மூத்த பத்திரிகையாளர் மற்றும் ஊடக துறையின் பெருமையை அருளிய சமூக ஆர்வலர் ஆவார் இவர் நீண்ட காலம் .இலங்கை தழிழ் ஊடகத்தில் முக்கிய பங்கு வகித்து உண்மையான செய்தியாளராக தன்னை நிறுவியுள்ளார்.(வுயஅடை புரயசனயைெ)
 பத்திரிகை வாழ்க்கையும்  பாரதியும்
பொது பெயராக ராஜநாயகம் பாரதி என அறியப்பட்டார் .பல சொற்ப மொழிவுகள் மற்றும் ஆழமான ஆய்வுக் கட்டுரைகளின் மூலம் தமிழ் ஊடகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.தனது ஊடக வாழ்க்கையை 1980 களில் தொடங்கி, பல முக்கிய நாளிதழ்களில் பணயாற்றினார்.நாற்பது ஆண்டுகால பத்திரிகை வாழ்வு அவருடையது. அப்போதுதான் தோண்டிய மண் உதிரா மரவள்ளிக் கிழங்கு போன்ற எழுத்துக்களை தமிழ் பரப்பில் எழுதும் ஆற்றல் மிக்கவர்.


பணி புரிந்த ஊடக அமைப்புகள்
தினக்குரல் - வாரமலர் மற்றும் இணைய பதிப்பின் முன்னாள் ஆசிரியர்
வீரகேசரி – யாழ்ப்பாண பிராந்திய தலைவராக கடைசிளாக பணியாற்றினார்.
இதற்கு முன்னர் ஈழமுரசு ,முரசொலி,ஈழநாடு போன்ற பல ஊடகங்களிலும் நுட்பமான செய்தியாளராக பணிபுரிந்தார்.தமிழ் விடுதலை இயக்கத்தின் வரலாறையும் சாதாரண மக்களின் குரலையும் கவனமாக பதிவு செய்தார்.ஆபாயகரமான மற்றும் நெருக்கமான அரசியல் ஃ பாதுகாப்பு சம்பவங்களை அதிர்ச்சியில்லாமல் பகுப்பாய்வு செய்ததாகவும் புகழ் பெற்றார்.ஊடக சுதந்திரம் மற்றும் மனித உரிமை தொடர்பாக நேர்மையான எழுத்தாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் தன்னைத்தானே நிறுவினார்.
மறைவு
திரு பாரதி 09ஃ02ஃ2025 அன்று யாழ்ப்பணத்தில் உடல் நலக்குறைவால் மரணமானார்.அவரது மறைவிற்கு பலர் ஊடகத்துறையினரும் மறற்றும் சமூக பார்வையாளர்களும் இரங்கல’ தெரிவித்தனர்.இறுதிச் சடங்குகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன.ஊடக நண்பர்கள் அரசியல் மற்றும் சமூகத்தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.

திரு பாரதி ராஜநாயகம் அவர்கள் போர்காலத்தில் மக்களின் பெரும் அவலங்களை அவர்களின் நேரடி கள விஜயத்தில் நின்று எழுதினார்.யாழ்ப்பாணம் ,வன்னி, மலைநாடு பகுதிகளில் பொதுமக்கள் எதிர் கொண்ட இடப்பெயர்வு ,உணவு குறைகாடு,பாதுகாப்பு சிக்கல்கள் குறித்து நேரடி கள அறிக்கைளை எழுதினார்.இவை வீரகேசரி ,ஈழநாடு பத்திரிகைகளில் வெளிவந்தவை.சிறிதேனும் உணர்ச்சி வசப்படாமல் உண்மை தரவுகளுடன் எழுதும் நடை திரு பாரதியினுடையது. தமிழ் அரசியல் பகுப்பாய்வு கட்டுரைகளில் தமிழ் அரசியல் இயக்கங்களின் உள்நிலை முரண்பாடுகள் தலைமைப் போக்குகள் போருக்கு பிந்தைய அரசியல் சவால்கள் குறித்து ஆழமான விமர்சனங்களை முன் வைத்தார். ஒரு புறச்சார்பில்லாத விமர்சன அணுகுமுறை திரு பாரதி ராஜநாயகம் அவர்களுடையது.மனித உரிமை மிறல்கள் ஊடக சுதந்திரம் ஊடகவியலாளர்கள் எதிர் கொண்ட அச்சுறுத்தல்கள் செய்தி ஒளிப்பதிவில் அரசியல் தலையீடுகள் மனித உரிமை குறித்த ஆய்வுக்கட்டுரைகளை மிக தைரியமாகவும் துல்லியமாகவும் முன்வைத்தார்.ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் தெளிவான நிலைப்பாடும் அவருக்குள் இருந்ததை அவரது கட்டுரைகளே சாட்சியாகும்.மறைந்த எழுத்தாளர்கள் ,பத்திரிகையாளர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் குறித்தும் மனிதநேய நினைவுக் கட்டுரைகளை திரு பாரதி எழுத தவறவில்லை.சம்பவங்களோடு மனித மனதையும் பதிவு செய்தார். சமூக விமர்சனத்தொடர்களையும் எழுதினார் கல்வி வேலைவாய்ப்பு இளைஞர் அரசியல் மலைநாட்டு தமிழர் பிரச்சினைகள் முதலான புறக்கணிக்கப்பட்ட சமூகங்களின்  குரலாகவும்  இவர் இருந்தார். அவரது எழுத்துப் பாணி சுரக்கமாகவும் எளிய தமிழ் ஆழமான கருத்தாகவும் வாசிக்கப்படுகின்றது.எழுத்து உணர்ச்சியை விட உண்மைக்கு முன்னுரிமை தந்ததுடன் செய்தி என்பது ஆவணம் என்ற நம்பிக்கையை பாரதி கொண்டிருந்ததுடன் அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நம்பகத்தன்மையில் உறுதியாக இருந்தார்.
பாரதி ராஜநாயகம் அவர்கள் மலைநாட்டு தமிழர் பிரச்சினையில் பல முக்கிய விடயங்களை பத்திரிகையில் முன்வைத்தார்.தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை மட்டுமல்ல  அது அம்மக்களின் அடையாளம் ,அவர்களின குடியுரிமை, மனித மரியாதைபபற்றிய பிரச்சினை என்பன பாரதியின் எழுத்துக்களில் பிரதிபலித்துக்கொண்டேயிருந்த துமலையக மக்களின் குறைந்த சம்பளம் குடியிருப்பகளின் வசதிபளின் அவலம் கல்வி வாய்ப்பின்மை இவை அனைத்தும் ஒரே சங்கிலியின் கண்ணிகள் எனக் குறிப்பிடுகின்றார்.
தோட்ட அரசியல் தலைமைகளின் தோல்வியை பாரதி அவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளார்.மலைநாட்டு அரசியல் தலைமைகள் தொழிற்சங்க அரசியல் என்பது தோட்ட தொழிலளர்களும் தேர்தல் காலத்திலேயே தேவைப்படுகின்றது என்பதுடன் அம்மக்கள் தேர்தல் முடிந்தவுடன் பழைய குரடி கதவை திறடி என மறக்கப்படுகிறார்கள் என்பதை பாரதி வெர்கள் பல சந்தர்ப்பங்களில் சாடியுள்ளார்.
மலையக மக்களுக்கு தொடர்ந்து பிரச்சினையாக இருக்கும் குடியுரிமை பிரச்சினையையும் பாரதி அவர்கள் தொடந்தும் எழுதினார்.குடியுரிமை மறுப்பு, மற்றும் இநதியாவுக்கு மக்களை திருப்பி அனுப்புதல் சிறீமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலமும்; இன்னும் பல ஒப்பந்தங்கள் மூலம் மலையக தமிழர் பலியாகியமையை தொடர்ந்தும் எழுதினார்இது இலங்கை அரசியலல் மிக்பெரிய  மனித உரிமை காயம் எனக் குறிப்பிட்டார்.மலையக மக்களுக்கு எந்த வாய்ப்புக்குளுமே இல்லை ஒரு தலைமுறைக்கு கல்வி மறுக்கப்படும் போது அந்த சமூகத்துக்கே எதிர்காலம் மறுக்கப்படுகின்றது.அதுவே மலைநாட்டு தமிழரின் மிகப்பெரிய சோகம் யுத்தமும் அபிவிருத்தியும் இரண்டிலும் வெளியே இம்மக்கள் யுத்த காலத்தில் பாதுகாப்பற்றவர்களாகவும் யுத்தத்துக்க பின்னர் அவர்க்ள் அபிவிருத்தியில் பின் தள்ளப்பட்டவர்களே வடக்கின் அரசியலும் தெற்கின் அதிகாரமும் இடையில் சிக்கிய ஒரு தனிமையான சமூகமாகவே மலையக மக்கள் இருந்தனர் என்பதை பாரதி தௌவாக பதிவு செய்ததர்.மலையக மக்கள் ஒரு தனிமையான சமூகமாகவே வாழ்கிநார்கள் முடிவாக மலைநாட்டு தமிழர் பிரச்சினை ஒரு தொழிலாளர் பிரச்சினை அல்ல. அது அடையாளத்தின் பிரச்சினை உரிமையின் பிரச்சினை என்றார்.சம்பளம் உயரலாம் ,ஆனால் மரியாதை கிடைக்காவிட்டால் அவ் உயர்வு அர்த்தமற்றது ஒரு சமூகத்தை விடுவிப்பது கூலியால் அல்ல மனித உரிமையால்தான் .இலங்கையின் மலைநாட்டு தமிழர் பிரச்சினை பெரும்பாலும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவாதமாக மட்டுமே சுருக்கப்படுகின்றது ஆனால் மூத்த பத்திரிகையாளர் பாரதி ராஜநாயகம் அவர்கள் தனது எழுத்துக்களில் இந்த அணுகுமுறையை கடுமையாக விமர்சிக்கிறார்.அவரது பார்வையில் ,இது ஒரு பொருளாாதர பிரச்சினை அல்ல: பாரதி ராஜநாயகம் பாணியில் மலைநாட்டு தமிழர் பற்றி பேசும் போதெல்லாம் விவாதம் சம்பள  எண்ணிக்கையிலேயே நின்று  விடுகிறது. ஆனால் கேள்வி இதுதான் .ஒரு மனிதனின் வாழ்க்கை ஒரு நாள் கூலியால்  மட்டுமே அளக்க முடியுமா? தோட்டத்தொழிலாளி காலை பனியோடு வேலைக்குப் போகின்றான் மாலை களைப்பேடு திரும்புகிறான்.
அவன் கையில் கிடைப்பது சம்பளம் வென் வாழ்க்கையில் கிடைக்காதது மரியாதை. அதனை மிகவும் ஆழமாகவும் அர்த்தமாகவும் தன்னுடைய ஊடக காலத்தில் பாரதி அவர்கள் முன்வைத்தார் ஆழமான விவாதங்களுக்கு மலையக மக்களின் வாழ்வுரிமை சுயமரியதையை பற்றி சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தன் எழுத்துக்களில் அவர் பதிவு செய்ய மறக்கவில்லை.மலைநாட்டு தமிழர்களை பொறுத்தவரையில் ஒரு எண்ணிக்கையாக மட்டுமே இருக்கிறார்கள்.மனிதராக இல்லை.அந்த காயம் இன்னும் ஆறவில்லை அதன் வலி இன்னும் தலைமுறைகளைத்தாண்டி செல்கிறது.தோட்ட அரசியல் என்பது வாக்குக்காக மட்டும் தேர்தல் காலங்களில் தோட்டங்கள் அரசியல் மையமாகிறது. வாக்குகள் எண்ணப்படுகின்றன ஆனால் தேர்தல் முடிந்தவுடன் அந்த மனிதர்கள் மீண்டும் புறக்கணிக்கப்படுகின்றார்கள். தொழிற் சங்கங்களும் அரசியல் தலைமைகளும் பல சமயம் தோட்ட தொழிலாளியின் வாழ்வை அல்ல தங்களின் இருக்கையை மட்டுமே பாதுகாக்கின்றன.கல்வி மறுக்கப்பட்ட எதிர்காலம் தோட்டப்பாடசாலைகளின் நிலை இன்றும் மிக வளர்ச்சி அற்றும் பின் தங்கியும் உள்ள பல சந்தர்ப்பத்தை பாரதி தனது கட்டுரைகளில் சுட்டிக் காட்டியுள்ளார். அவர் குறிப்பிட்ட விடயம் தோட்டப்பாடசாலைகளின் தரம் ஆசிரியர் பற்றாக்குறை உயர் கல்விக்கு வழியில்லாத இளைஞர்கள் கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திடம் எதிர்காலம் எப்படி பிறக்கும் என்றும் கேள்வி எழுப்புகிறார்.பாரதி அவர்களின் எழுத்தின் சிறப்பு என்னவெனில் மலைநாட்டு பகுதிகளுக்க நேரில் சென்று எழுதுதல் தொழிலாளியின் குரலை பதிவு செய்தல் அரசியல் விழிப்புணர்வு என்பதே இன்றும்  இவரின் எழுத்துக்களுக்கு சாட்சியாகும். மலையக மக்களின் அடையாளம் என்பது குடியுரிமை, மனித மரியாதை, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகிய அனைத்தையும்  உள்ளடக்கிய ஒரு கட்டமைப்பு சார்ந்த சமூகப் பிரச்சினையாகும். மலையக மக்கள் பற்றிய திரு பாரதி ராஜநாயகத்தின் பார்வையானது அம்மக்கள் இந்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்வர்கள்  அவர்கள் பிரிட்டிஸ் காலத்தில் தேயிலை ,கோப்பி, இறப்பர் தோட்டங்களுக்காக இந்தியாவிலிந்து அழைத்து வரப்பட்ட மலைநாட்டு மக்கள் இலங்கை போருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்தனர் இப்போதும் அவர்களே இருக்கின்றனர் ஆனால் சுதந்திரத்திற்கு பின்னர் குடியுரிமைச் சட்டங்கள்  இந்திய - இலங்கை அரசியல் உடன்படிக்கைகள் மூலம் இந்த மக்கள் அயல் மக்கள் என ஒதுக்கப்பட்டனர் பாரதி ராஜநாயகம் வெர்கள் அதனை இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த மிக நீண்டகால மனித உரிமை மீறல் என்று வர்ணிக்கிறார்.இந்த குடியுரிமை மறுப்பானது சமூக பாதுகாப்பு . கல்வி,வேலைவாய்ப்பு,ஆகிய அனைத்திலும் தொடர்ச்சியான பின் தள்ளலை ஏற்படுத்தியது.
மேலும் தோட்ட தொழிலாளர்களின் அரசியல் தலைமைகளின் நெருக்கடி என்ற கட்டுரையில் தோட்ட அரசியல் தலைமைகளின் தோல்வியை தெளிவாகக் சுட்டிக் காட்டுகிறார். பாரதி தொடர்ந்து கூறும் பொழுது தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களைவிட அரசியல்வாதிகளுக்கு அருகில் நிற்கின்றன. தேர்தல் அரசியலில் தோட்ட மக்கள் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்யடுத்தப்படுகின்றனர். அதனால் தோட்ட தொழிலாளி அரசியலில் பொருளாகவே மாறிவிட்டான் அவன் அரசியலில் உரிமையாளன் அல்ல என்ற நிலை  உருவாகியுள்ளது. மலைநாட்டு பிரச்சினையில் பாரதி அவர்கள் அதிக முக்கியத்துவம்  அளித்த விடயம் கல்வி. தோட்ட பாடசாலைகளில் குறைந்த வளங்கள் ஆசிரியர் பற்றாக்குறை உயர் கல்விக்கான வழியின்மை இவை காரணமாக ஒரு முழு தலைமுறை சமூக முன்னேற்றத்திலிருந்த விலக்கப்படுகிறது. அவர் கேட்கிறார் கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திடம் எதிர்காலம் எப்படி எதிர்பார்;க்கப்படும்?இந்த மலையக மக்களின் கல்வி புறக்கணிப்ப வறுமை தலைமுறைகள் தொடர்வதற்கான முக்கிய காரணமாக அமைந்தள்ளது.

பேர்கால சூழலில் மலைநாட்டு மக்கள் நேரடி போர்களத்தில் இல்லை ஆனால் பாதுகாப்ப அரசியல் கவனம் ஆகியவற்றில் புறக்கணிக்கப்பட்டனர். யுத்தம் முடிந்த பின்னும் அபிவிருத்தி திட்டங்களில் முன்னுரிமை இல்லை தேசிய நல்லிணக்க உரையாடல்களில் மலையக மக்களுக்கோ போதிய இடம் இல்லை. திரு பாரதி ராஜநாயகம் அவர்கள் இதனை வடக்குக்கும் தெற்க்கு;கும் அடையிலான தனிமையான சமூகம் என்று வர்ணிக்கிறார்.சம்பள உயர்வென்பது ஒரு தற்காலிக நிவாரணம் னோல் அம்மக்களின் வாழ்வுரிமை சுயமரியாதை பாதுகாப்பு அரசியல் பிரதிநிதித்துவம் சம வாய்ப்பு அவை இன்றி உண்மையான விடுதலை சாத்தியமில்லை என்கிறார்.மலைநாட்டு தமிழர் பிரச்சினை தீர்வது சம்பள பேச்சு வார்த்தையால் அல்ல. மனித உரிமை என்ற அங்கீகாரத்தாலே திரு பாரதி எழுதியது ஒரு பத்திரிகை செய்தி அல்ல அது ஒரு சமூக ஆவணம்.அவர் எழுத்துக்கள் இந்நத சமூகத்தை கருணையால் அல்ல உரிமையால் பார்க்க வேண்டும் என்ற அரசியல் விழிப்புணர்வை உருவாக்குகின்றன திரு பாரதிராஜநாயகம் வெர்கள் மறைவுபெற்ற மூத்த தமிழ் பத்திகையாளா மற்றும்  ஊடகத்துறையில் பெருமையை உயர்த்திய சமூக ஆர்வலர் ஆவார். இவர் தனது வாழ்நாளில் செய்தி துறையில் சீதியை பிரதிபலிக்கும் , சுதந்நதிர செய்தித்தழுவல்களை எழுதியவர் என்பதாக பெரும்பாலான ஊடக வல்லுனர்களே குறிப்பிடுகின்றனர். குறிப்பாக சில தீவிர மற்றும் உண்மையான செய்திகளை வெளிப்படுத்தவதால் வெர் மீது பல தடைகளும் எதிர்ப்புகளும் இருந்தன என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இலங்கையின்  ஊடக சூழலைப்பற்றிய அவரது எண்ணங்களும் கருத்துக்களும் ஆழமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஊடகவியலாளர் மீது நடந்த தாக்குதல்கள் மற்றும் ஊடகக் குற்றங்களுக்கு எதிரான கருத்து பேர்காலத்திலும் போருக்க பிந்திய காலங்களிலமு; இலங்கை செய்தியாளர்கள் மீது  தொடரும் தாக்குதல்கள் போன்ற விடயங்களில் முக்கியமான கருத்தக்களை வெளிப்படுத்தினார் குறிப்பாக தமிழ் ஊடகத் தொழிலுக்கு எதிரான வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய ஆழமான பகுப்பாய்வும் தேடல்களிலும் இது தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை தமிழ் ஊடகத்துறையில் நீண்டகாலம் பணியாற்றிய அவர் உண்மை,நேர்மை,மனிதநேய பார்வை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தன்னை ஒரு சிறந்த  செய்தியாளராக நிறுவினார்.திரு பாரதி அவர்கள் ஒரு பயந்தணர்வில்லாத ,நேர்மையான, சமூகப் பொறுப்புணர்வு கொண்ட தமிழ் பத்திரிகையாளர் ஆவார் அதற்கு சான்றாக பல கட்டுரைகள் சாட்சி சொல்லும்.அன்னாரின் நிண்டகால சேவை ,இலங்கைத் தமிழ் ஊடக வரலாற்றின் ஒரு நினைவுச் சின்னமாக என்றும் நிலைத்திருக்கும்

கிழவனின் சிரிப்பு
புலவனின் கோபம்
நிலம்  அற்றவனின் கண்ணீர்
பாரதி ராஜநாயகத்தின் ஊடகப் பணி
அத்தனையும் அர்த்தமுள்ளவைகளே..!!

கருத்துகள் இல்லை: