மின்னம்பலம் :சென்னையில கார்ல் மார்க்ஸ் சிலையை இன்னைக்கு சிஎம் திறந்து வெச்சாரு பார்த்தீரா? அதுல சிஎம் கூட லெப்ட் லீடர்ஸ், காங்கிரஸ், விசிக, மதிமுகன்னு கூட்டணி கட்சி ‘தலை’கள் எல்லாம் அணிவகுத்து நின்னாங்களே..
ஆமாய்யா.. அப்ப ‘நீர் சொன்ன ”ஸ்டாலின் கணக்கு” டீலிங் ஒர்க் அவுட் ஆகிடுச்சா?
அதான்யா சிக்கலே.. வெளியே இருந்து பார்க்கிறவங்களுக்கு ‘திமுக கூட்டணியில’தான் காங்கிரஸ் இருக்குதுன்னு நம்புறாங்க.. ஆனா உள்ளே நடக்கிற சம்பவங்களோ வேற மாதிரியா இருக்கே..
என்னய்யா நடந்துகிட்டு இருக்கு?
சிஎம் எஸ்டாலின், ‘கூட்டணி கட்சிகளோட பேச்சுவார்த்தை அமைக்க குழு அமைப்போம்’ன்னு சொல்லி இருந்தாரு.. காங்கிரஸ் சோடங்கரும் கூட, ”2,3 நாட்களில் திமுக குழு அமைச்சுரும்.. பேச்சுவார்த்தை தொடங்கிடும்”னு சொல்லி இருந்தாரு..
ஆனா இன்னமும் திமுக பேச்சுவார்த்தை குழு அமைக்கலைங்கிறதை கவனித்தீரா? அதே மாதிரி காங்கிரஸ் வேணுகோபால் பிப்ரவரி 5-ந் தேதி வர்றதா இருந்ததும் கேன்சலாகிடுச்சு பார்த்தீரா?
திமுக கூட்டணியில மறுபடியும் என்னதான் பிரச்சனைன்னு அறிவாலய தரப்புல விசாரிச்சப்ப, “பேச்சுவார்த்தை குழு அமைக்கிறது எல்லாம் விஷயமே இல்லைங்க சார்.. பேச்சுவார்த்தை குழு அமைக்கிறதே ‘எந்தெந்த தொகுதி’ன்னு பேசி பைனல் செய்யுறதுக்குதான்.. அதுக்கு முன்னாடி ‘எத்தனை’தொகுதின்னு முடிவு செய்யனுமே.. யார் யாருக்கு எத்தனை தொகுதின்னே முடிவு செய்யாம இழுத்துகிட்டே இருக்கிறதாலதான் சிஎம் இன்னமும் பேச்சுவார்த்தை குழுவை போடலை..
காங்கிரஸ் சைடுல இருந்து திட்டவட்டமாக எங்களுக்கு இத்தனை தொகுதிகள்தான் வேணும்னு சொல்லவும் இல்லையே.. ”2011-ல் 63 சீட் வாங்குனோம்.. 2016-ல் 41 சீட் வாங்குனோம்.. 2021-ல் 25-க்கு ஒத்துகிட்டோம்.. அதுக்காக 25 சீட்டை எல்லாம் இந்த டைம் ஏத்துக்க முடியாது.. அதிகமான சீட்டு வேணும்.. 39 பார்லிமெண்ட் தொகுதிக்கு 1 தொகுதின்னு கொடுக்கனும்.. ”இப்படித்தான் சார் காங்கிரஸ் சைடுல இருந்து சொல்றாங்க.. இந்த எண்ணிக்கையிலதான் தொகுதிகள் வேணும்னு சொல்லிட்டாலே முன்ன பின்ன முடிவு எடுத்துடலாமே.. அதை சொல்லாம இழுக்கிறது காங்கிரஸ்தான் சார்…
சிஎம்மைப் பொறுத்தவரைக்கும் ரொம்பவே வருத்தமா இருக்கிறாரு.. ராகுல் காந்தியை , பிரதர்.. பிரதர்னு சொல்றோம்.. பிரதமர் வேட்பாளருன்னும் சொல்றோம்.. ஆனால் இப்படி இழுத்தடிக்கிறாரேங்கிற ஆதங்கமும் அதிருப்தியும் சிஎம்-க்கு இருக்கத்தானே செய்யும்..” என்கின்றனர்.
ஆனா பார்லிமெண்ட்டுல காங்கிரஸும் திமுகவும் கை கோர்த்து சடுகுடு ஆடுறாங்களே..
ஆமாய்யா.. பார்லிமெண்ட்டுல ராகுல் காந்திக்கு ஆதரவா திமுக எம்பிக்களும்தான் போராடுறாங்க.. இப்ப 8 எம்.பிக்களை சஸ்பெண்ட் செஞ்சிருக்காங்களே.. அந்த லிஸ்ட்ல திமுக எம்.பிக்களும் இருக்க வேண்டியது.. ஆனா லோக்சபாவில் சபாநாயகர் முன்பு பெஞ்ச் மேல ஏறி நின்று கோஷம் போட்டவங்களை மட்டும்தான் சஸ்பெண்ட் செஞ்சிருக்காங்க.. அப்ப கூட திமுக எம்பி தயாநிதி மாறன், பெஞ்ச் மேல ஏறப் போனாரு.. டிஆர் பாலுதான் அவரை தடுத்தாரு.. இல்லைன்னா அவரும் சஸ்பெண்ட் ஆகியிருப்பாரு.. காங்கிரஸ் மாணிக்கம் தாகூரை தவிர மற்ற திமுக- காங்கிரஸ் எம்.பிக்கள் எல்லாருமே ‘ஒரு கூட்டு பறவைகளாக’வே வலம் வர்றாங்க..
டெல்லியில திமுக சீனியர் எம்பிகள்கிட்ட பேசிகிட்டு இருந்தப்ப, “அதிகமா சீட் வேணும்னு காங்கிரஸ் இப்படி செய்யுது.. எப்படியும் நம்ம கூட்டணியிலதான் இருப்பாங்க.. அதுல எந்த பிரச்சனையும் இருக்காது”ன்னு ரொம்பவே நம்பிக்கையா சொல்றாங்க..
நம்மிடம் பேசிய அமைச்சர்கள் கூட, “இத்தனை எலக்ஷன்ஸை காங்கிரஸ் கூட நின்னு சந்திச்சுட்டோம்.. ஒரே கூட்டணியாவே இருந்துட்டோம்.. இப்பவும் சரி செஞ்சுடலாம்னு நம்பிக்கை இருக்குன்னு சிஎம் எங்ககிட்ட சொல்றாரு என்கின்றனர்.
ஆனா திமுக தொண்டர்கள் மனநிலையே ‘அத்துப் போச்சு’ கதையாகிட்டு இருக்குது.. “என்ன சார்.. எவ்வளவுதான் காங்கிரஸுக்கு தலைவர் (ஸ்டாலின்) இடம் கொடுப்பாரு? ரொம்பவே விட்டு கொடுத்தா தலையில ஏறி உட்கார்ந்துட்டு காங்கிரஸ் ஆட்டம் போடுமா? அவங்க போனா போகட்டுமே.. ஏன் நாங்க சுமந்துகிட்டு இருக்கனும்? எலக்ஷனில அடிபட்டாதான் காங்கிரஸுக்கு புத்தி வரும்” என்றெல்லாம் நாம் பேசிய திமுக தொண்டர்கள் குமுறுகின்றனர்.
அதுசரிய்யா.. இத்தனை சீட்டுதான் வேணும்னு சொல்லி ”கணக்கை ” முடிக்கிறது காங்கிரஸுக்கு என்னதான் பிரச்சனையாம்?
எரியுற நெருப்புல எண்ணெய்யை ஊத்துறதுன்னு சொல்வாங்களே.. அதுதான் இப்ப நடந்துகிட்டு இருக்கு.. புகைஞ்சுகிட்டு இருக்கிற திமுக- காங்கிரஸ் கூட்டணி உறவுல எண்ணெய் ஊத்துறது வேற யாரு விஜய்தான்..
என்னய்யா விஜய் தவெக- காங்கிரஸ் கூட்டணி இல்லைன்னு முடிவாகிடுச்சுன்னாங்களே?
காங்கிரஸ் அப்படித்தான் முடிவுக்கு வந்த நேரத்துல விடாம துரத்துது விஜய் தரப்பு..
இதை பத்தி ராகுல் காந்திக்கு நெருக்கமானவங்க கிட்ட பேசுனப்ப, “விஜய் தரப்புல இருந்து சில புள்ளி விவரங்களை சொல்லிவிட்டிருக்காங்க.. அதுதான் இப்ப கூட்டணி குழப்பத்துக்கு கமா போட்டிருக்கு சார்..
விஜய் தரப்புல என்ன சொல்றாங்கண்ணா, “எங்ககிட்ட 75,00,000 லட்சம் உறுப்பினர்கள் வோட்டர் ஐடியோட பதிவு செஞ்சிருக்காங்க.. இவங்க எல்லாம் தமிழ்நாடு வோட்டர்ஸ் மட்டுமே.. அதர் ஸ்டேட்ஸ் இல்லை.
இந்த 75 லட்சம் ஓட்டு மட்டுமல்ல.. இவங்க ஒவ்வொருத்தரும் ஆளுக்கு ஒரு ஓட்டை எக்ஸ்ட்ரா கொண்டு வந்தாலே 1.50 கோடி ஓட்டு ஈஸியா எங்களுக்கு வந்துரும்..
போன எலக்ஷன்ல திமுக வாங்குன ஓட்டு 1,74,30,179 கோடி வோட்ஸ்.. அதிமுக வாங்குன ஓட்டு 1,53,91,055 கோடி வோட்ஸ்.. இரண்டுக்கும் வித்தியாசம் வெறும் 20,39,124 லட்சம்.
இப்ப எங்ககிட்ட 1.50 கோடி ஓட்டு கன்பார்மா இருக்கு.. காங்கிரஸும் மற்ற கட்சிகளும் சேர்ந்து நின்னா ஈஸியா அடிச்சுட்டு வந்துரலாம்.. அசால்ட்டாவே நாம எல்லாம் சேர்ந்தா ஆட்சி அமைக்க முடியும்தானே”ன்னு சொல்றாங்க..
அதோட 75 அசெம்பிளி சீட், துணை முதல்வர் பதவி, உள்ளாட்சியில மேயர் பதவி உட்பட 20%க்கு மேல இடங்கள், அமைச்சரவையில இடம்னு நாங்க ‘திருப்தியான’ பவர் ஷேரிங்குக்கும் ரெடின்னும் விஜய் தரப்புல ஸ்டிராங்கா சொல்றாங்க..
இன்னொன்னு, தமிழ்நாட்டுல மட்டுமல்ல.. புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கேரளான்னு மத்த ஸ்டேட்ஸ்ல காங்கிரஸுக்காக பிரசாரத்துக்கு நானே வர்றேன்னும் விஜய் சொல்லி இருக்காரு…இதை பத்திதான் ராகுல்ஜி இப்பவும் சீரியசா யோசிக்கிறாரு” என்கின்றனர்.
ஓஹோ.. விஜய் சைடுல என்ன சொல்றாங்களாம்?
தவெக தரப்புல பேசுனப்ப, “என்ன சார் நீங்க.. காங்கிரஸ் எங்க கூட கூட்டணிக்கே வந்துருச்சு.. அனேகமாக இந்த வாரம் இல்லைன்னா அடுத்த வாரம் அறிவிப்பே வந்துரும்னு இருக்கிறோம்”னு சொல்றாங்க..
ஆனாலும் கூட, “இவ்வளவு தூரம் விளக்கமா விவரிச்சு சொன்னாலும் காங்கிரஸ் இன்னமும் ஓபனா நம்ம கூட வராம இருக்கு.. ஒருவேளை நம்மளை வெச்சு திமுக கிட்ட அதிகமா சீட்டு வாங்குதோ காங்கிரஸ்? அப்படின்னு விஜய்க்கு ஒரு வலுவான சந்தேகமும் ஒரு சைடுல இருக்குன்னு”அவருக்கு நெருக்கமான சர்க்கிளில் சொல்றாங்கப்பா..
ஆக சுத்தி வளைச்சு ‘இழுபறியில’ விட்டுட்டீரு? சரி.. தேமுதிக என்னதான் ஆச்சு?
கூட்டணியே கன்பார்ம் ஆகலை.. ஆனாலும் இன்னையில இருந்து விருப்ப மனு வாங்கிகிட்டு இருக்காங்க பிரேமலதா..
தேமுதிகவுக்கு திமுக சைடுல ஏற்கனவே நாம சொன்ன மாதிரி 9+1-ன்னு சொல்லி இருக்காங்க.. அவங்க டபுள் டிஜிட்டுல நிற்கிறாங்க… அதிமுக சைடுல பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையாகி கிடக்குதாம்..
சென்னையில நடந்த அதிமுக மா.செ.க்கள் கூட்டத்துல ராஜேந்திர பாலாஜி ஓபனாவே தேமுதிகவை கூட்டணிக்குள்ள கொண்டு வரனும்னு சொல்லி இருக்காரு.. அதுக்கு பதில் சொன்ன எடப்பாடி, “நாம பேசித்தானே பார்த்தோம்.. 7 + 1 ராஜ்யசபா சீட்டுன்னு சொல்லிட்டோம்.. 1 எம்.பி சீட்டுன்னா 6 தொகுதி இல்லையா? அப்ப நாம 13 சீட் கொடுக்கிறோம்னு சொன்னோம்.. ஆனா விஜயகாந்துக்கு ராசியான நம்பர் 5 அதனால கூட்டுத் தொகை 5 வர்ற மாதிரி 14 சீட் கேட்குறாங்க.. அந்த அம்மா பிரேமலதாவுக்கு ரொம்ப பேராசைதான்.. அவங்க கூட நாங்க பேசிகிட்டுதான் இருக்கோம்.. இதை பத்தி எல்லாம் நினைக்காம நீங்க உங்க தொகுதியில இறங்கி வேலை செஞ்சா அவங்ககிட்ட இருக்கிற ஓட்டுகளை நீங்களே கொண்டு வந்துடுவீங்களேன்னு சொன்னாரு” என்றபடியே டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக