வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

தோழர் லோகநாயகி லோகன் : திவிகவிலிருந்து விடுதலை பெற்றேன்

May be an image of one or more people and text that says "மாட்டைதொடாம் மாட்டை தொட்டால் புனிதம் மனிதுமனை தொட்டால் Azur สล์สางค"

 Loganayaki Lona :   திவிகவிலிருந்து விடுதலை பெற்றேன்
2020 தேர்தலில் திமுக ஆதரவு நிலைப்பாடு திவிக தபெதிக  மற்றும் பல முற்போக்கு இயக்கங்கள் இயக்கம்  சாராத தோழர்களின் புற அழுத்த கலந்துரையாடல்களின் நீட்சியாக எடுத்தனர்..
அந்த புற அழுத்தத்துக்கு அடிப்படையாக தோழர் மதிமாறன் அவர்களின் உரைகள் இருந்தன.எந்த இயக்கமும் சாராத பலர்க்கு அந்த புற அழுத்தம் தந்ததில் அவர் பேச்சுக்கும்,விவாதங்களுக்கும் முக்கிய பங்குண்டு.
அதன் பின் அமைப்பு செயற்குழுக்கள் பேசி அமைப்பு அந்த  நல்லதொரு. முடிவெடுத்திருக்கலாம்.அமைப்புக்குள் போய் தோழர் அந்த முடிவை எடுக்க வைத்ததாக எங்கும் எழுதப்படவில்லை.
புற அழுத்தமே இல்லாமல் அந்த முடிவு இயக்களுக்கு தானாகவே  வந்தது என்பது பொய்.
அதுக்கு பின்னால் பல தனி பெரியாரிஸ்டுகள் உண்டு.நானே நேரடியான சாட்சி.அந்த தனி பெரியாரிஸ்டுகள் மதிமாறன் தோழர் பேச்சு மூலம் உள்ள வந்தவங்க தான் .அதுக்கு பிறகு அவங்க களத்தில் செயல்பாட்டில்  விரிவாகியிருக்கலாம்.
வாய்ப்பிருந்த இணைய மீட்டிங்க் எல்லாவற்றிலும் முற்போக்கு இயக்கங்கள் அனைத்தின் மீதும் எதிர்ப்புகளை  பதிவு செய்ததில் நானும் தான் பங்கெடுத்து இருந்தேன்.
அதில்   புகழ்ச்சியும் இல்லை.இகழ்ச்சியும் இல்லை.தனி மனித ஆதாயமும் இல்லை.


நான் பார்த்ததை  கடந்து வந்த செயல்பாடுகள் அடிப்படையில் பகுத்தறிந்து  எழுதிய பதிவு தான் அது.. அதை அங்கீகாரமும்,இயக்க விமர்சனமும்னு வேணா சொல்லலாம்.
அவதூறுன்னு சொன்னா ஆதாரத்தை  தரவேண்டும். முற்போக்கு இயக்கங்கள் பொது வெளியி ல் விமர்சனத்தை அந்த கால கட்டத்தில் திமுக எதிர்ப்பு நிலைக்கு  சந்திக்கவே இல்லை எனும் ஆதாரத்துடன் சொல்லுங்க.ஏற்கலாம்.
அந்த பதிவில்  அப்படி என்ன இருந்ததென மீண்டும் வாசித்தேன்.
இயக்கங்கள்  சீமானுக்கும் ,மதிமாறன் தோழருக்கும் ஒரே  மேடை கூட  கொடுத்ததுண்டு.
நல்ல வழியில் லாஜிக்கலா பெரியாரை முன்னெடுத்ததால்  பயன்படுத்தியதால்  மதிமாறன் தோழர் மக்கள்  அங்கீகாரம் பெற்றார்.
சீமான் எல்லார்ட்டயும் வசை மாலை பெறுகிறார்.இப்பவும் சீமான் நிலை அது தான்.
 இந்த அடிப்படையில் எழுதுன ஒரு பதிவு ,ஒரு வருடம் பின்பு பகிரப்பட்டு அதன் மீது நடவடிக்கை,
இயக்கத்தில் சேர்ந்த பின்  இயக்க விமர்சனம் என்ற அடிப்படையில் கோவை மாவட்ட நிர்வாகிகள் அணுகினர்.விளக்கம் அவர்கள் இயக்கத்துக்கு பாதுகாப்பனதாக இல்லை.
நீங்க நீங்குவதென்றால் நீங்கிக்கலாம்னு  கோவை நிர்வாகிகள்   சொன்னதால்,அதற்கு மேல் தனி நபர்கள் எப்படி நம்பி  தொடர்வார்கள்? அதனால்   திவிகவிலிருந்து  நீங்கிக்கொண்டேன்(4/2/2026) 
சொந்த வேலைப்பளுவால் சற்று தாமதமாக பதிவிடுகிறேன்.
என் பதிவுக்கு  யாரும் திவிக  இயக்கப்பொறுப்பாளர்களுக்கு  தொந்தரவு தர வேண்டாம் .
இதுவரை உடன் பயணித்த சக திவிக தோழர்களுக்கு நன்றிகள்.


Loganayaki Lona : 
அனைத்து முற்போக்கு இயக்கங்களும் திமுக எதிர்ப்பு மனநிலையுடன் திமுக ஆதரவை நிர்பந்த அடிப்படையில்  பேசிக்கொண்டிருந்த போது Mathimaran V Mathi  எனும் இயக்கமின்றி இயங்கிய பெரியாரிஸ்ட் ,அன்றைய ,அரசியல் கள நிலவரத்தோடு ஒப்பிட்டு திமுக ஆதரவை நோக்கி தமிழ்நாட்டின் இயக்கங்களையும்,முற்போக்காளர்களையும் கூட நகர்த்தினார்.இன்று வரை திமுக அவரை ஆதரித்ததே தவிர ,பெரியாரிய இயக்கங்கள் வாழ்த்தியோ,பாராட்டியோ,அங்கீகரித்தோ நான் கேள்விப்படவில்லை.அதிகாரிகளுக்கு தொழிலாளிகளிடம்  இருக்கும் அதே மனப்பான்மையை இங்கும் பார்க்கிறேன்.
.இளைஞர்களின் முன்பு பெரியாரையும்,கலைஞரையும்,அண்ணாவையும் முன்னிறுத்தி அவர் தான்  வாதிட்டார்.மேடையில் பேச்சாளர் வாய்ப்பு சீமானுக்கும்,
மதிமாறன் தோழருக்கும் ஒரே காலகட்டத்தில் கிடைத்ததென்று கருதுகிறேன்.ஒரே மேடையில் கூட பேசியிருக்கின்றனர்.
வாய்ப்பை சரியாகப்பயன்படுத்தியதால் ,பெரியார் போல் நாகரீகமாக  தன் லாஜிக்கலான  வாதத்தை தொடர்ந்து முன்வைத்ததால் ,மக்களுக்கு எது தேவை என தொடர்ந்து முன்னிறுத்தியதால்,
சரியாக தமிழ்ச் சமூக அரசியலை திமுகவை நோக்கி நகர்த்திய பெரியாரிஸ்ட்டால் இன்று திமுகவிடம் பல நல்ல திட்டங்களை அனைவருமே கேட்டுப்பெற முடிகிறது.பெரியார் விரும்பிய திராவிடமாடல் கட்டமைப்புகள் கூட  உருவாக்க முடிகிறது- 2025 பிப் 2 - நன்றி தோழர் Loganayaki Lona

விஜய் எம்.குமார்
வறட்டுவாத இயக்கங்கள் இப்படி கேடர்களை நடத்துவதால்தான் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் வளரமுடியாமல் தேங்கிவிடுகின்றன. உங்கள் பயணம் தொடரட்டும். உரிய இயக்கத்தில் இணைந்து பயணியுங்கள்.

Subathra Devi Dhanasingh  ·
உங்களை இழந்த இயக்கங்களுக்கு தான் இழப்பு.
உங்கள் துணிவும் செயல்பாடும், எப்போதும், பிரம்மிக்கத்தக்கது.
நீங்கள் நம் சமூகத்தின், நம் தலைமுறையின் சொத்து.
தைரியமாக தொடர்ந்து பயணியுங்கள் தோழர்.
எப்போதும் உங்களுடன் நிற்க பிரியப் படுகிறேன்.
- சுபத்ரா தேவி தனசிங்

நிர்மல் குமார்  ·
திவிக வில் யாரையும் கைது செய்து எல்லாம் வைக்கவில்லை
மதிமாறன் தோழரின் அழுத்தத்தால் எல்லாம் திவிக அன்றும் சரி இன்றும் சரி இனி மேலும் எந்த முடிவும் எடுக்காது எடுக்க வேண்டிய அவசியமும் இல்லை
அதற்காக சுய புகழ்ச்சி அடைவதையெல்லாம் தடுக்கவும் மாட்டோம்
எல்லாத்துக்கும் நான் தான் காரணம் என்று சொல்வது சீமானின் இயல்பு அதில் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கலாம் மதிமாறனும் அந்த ரகத்தை சார்ந்தவர் தான்
இயக்க விமர்சனம் என்றெல்லாம் நீக்கவில்லை. பொய் பேச வேண்டாம் அக்கா. மதிமாறனை நாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அழைத்து பாராட்டுவது வாழ்த்துவதெல்லாம் எங்கள் வேலை இல்லை.
அப்படித்தான் செய்ய வேண்டும் என்றால் செய்ய முடியாது என்றோம்
மதிமாறன் கருத்தை பார்த்து அழுத்தத்தை பார்த்து தான் நல்ல முடிவுகளை நாங்கள் எடுப்பதாக இருந்தால்,
உங்க பார்வையில் முட்டாள்களிடம் மதிமாறன் தோழரை விட அறிவு குறைவானவர்களிடம் நீங்கள் வந்திருக்கவே வேண்டாமே ஆனாலும் வந்தீர்கள்
அப்படி வந்தது உங்கள் கருத்துக்கு நீங்களே பதிலடி கொடுத்ததாக எடுத்துக் கொள்ளலாமா ?
விடுதலை புலிகள் அமைப்பும் தலைவர் பிரபாகரன் இன்றைக்கும் எங்கள் தலைவர் தான்.. இன்றும் போராளிகளை நாங்கள் மதிக்கின்றோம் தோழர் மதிமாறன்காகவெல்லாம் அவர்களை நாங்கள் எதிர்க்க மாட்டோம்.
இயக்கத்தில் இருந்தவரை நீங்கள் சிறப்பாக செயல்பட்டீர்
மாற்று கருத்து இல்லை
அந்த செயல்பாடுகளை மதிக்கிறோம்
நீங்க வைத்தது விமர்சனம் அல்ல
அவதூறு
அது நீங்கள் மட்டுமே அல்ல மதிமாறன் தோழர் உட்பட யார் அவதூறு பேசினாலும் அவரவர் மொழிக்கு ஏற்ப பதில் தருவோம்
திவிக பொறுப்பாளர்களை என்ன தொந்தரவு தர முடியும் யார் தர போறாங்க.....
நிர்மல் குமார்
திராவிடர் விடுதலைக் கழகம்

கோவை கலை
உங்களைப் போன்ற பகுத்தறிவு உள்ள பெண் போராளிகளை இழப்பது அந்த இயக்கத்திற்கு தான் பேரிழப்பு
வாருங்கள்
விடுதலைச் சிறத்தைகள் கட்சி

Maran Sethupathi
செவிலிய துறை சார்ந்த செயல்பாடு மற்றும் பயிற்சி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்..

Pandiyan Marimuthu
தோழர் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்


Ibrahim Gani
விசிக சேருங்கள் தோழி
Darus Helan
யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட யார் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற முக்கியமான நோக்கம் திராவிட இயக்கங்களுக்கு இருப்பதால் இதுபோன்ற முடிவு எடுக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: