மின்னம்பலம் : என்னய்யா.. தொகுதிப் பங்கீட்டு கணக்குக்கு வந்தாச்சா? எந்த கூட்டணி?
சென்னையில இன்னைக்கு சிஎம் ஸ்டாலின், “கூட்டணி கட்சிகளுடன் பேச விரைவில் திமுக குழு அமைக்கப்படும்”என சொல்லி இருக்காரே பார்த்தீரா?
ஆமாய்யா.. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை திமுக தொடங்க போகுதுன்னா தொகுதிகளுக்கான கணக்கும் போட்டு வெச்சிருப்பாங்களே?
எக்ஸாக்ட்லி சரியா சொல்லிட்டீரு.. சென்னைக்கு வந்த காங்கிரஸ் கிரிஷ் சோடங்கரும் கூட, “அடுத்த 2,3 நாட்களில் திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடங்கும்.. பேச்சுவார்த்தை குழுவை திமுக அமைக்கிறதுக்கு 5 நிமிஷம் போதும்”ன்னு சொல்லி இருந்தாரு.. இப்ப சிஎம்-ம் பேச்சுவார்த்தை குழுவை பத்தி பேசியிருக்காரு..
சரி… சிஎம் ஸ்டாலின் என்னதான் கணக்கு போட்டு வைச்சிருக்காருன்னு திமுகவோட மூத்த அமைச்சர்கள்கிட்ட நாம பேசுனப்ப, “சார்.. போன 2021 எலக்ஷன்ல இதே கட்சிகள்தான் எங்க கூட கூட்டணியில இருந்தாங்க.. அந்த தேர்தல்ல நாங்க திமுக மட்டும் 173 சீட்டுல நின்னோம்.. எங்க உதயசூரியன் சின்னத்துல வைகோவோட மதிமுக 6, ஜஹவாருல்லாவின் மமக 2, ஈஸ்வரனின் கொமதேக 3, வேல்முருகன் தவாக 1, கதிவரனின் பார்வார்டு பிளாக் 1, அதியமானின் ஆதித் தமிழர் பேரவை 1, முருகவேல் ராஜன் மக்கள் விடுதலை கட்சி 1-ன்னு மொத்தம் 15 இடங்களில் நின்னாங்க..
காங்கிரஸுக்கு 25, விசிகவுக்கு 6, லெப்ட் பார்ட்டீஸுக்கு 6+6, முஸ்லிம் லீக்குக்கு 3 சீட் கொடுத்தோம்.
நாங்க 173, எங்க சின்னத்துல மத்தவங்க 15 இடம்னு மொத்தம் 188 இடத்துல நின்னோம்..
இந்த டைம் தேமுதிக உள்ள வருது.. தேமுதிக எங்க கிட்ட கேட்கிறது என்னவோ 18+1 ராஜ்யசபா சீட்.. ஆனா சிஎம் போட்டிருக்கும் கணக்கு 9+1தான்..
போன டைம் கொடுத்த சீட்டே ஓகேன்னு மற்ற கட்சிகள் சொல்லி இருந்தா இன்னேரம் தேமுதிகவுக்கும் சீட் கொடுத்து ‘கணக்கு வழக்கை’ முடிச்சிருப்போம்..
ஆனா காங்கிரஸ் கட்சி போன டைம் நாங்க கொடுத்த 25-ஐவிட கூடுதலா எதிர்பார்க்குது.. அதுக்குதான் ஆட்சியில பங்கு அது இதுன்னு நிறைய பேசுனாங்க..
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரைக்கும் 2011-ல் 63 சீட் வாங்குனோம்; 2016-ல் 41 சீட் வாங்குனோம்.. ஆனா போன முறை வெறும் 25-க்கு ஒத்துகிட்டோம்.. இந்த டைம் விடக் கூடாது.. எப்படியாவது 40 சீட் வாங்கனும்னு முட்டிப் பார்க்குறாங்க.
காங்கிரஸ் இப்படி அடம் பிடிக்கிறதால அதிகபட்சமா 3 சீட்டை கூடுதலா கொடுக்கலாம்னு அதாவது 28 சீட் தரலாம்னு சிஎம் நினைக்கிறாரு.. இதைத்தான் ஏற்கனவே டெல்லியில கார்கேவை சபரீசன் சந்திச்சு பேசுனப்பவும் சொல்லி இருந்தோம்..
இல்லை.. இல்லை.. இன்னும் ஒன்னு ரெண்டு சீட் கூட கொடுங்கன்னு கடைசி நேரத்துல ராகுல் காந்தி தலையிட்டாருன்னா.. ஏன்னா.. போன லோக்சா எலக்ஷன்ல கடைசி நேரத்துல கரூரை கொடுங்கன்னு ஜோதிமணிக்காக அடம்பிடிச்சு வாங்கிட்டாரு ராகுல்.. அந்த மாதிரி ஒரு சிச்சுவேசன் வந்துச்சுன்னா.. காங்கிரஸுக்கு 30 சீட் கொடுப்பாரு சிஎம்.. அதுக்கு மேல கொடுக்க சான்ஸ் இல்லை..
போன எலக்ஷன் மாதிரி இல்லாம இந்த டைம், தேமுதிகவுக்கும் சீட் கொடுக்கனும்.. காங்கிரஸுக்கும் கூடுதல் இடம் தரனும்..
இதுக்கு நாங்க எங்க சீட்டை குறைக்கனும்; கூட்டணி கட்சிகளும் குறைக்கனும்..
சிஎம்மைப் பொறுத்தவரைக்கும் திமுக 165 இடத்துல போட்டியிட்டாகனும்னு உறுதியா இருக்காரு..
அதுக்கு ஏத்த மாதிரி சீட் கால்குலேஷன்ஸ் பத்தி கூட்டணி கட்சிகள்கிட்ட பேசிகிட்டு இருக்காங்க.
இதுல இன்னொரு பஞ்சாயத்தும் இருக்குது.. காங்கிரஸ் கூடுதலா சீட் கேட்கும் போது எங்களுக்கும் அதிக சீட் வேணும்னு மத்த கட்சிகளும் கேட்பாங்கதானே.. அதையும் பேலன்ஸ் பண்ணனுமே..
அதனால இப்ப இந்த கணக்குகளை ஒர்க் அவுட் பண்ணுற பேச்சுவார்த்தைகள் தீவிரமா நடக்குது.. இது ஒன்றிரண்டு நாளில்ல முடிஞ்சுடும்னு நினைக்கிறோம்.. அதனாலதான சிஎம், சீக்கிரமாக குழுவை அமைச்சுடுவோம்னு சொல்லி இருக்காரு” என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக