திங்கள், 2 பிப்ரவரி, 2026

அமெரிக்காவை எதிர்த்து ஈரான் ராணுவம் போராடுவது, ஈரானுக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கும்.

 Giri Sundar  :  அமெரிக்கா மிகப்பெரிய சிலந்தி வலைக்குள் மாட்டிக் கொண்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. தகவலின் அடிப்படையில் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது
ஆரம்பகட்ட பேச்சு தோல்வி, ஈரான் மீது ஒரு பெரிய தாக்குதலை நடத்ததும் இறுதி கட்டத்தில் டிரம்ப். ஈரான் மீது ஒரு புதிய பிரம்மாண்டத் தாக்குதலை நடத்த ஆலோசித்து வருகிறார்.
ஈரானை நோக்கி, அமெரிக்க கடற்படையின் மிகவும் பிரமாண்டமான, சக்தி வாய்ந்த போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் சுத்தி வளைத்து நிற்கிறது. இது ஈரானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஈரானும் சும்மா இருக்கவில்லை. முடிந்த அளவு ஆயுதங்களை குவித்து வருகிறது. அது என்னவென்று பார்ப்போம்


ஈரானிய ராணுவத்தில் ஆயிரக்கணக்கான "ரகசிய மற்றும் மூலோபாய" (Secret Strategic Drones) ஆளில்லா விமானங்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இவை தாக்குதல் (Strike), உளவு பார்த்தல் (Reconnaissance) மற்றும் மின்னணு போர்முறை (Electronic-warfare) ஆகிய மூன்று முக்கிய பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஈரான் இப்போது 80,000 ஷஹேத் ட்ரோன்களை போருக்குத் தயாராக வைத்திருப்பதாகவும், தினமும் 400 ட்ரோன்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை ஈரானிய ஊடகங்கள் உறுதிப்படுத்துகின்றன
ட்ரோன் உற்பத்தியை அதிகரிக்க ரஷ்யா உதவுவதாகவும், அதிக அளவு ட்ரோன்களை சீனா தந்து உதவுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை அமெரிக்க ஊடகங்கள் உறுதிப்படுத்துகின்றன
இப்போது பிரச்சினை என்னவென்றால், ஈராக்கும் ஈரானுக்கு உதவி செய்வோம் என்று அறிவித்து காத்திருக்கிறது. சவுதி அரேபியா போன்ற நான்கு நாடுகள் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா எங்கள் வான்தளங்களை பயன்படுத்தக் கூடாது என்று அறிவித்து விட்டது
ஈரான் ராணுவத் தலைமைத் தளபதி வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு
இந்த ட்ரோன்கள் நகர்ந்து கொண்டிருக்கும் இலக்குகளையும் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை. 
இவை எதிரிகளின் ரேடார் பார்வையில் படாமல் ஊடுருவும் (Stealth) திறன் மற்றும் சுமார் 2,000 கிலோமீட்டர் தொலைவு வரை சென்று தாக்கும் வல்லமை கொண்டவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் வசம் இருக்கும் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதங்களில் இதுவும் ஒன்று. இந்த ட்ரோன்கள் மிகவும் மலிவானவை. ஒரு ட்ரோனின் விலை சுமார் ₹17 - ₹42 லட்சம் மட்டுமே. ஆனால், இதைச் சுட்டு வீழ்த்தப் பயன்படுத்தப்படும் ஏவுகணைகளின் விலை பல கோடியை தொடும். அதாவது, ₹50 லட்சம் மதிப்பிலான ட்ரோனை அழிக்க ₹20 கோடி செலவு செய்வது எதிரி நாட்டுக்கு மிகப்பெரிய பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும்.
ஒரே நேரத்தில் 5 முதல் 10 ட்ரோன்களை ஒரு லாரியில் இருந்து ஏவ முடியும். நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஒரே நேரத்தில் ஏவும் போது, எதிரி நாட்டின் ராடார்களாலும் வான் பாதுகாப்பு அமைப்புகளாலும் அனைத்தையும் தடுத்து நிறுத்த முடியாது. சில ட்ரோன்கள் சுடப்பட்டாலும், மீதமுள்ளவை இலக்கைத் துல்லியமாகத் தாக்கிவிடும்.
இந்த வகை ட்ரோன்கள் அளவில் சிறியவை. எளிதில் ரேடாரில் சிக்காது. காரணம் இது கார்பன் இழைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இவை தரையிலிருந்து மிகவும் தாழ்வாக பறப்பதால், திடீரென மலைக்கு பின்னால் இருந்தும், கட்டிடங்களுக்கு பின்னால் இருந்தும் தாக்கக்கூடும். இவை சாதாரண ட்ரோன்கள் போலத் தாக்கிவிட்டுத் திரும்பி வராது. இவை பறக்கும் ஏவுகணை போன்றது. இலக்கைக் கண்டறிந்ததும் அதன் மேல் மோதி வெடித்துச் சிதறிவிடும். 30 முதல் 50 கிலோ வரை வெடிபொருட்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டவை.
மணிக்கு 185 கி.மீ வேகத்தில் 2,500 கி.மீ வரை இந்த ட்ரோன்கள் பயணிக்கும். தற்போது இந்த ட்ரோன்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் பொருத்தப்பட்டிருக்கிறது. ட்ரோன் தயாரிப்பில் ஈரானுக்கு ரஷ்யா உதவி செய்து வருகிறது. இந்த உதவி மூலம் தினமும் 400 ட்ரோன்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும், மொத்தமாக ஈரானிடம் 80,000 ட்ரோன்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஆதாரம் இன்னும் வெளியாகவில்லை.
இருந்தாலும், அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பல் என்பது, சுமார் 1 லட்சம் டன் எடை கொண்டது. இது சாதாரணமான கப்பல் அல்ல 12 அடியாள்களோடு வரும் ஒரு இரும்பு கோட்டை 
இதை தாக்கிய அழிக்க ஷஹேத் ட்ரோன்களால் முடியாது. ஆனால், நிச்சயம் கடுமையான சேதங்களை ஏற்படுத்த முடியும். இந்த கப்பலில் ட்ரோன் எதிர்ப்பு ஆயுதங்கள் இருக்கின்றன. இவை ஒரே நேரத்தில் சில 100 ட்ரோன்களை மட்டுமே குறி பார்க்கும். எனவே, ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் ஏவப்படும் போது கப்பல் கடுமையான பாதிப்பை எதிர்க்கொள்ளும் ஈரானிய ராணுவம் கணக்கு போடுகிறது.
 மேலும் ஈரான் தினந்தோறும் 400 ட்ரோன்களை உருவாக்கிருகிறது என்பது, அமெரிக்காவுக்கு நிச்சயமாக சிக்கல்தான். எனவே தற்போது அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள்.. குறிப்பாக ஈரானை நோக்கி போர்க்கப்பல்களை அனுப்புவது என்பது, சிலந்தி வலையில் சிக்குவதை போன்றது என்று அமெரிக்க ஊடகங்களே தெரிவிக்கின்றன.
இருந்தாலும் அமெரிக்காவை எதிர்த்து ஈரான் ராணுவம் போராடுவது, ஈரானுக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கும். பார்ப்போம் யார் ஜெயிக்கிறார்கள் என்று
Reshared...

கருத்துகள் இல்லை: