சனி, 7 பிப்ரவரி, 2026

பெரியார் இயக்கப் பெண்களை வலுப்படுத்தும் கட்டமைப்பு உள்ள ஒன்னும் இல்ல..இனி செஞ்சாத்தான் உண்டு

 Loganayaki Lona  :  இதே போல முன்னாடி ஒரு கதை.
அதர்மம் மனோஜ் இப்ப யூட்யூபரா இருக்குறார்..
அப்ப அவர் தான் தபெதிக கோவை மாவட்ட நிர்வாகி.
இயக்கத்தில சேர்க்குறேன்னு வாட்சப் க்ரூப்ல சேர்த்துட்டு அதுல தான் மீட்டிங்..டிஸ்கசன் எல்லாம்
ஆனைமுத்து அய்யாவுக்கு இரங்கல் தீர்மானம் கேட்க சொல்லி அந்த குழுவில் கோரிக்கை கேட்டேன்
அதப் பகிர்ந்ததும்..வேகமா அனுப்பி தபெதிகவின் வேண்டுகோளுக்கிணங்கன்னு நியூஸ்லலாம் இரங்கல் தெரிவித்த சட்டமன்ற தீர்மானம்   வந்தது.
ஒகே இயக்கமா கேட்டா செயல்பாடு நடக்கும்னு நம்பிட்டேன்.
எனக்கு ஆனைமுத்து அய்யாவை அவர் இறந்த பின்னாடி தான் அப்டி ஒருத்தர் இருந்ததே  தெரியும். பெரியாரிய மார்க்சியஅப்டின்னு  ஒருத்தரான்னு அப்புறம் தான் அவர் புத்தகம் படிச்சேன்.
சரி ஒகே.. கொள்கை உறவு , உணர்வு இருந்ததால்   தான் நாங்க அந்த கோரிக்கைய  கேட்டோம்
 இங்க ப்ரபாகரன் பாலிடிக்ஸ் இணையத்துல வைரலா போய்ட்டு இருந்த டைம் அது..


அந்த வாட்சப் க்ருப்ல  ப்ரபாகரன் பிம்பம்   கட்டமைக்கப்படுது.நான் விபுக்கு எதிர் நிலை அல்ல.ஆயுதப்போராட்டத்தை எதிர்த்தெல்லாம் எங்கயும் எழுதியதும் இல்லை.விமர்சனத்தை ஆய்வு செய்ற அளவு அப்ப டைம் இருக்கும்.
அப்ப வந்த விபு விமர்சனங்களுக்கு பதில் கேட்டேன்.உடனே அவர்க்கு அப்ப விபு பத்தி கேள்வின்னாலே  போபியா தான்!..விபு எதிரின்னு நினச்சிகிட்டாரு.
அதைத்தொடர்ந்து எதோ விவாதம் வந்தப்ப அம்பேத்கர் டீ சர்ட் பத்தி மதிமாறன் தோழர் பொய்சொல்றார்ன்னாங்க.
எங்கிட்ட  மதிமாறன் தோழரோட எல்லா பதிவும் அப்ப போன்ல இருந்தது.அவர் புத்தகம் 4 குடியரசு பதிப்பகம் வெளியிட்டது..வைணவப்பகுத்தறிவெல்லாம் நான் எழுதியதே எங்கிட்ட தான் இருக்கு..
அது நான் தான் ஒவ்வொரு கட்டுரையும் வாசிச்சு  தொகுத்தேன்.
அந்த வாசிப்பு அனுபவத்தில் அவர் பதிவை எடுத்து போட்டு code drawing அம்பேத்கர்  டீசர்ட் வெளியிட்டது அவரும் நண்பர்களும் தான்.அவர் சொன்னது உண்மை தான்னு சொன்னேன்..
அதுக்கு தபெதிக தலைவரே கூட சாட்சிதான்னு அவரோட இருக்கும் புகைப்படத்தோட இருந்த அந்த கட்டுரையை போட்டதுக்கு அந்த இயக்கத்தில இருந்து நீக்கம் ..அவங்க தலைவர்க்கு சேர்த்ததும் தெரியாது.நீக்குனதும் தெரியாது.
நான் தான் முதல்ல என் குடும்பத்தில இருந்து இயக்கத்திற்கே   வந்தேன். குடும்பத்துல  எனக்கு  கடும்  எதிர்ப்பு..
நான் பெரியார் இயக்கத்தில் சேர்ந்து தான்  பயணிப்பேன்னு வீட்ல எல்லார்ட்டயும் சண்டைபோட்டு   பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாள்  அன்னைக்கு காலைல மகனோட போய் உறுதி மொழி எடுத்திட்டு இயக்கத்தில சேர்ந்துட்டு வந்தேன்.
வாட்சப் க்ரூப்ல நீக்கிட்டு நீக்கம்னாங்க.
இதுவரைக்கும் அவங்க  க்ரூப்பே பொய் சொன்னதுக்கும் ,வாட்சப் ஆள் சேர்ப்பு நீக்கத்துக்கு  வருத்தமும் தெரிவிச்சதில்லை..ஆனால் அவங்க  தோழர்கள்.சீமான் ஒழிப்பு தோழர்கள். வேற என்ன செஞ்சாங்க.ஒரு கழிசடைய 
உருவாக்குனாங்க.திரும்ப அழிச்சாங்க..வேறென்ன? 
அதனால் தான் தோழர் என்றழைப்பதையே  இப்ப  முடிந்த அளவு  தவிர்த்திட்றது.
அதுக்கு பிறகும் இப்டித்தான் சேர்க்கையும் நீக்கமும் அங்கயும் இருக்குது.இவங்க பொய்க்கு  ஜால்ரா அடிக்கலன்னா நீக்கம்னுருவாங்க.
இயக்கப் பெண்களை வலுப்படுத்தும்  கட்டமைப்பு உள்ள ஒன்னும் இல்ல..இனி செஞ்சாத்தான் உண்டு.அதனால இவங்க இஷ்டத்துக்கு சேர்ப்பு நீக்கம்னு. செய்றது தொடருது.

கருத்துகள் இல்லை: