Giri Sundar : 30 லட்சம் பக்கங்களை கொண்ட "எப்ஸ்டின் பைல்ஸ்" எனப்படும் ஆவணங்கள் நேற்று ஜனவரி 30 ஆம் திகதி வெளியாகி அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நம்ம வடையான் வீடியோ கூட இருக்குதாம்!
இத பிரஸ் மீட் வச்சி சொன்னதுக்கு தான் சூனா சானா சுப்பிரமணிய சாமி காணாமப் போயிட்டாரு!
இந்த எப்ஸ்டின் பைல்ஸ் என்ற கோப்புகளில், பல பிரபலங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால், தற்போது இந்த விடயம் அமெரிக்காவில் புகைய ஆரம்பித்துள்ளது.
எப்ஸ்டின் பைல்ஸ் என்றால் என்ன?
அமெரிக்காவின் பெரும் பணக்காரராக, இருந்த பாலியல் குற்றவாளியாக அறியப்பட்டு, உயிரிழந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற நபர் பற்றிய, நீதிமன்ற ஆவணங்கள் தான்
எப்ஸ்டின் பைல்ஸ்.
இது, பாலியல் வன்புணர்வுக்காக சிறுமிகளை கடத்திய கும்பலுடன் தொடர்புடைய ஆவணங்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுடனான நேர்காணல்களின் எழுத்துப் பிரதிகள் மற்றும் எப்ஸ்டீனின் பல்வேறு சொத்துக்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் ஆகியவற்றின் விபரங்களை உள்ளடக்கியதாகும்
சுமார் 3 மில்லியனுக்கும் (30 லட்சம்)அதிகமான பக்கங்களை கொண்ட இந்த ஆவணங்கள், நேற்று வெளியிடப்பட்டு அமெரிக்காவை அதிர வைத்திருக்கிறது.
வெளியிடப்பட்ட 30 லட்சம் பக்கங்கள் கொண்ட கோப்புகளில், சுமார் 2,000 வீடியோக்கள் மற்றும் 180,000 போட்டோக்கள் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆவணங்களை, வன்வட்டுகள் (Hard Drive) மற்றும் பிற சேமிப்பகங்களில் 300 ஜிகாபைட்டிற்கும் (Giga Bytes) அதிகமான அளவில், அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு (FBI) சேமித்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க நீதித்துறை ஜெஃப்ரி எப்ஸ்டீனின் விசாரணை ஆவணங்களை நேற்று வெளியிட்டுள்ளது. இதுபற்றி துணை அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச் தெரிவிக்கையில், ‛*3 மில்லியனுக்கும் (30 லட்சம்)அதிகமான பக்க ஆவணங்கள், சுமார் 2,000 வீடியோக்கள் மற்றும் 180,000 படங்களை வெளியிடப்பட்டுள்ளது, இந்த ஆவணங்கள் கடந்த டிசம்பர் மாதம் வெளியிடுவதாக கூறப்பட்டது, அதன்பிறகு நிறுத்தி வைக்கப்பட்டது, இப்போது நீதித்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இந்த கோப்புகள் அமெரிக்க நீதித்துறையின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர் யார்?
இவர் ஒரு அமெரிக்க கோடீஸ்வரர். இவர் வங்கி மற்றும் நிதி தொடர்பான பணியில் இருந்ததாகவும், அதனால் இவருக்கு அமெரிக்காவின் அனைத்து துறை சார்ந்த பிரபலங்களுடனும் மிக நெருக்கமான நட்பு இருந்ததாக சொல்லப்படுகின்றது.
ஏராளமான, சிறுமிகளையும் இளம்பெண்களையும், ஏமாற்றி, கடத்தி, சீரழித்து, அவர்களை பல பிரபலங்களுக்கு விருந்தாக்கிய மிக மோசமான பாலியல் குற்றவாளியாக இவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டு முதல் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. "லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்" எனும் தீவில், சிறுமிகளை ஏமாற்றி கடத்தி சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அவ்வாறான நிலையில், 2008 ஆம் ஆண்டு 14 வயது சிறுமி ஒருவரின் பெற்றோர், புளோரிடா பொலிஸாரிடம் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தனது பாம் பீச் (Palm Beach) இல்லத்தில் வைத்து தங்கள் மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தார்கள்.
முறைப்பாட்டின்படி விசாரணையை ஆரம்பித்த புளோரிடா பொலிஸார், ஜெஃப்ரி எப்ஸ்டீனின் Palm Beach வீடு முழுவதும் இருந்து சிறுமிகளின் புகைப்படங்களை மீட்டனர். அதனைத்தொடர்ந்து அவர் ஒரு சிறுமியை பாலியஸ் துஸ்பியோகம் செய்துள்ளார் என குற்றம் நிரூபிக்கப்பட்டு, பாலியல் குற்றவாளியாகப் பதிவு செய்யப்பட்டார்.
எனினும் ஜெஃப்ரி எப்ஸ்டீனை கைது செய்த போது, ஜெஃப்ரி எப்ஸ்டீன், அரசு வழக்கறிஞர்களுடன் குற்ற ஒப்புதல் ஒப்பந்தத்தை செய்து சமாதானமாக சிறைத்தண்டனையிலிருந்து தப்பித்தார்
தண்டனையிலிருந்து அவர் தப்பித்தாலும் கூட, அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துக்கொண்டே சென்றது. பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் 2019 ஆம் ஆண்டு, பாலியல் தொழிலுக்காக குறைந்த வயதுடைய சிறுமிகளைக் கொண்ட ஒரு வலையமைப்பை (Network) நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு ஜெஃப்ரி எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார்.
2019 ஆகஸ்ட் மாதம் நியூயார்க்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட எப்ஸ்டீன், மர்மமான முறையில் சிறையில் உயிரிழந்தார்.
அவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனினும் அமெரிக்காவின் பெரிய தலைகளுடன் நட்பாக இருந்து வந்த எப்ஸ்டீன், வெளியில் வந்தால் பல முக்கிய நபர்களின் பெயர்கள் அடிபடும் என கருதிய பெரும் புள்ளிகள், சிறையில் வைத்தே அவரது கதையை முடித்ததாக சந்தேகங்கள் வெளியிடப்பட்டன.
"எப்ஸ்டின் பைல்ஸ்" அம்பலப்படுத்தியுள்ள விடயங்கள்
🔴 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான பாரதூரமான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்கள் எப்ஸ்டின் பைல்ஸ் இல் இடம்பெற்றுள்ளன.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு நியூ ஜெர்சியில் வைத்து 13-14 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை ட்ரம்ப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக ஒரு குறிப்பு தெரிவிக்கின்றது.
இதன்போது அச்சிறுமி தற்காப்புக்காக ட்ரம்ப்பைக் கடித்ததாகவும், அதற்காக அவர் அச்சிறுமியின் முகத்தில் தாக்கியதாகவும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ட்ரம்ப்பின் மார்-ஏ-லாகோ (Mar-a-Lago) இல்லத்தில் நடைபெற்ற விருந்துகளில் ஈலோன் மஸ்க், டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் மற்றும் இவான்கா ட்ரம்ப் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டதாக எப்ஸ்டின் பைல்ஸ் ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
🔴 முன்னணி தொழிலதிபர் பில்கேட்ஸ், ரஷ்ய பெண்களுடன் உடலுறவு வைத்திருந்ததாக எப்ஸ்டின் பைல்ஸ் இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது பரபரப்பை கிளப்பி உள்ளது.
இதுதொடர்பாக ஜெஃப்ரின் எப்ஸ்டின் தனக்கு தானே கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 18 ம் திகதி ஈ-மெயில் ஒன்றை அனுப்பினார். அந்த ஈ-மெயிலில் தான் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், "Microsoft இன் இணை நிறுவனரான பில்கேட்ஸ் ரஷ்ய பெண்களுடன் உடலுறவு வைத்திருந்தார். அதன்பிறகு பாலியல் ரீதியான நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான மருந்துகளை நாடினார். இந்த ஈ-மெயிலை அழிக்க பில்கேட்ஸ் வலியுறுத்தினார்'' என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பில்கேட்ஸ் - மெலிண்டா ஆகியோர் கடந்த 1994ம் ஆண்டு திருமணம் செய்தனர். அதன்பிறகு இருவரும் விவகாரத்து செய்தனர். அந்த சமயத்தில் பில்கேட்ஸ் அளித்த நேர்காணல் ஒன்றில் ‛எப்ஸ்டீன் உடனான தனது நட்பும் விவகாரத்துக்கு ஒரு காரணம்'' என்று கூறியிருந்தார். எனினும், பில்கேட்ஸ் குறித்த எப்ஸ்டீனின் குற்றச்சாட்டுக்கு பிற ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
🔴முன்னதாக, பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ, ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து ராஜகுடும்பம் பெரும் தலைகுனிவை சந்தித்ததாகவும், ஆண்ட்ரூவும் அவரது மனைவியும் அரண்மனையிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த காலகட்டத்தில், எப்ஸ்டீனுடைய மாளிகையில் விருந்துக்குச் சென்ற ஆண்ட்ரூ, விர்ஜினியா (Virginia Giuffre) என்னும் 17 வயது பெண்ணுடன் உடல் ரீதியான உறவு வைத்துக்கொண்டதாக பின்னாட்களில் அந்தப் பெண் வழக்குத் தொடர்ந்த விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ஆண்ட்ரூ தொடர்பில் மீண்டும் எப்ஸ்டீன் கோப்புகளில் ஏராளமான தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆண்ட்ரூவுக்கு எப்ஸ்டீன் அனுப்பிய மின்னஞ்சல் ஒன்று வெளியாகியுள்ளது.
2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி எப்ஸ்டீன் அனுப்பிய அந்த மின்னஞ்சலில், 26 வயது ரஷ்ய இளம்பெண் ஒருவரை ஆண்ட்ரூவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் எப்ஸ்டீன்.
அவரது மின்னஞ்சலுக்கு பதிலளித்த ஆண்ட்ரூ, தான் ஐரினா என்னும் அந்த ரஷ்ய இளம்பெண்ணை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், 2010ஆம் ஆண்டில், ஆண்ட்ரூவும் எப்ஸ்டீனும் நியூயோர்க்கில் சேர்ந்து நடமாடும் புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன.
2019ஆம் ஆண்டு எப்ஸ்டீனுடனான தொடர்பு குறித்து BBC தொலைக்காட்சிக்கு நேர்காணல் ஒன்றை அளித்த ஆண்ட்ரூ, தான் 2010ஆம் ஆண்டு எப்ஸ்டீனை சந்தித்தது அவருடனான உறவைத் துண்டிக்கத்தான், என கூறியிருந்தார்.
அதாவது, எப்ஸ்டீன் மோசமான குற்றச்செயலில் ஈடுபட்டு அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், இனி இருவரும் சந்திப்பது முறையாக இருக்காது என்பதை தெரிவித்து, அவருடனான உறவைத் துண்டிப்பதற்காகவே தான் எப்ஸ்டீனை சந்தித்ததாக தெரிவித்திருந்தார் ஆண்ட்ரூ.
ஆனால், அதற்குப் பின்னும் இருவரும் தொடர்பிலிருந்ததை நிரூபிக்கும் மின்னஞ்சல்கள் பல தற்போது வெளியாகியுள்ளன.
ஏற்கனவே எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்ததால் ராஜகுடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள ஆண்ட்ரூவின் நிலை இனி என்னவோ தெரியாது.
🔴 ஜெப்ரி எப்ஸ்டீன் விசாரணை ஆவணங்களில், அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா ட்ரம்பின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு மெலானியா ட்ரம்பிற்கும், எப்ஸ்டீனின் உதவியாளரும் காதலியுமான கிஸ்லேன் மாக்ஸ்வெல்லிற்கும் (Ghislaine Maxwell) இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மின்னஞ்சல் உரையாடல்கள் இதில் அம்பலமாகியுள்ளன.
2002 அக்டோபரில் மெலானியா எழுதியதாகக் கூறப்படும் மின்னஞ்சலில், "அன்புள்ள G! எப்படி இருக்கிறீர்கள்? நியூயார்க் இதழில் எப்ஸ்டீன் (JE) பற்றிய கட்டுரை மிகச் சிறப்பாக இருந்தது.
அந்தப் படத்தில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மாக்ஸ்வெல் மீண்டும் நியூயார்க் வரும்போது தன்னை அழைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மெலானியாவின் மின்னஞ்சலுக்கு பதிலளித்த மாக்ஸ்வெல், அவரை "Sweet pea" என அன்புடன் விளித்து, தனது பயணத் திட்டங்கள் மாறியுள்ளதால் தற்போதைக்குச் சந்திக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார் இந்த உரையாடல்கள் இடம்பெற்ற காலத்தில் மெலானியாவுக்கும் டொனால்ட் ட்ரம்ப்பிற்கும் இடையில் திருமணம் நடைபெறவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது.
எப்ஸ்டீன் 2019 இல் சிறையில் தற்கொலை செய்துகொண்டார், அவரது உதவியாளர் கிஸ்லேன் மாக்ஸ்வெல் தற்போது 20 ஆண்டுகால சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்னும் பல முக்கிய புள்ளிகள், எப்ஸ்டின் பைல்ஸ் மூலம் அம்பலப்படுத்தப்படுவார்கள் என பரபரப்பாக பேசப்படுகின்றது.
இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் எப்ஸ்டின் பைல்ஸ் கோப்புகளை வெளியிட அனுமதி வழங்கி டொனால்ட் ட்ரம்ப் தான் கையெழுத்திட்டார்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்ட சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை விட ஆறு வாரங்கள் தாமதமாக இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
31/01/2026
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக