திங்கள், 2 பிப்ரவரி, 2026

அத்துமீறிய டிரம்ப்.. அந்தரங்க உறுப்பில் கடித்த சிறுமி.. அதிர வைக்கும் எப்ஸ்டீன் ரிப்போர்ட்

 tamil.oneindia.com வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும் வகையிலான சில தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.
அதில் சிறுமி ஒருவரிடம் டிரம்ப் அத்துமீறியதாகவும் அப்போது அந்தச் சிறுமி டிரம்பின் அந்தரங்க உறுப்பைக் கடித்துவிட்டதாகவும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்தத் தகவல்கள் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன். அவரது விசாரணை குறித்த எப்ஸ்டீன் பைலிஸில் இருந்து இப்போது சில புதிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் அதிபர் டிரம்ப் குறித்து சில அதிர வைக்கும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இது டிரம்பிற்கும் எப்ஸ்டீனுக்கும் இடையே இருக்கும் தொடர்பை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.



குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் தனக்குப் பெரியளவில் பழக்கம் இல்லை..

அவர் நண்பர் இல்லை என டிரம்ப் சொல்லி வரும் நிலையில், அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட இந்த புதிய ஆவணங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துவதாக உள்ளன.

எஃப்.பி.ஐ டாக்குமெண்ட் ஒன்றில் டிரம்ப் ஒரு மைனர் பெண்ணை உடலுறவு கொள்ளக் கட்டாயப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ ஜெர்சியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தனது தோழியை இதுபோல டிரம்ப் கட்டாயப்படுத்தியதாக அந்தப் பெண் எஃப்.பி.ஐ அமைப்பிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

டிரம்பை கடித்த சிறுமி

சுமார் 13-14 வயதான அந்தச் சிறுமியிடம் தான் டிரம்ப் அத்துமீறி இருக்கிறார். தொடர்ந்து கட்டாயப்படுத்தியதால் டிரம்பின் அந்தரங்க உறுப்பைத் தனது தோழி கடித்துவிட்டதாகவும் அந்தப் பெண் வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்.

அதில் மேலும், “டிரம்பை கடித்த பிறகு அந்தச் சிறுமி சிரித்துள்ளார். இதனால் அந்தச் சிறுமியைச் சிலர் தாக்கியுள்ளனர். அந்த சிறுமி எப்ஸ்டீனாலும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புதிய ஆவணங்களில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. டிரம்ப் புளோரிடாவில் உள்ள தனது மார்-எ-லாகோ எஸ்டேட்டில் விருந்துகளை நடத்தியதாகவும், அதில் அவரது மனைவி இவாங்கா டிரம்ப் மற்றும் உலகின் மிகப் பெரிய பணக்காரர் எலான் மஸ்க் உள்ளிட்ட உயர்மட்ட நபர்கள் கலந்து கொண்டதாகவும் சுட்டிக்காட்டின.

 மாயம்

டொனால்ட் டிரம்ப் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை வெளியிடப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு மர்மமான முறையில் மாயமாகின..

அமெரிக்க அரசு தான் அதை நீக்கியதாகச் சொல்லப்பட்ட நிலையில், பல்வேறு தரப்பினரும் இதை அதற்கு மிகக் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.

இதையடுத்து சில மணி நேரத்தில் மீண்டும் அந்த ஆவணங்கள் ஆன்லைனில் வந்துவிட்டன. யாரும் அதை நீக்கவில்லை என்றும் ஒரே நேரத்தில் பலர் அந்தப் பக்கத்திற்கு வந்ததால் ஓவர்லோட் ஆகியதாக அமெரிக்க நீதித்துறை விளக்கமளித்தது.

முக்கியம்

இதில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது இது எப்ஸ்டீன் விவகாரம் குறித்து புகார் அளித்தோர் அளித்த வாக்குமூலம் மட்டுமே.

இது உண்மையா இல்லை பொய்யா என்பது குறித்து யாருக்கும் தெரியாது. எனவே, டிரம்ப் மீது இதுபோன்ற புகார்கள் முன்வைக்கப்பட்டாலும் அது உண்மை என உறுதியாகச் சொல்லிவிட முடியாது.

அமெரிக்க நீதித்துறையும் கிட்டத்தட்ட இதுபோன்ற ஒரு விளக்கத்தையே கொடுத்துள்ளது. இந்த பைலிஸில் சில இடங்களில் டிரம்ப்பிற்கு எதிரான தவறான தகவல்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நீதித்துறை மேலும், “இந்தக் கூற்றுக்கள் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை.. இதில் உண்மை இருந்திருந்தால் அப்போதே விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கும்” என்றார்.

கருத்துகள் இல்லை: