திங்கள், 14 நவம்பர், 2022

விடுதலையான நளினி அடுத்த நாளே இப்படி பத்திரிகையாளர் சந்திப்பை....

 Bilal Aliyar  :  விடுதலையான நளினி அடுத்த நாளே இப்படி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திக்கொண்டிருப்பது தமிழ்நாட்டிற்கு,  திமுகவிற்கு நன்மையாக இருக்காது!
விடுதலையான ஏழு பேரையும் போராளிகளாக கட்டமைக்கும் மோசமான போக்கை போலி தமிழ் தேசியர்கள், முற்போக்காளர்கள் கைவிட வேண்டும்.
அரசும் இந்த விசயத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும்1
Sammil Kafoor : இவங்க எல்லாம் தப்பே செய்யலைன்னு சொல்ல முடியாது..ஏதோ விடுதலை ஆகிட்டாங்க..மனிதாபிமான முறையில் சந்தோசம். பெரிய தியாகியா எல்லாம் நினச்சி பேட்டி எடுக்க கூடாது.. ராஜிவ் காந்தியின் இழப்பு லேசாக கடந்து போகும் இழப்பு அல்ல..
Madhav Anandhan  :   if ராஜிவ் காந்தி was not assasinated, Modi coul never think about PM roll
Sheikh Mukhtar :  ஆமாம்

Ilangovan Geetha :  சரியான முக்கியமான பதிவு.

Nithyanandam Vms  :  அவர்களுக்கு தான் தீமையா  முடியும் நாம எப்படியும் வெளிய வந்துடலாம் .

Sathianarayanan Ramasamy :  இதை பேரறிவாளனை‌க் கட்டிப் பிடிக்கும்‌ முன்பே யோசிச்சிருக்கணும்.

பாலு அருணாச்சலம் :  போலி திராவிடர்கள் அவர்களை வைத்து அரசியல் பிழைத்து விட்டு இப்ப சம்பந்தமில்லாத மாதிரி பேசுவதை வெள்ளை குடை பிடித்து மறைப்பதை நிறுத்த வேண்டும்.

Abdul Fsmb Kader :  உடனடியாக இலங்கைக்கு கடத்தவேண்டும்
No more excuse

Sheikh Mukhtar :  உண்மை வார்த்தைகள்

 Sheikh Mukhtar : இவர்கள் வெளியே வந்ததும் தியாகிகள் போன்று சித்தரிப்பது மிகவும் ஆபத்தானது

  thangamaniprabu Tmp :  என்ன தவறு?
இவர்கள்மீது சந்தேகத்துக்கிடமின்றி குற்றம் நிருபிக்கப் படவில்லை!
சந்திரசாமியும் சுப்ரமணியசாமியும் முறையாக விசாரிக்கப்படவில்லை!
ஒரு தேசியக் கட்சியின் தலைவர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டபோது ஒரே ஒரு மாநிலத்தலைவர் கூட அருகில் இல்லை!
நிருபிக்கப்படாத குற்றத்திற்கு பல ஆண்டு சிறைவாசத்திலிருந்தது தியாகம் இல்லையா?
இந்தக் கொண்டாட்டங்களே, இவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று நீங்கள் பதிவாகும்!
(உதாரணம்: 15 வருடம் சிறையிலிருந்தார் என்பதற்காக, மதானி அவர்கள் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியா?)

Pannirselvan Kulandaivelu K :  இலங்கை பிரச்சினை காரணமாக, தமிழ்நாட்டில் அதிக பாதிப்படைந்த கட்சி திமுக. அதனை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும்.

Jayachandran :  பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்க கூடாது, அரசியல்வாதிகளை சந்திக்க கூடாது ன்னு நிபர்ந்தையை விதித்து இருக்கனும் கோர்ட்

Ebrahim Ansari Masthan Samad  :  இவர்களை கொலையாளிகள் அல்ல என்று விடுதலை செய்யவில்லை. தண்டனை போதும் என்று மனிதாபிமானமாகவே விடுதலை செய்திருக்கிறார்கள். பெரிய சாதனையாளர் தோரணையில் நளினி பேட்டி காெடுப்பது சகிக்கவில்லை.

Radha Manohar  :  இதுதான் நடக்கும் என்று நான் எதிர்பார்த்தேன் .. இவர்கள் அசல் பாசிச சங்கிகள்.
ஒரு போதும் ஜனநாயக வழிக்கு வரவே மாட்டார்கள் திருந்தவே மாட்டார்கள் .
திராவிட கோட்பாட்டை அடியோடு வெறுப்பவர்கள்
மதவாதிகள் . வெறுப்பு அரசியல் வியாதிகள்.
வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்து விட கூடாது என்ற நோக்கத்தில் பயணிப்போர்களுடன் சேர்ந்து பயணிப்பார்கள்
இவர்கள் மீது இன்னும் பல மோசமான குற்றங்கள் உள்ளன
தோழர் பத்மநாபா உட்பட 14 ஈ பி ஆர் எல் எப் தோழர்களும் சென்னை நகரில் பட்டப்பகலில் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் இவர்கள் அத்தனை பேர்வழிகளுக்கு பெரும் பங்கு இருக்கிறது
அந்த வழக்கை அரசு முடுக்கி விடவேண்டும்.
மறைந்த அந்த தோழர்களின் இறப்புக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.
குறைந்த பட்சம் இவர்கள் குற்ற சந்தேக நபர்கள் என்ற அளவிலாவது கண்காணிப்பு வளையத்திற்குள் வரவேண்டியவர்கள்

கருத்துகள் இல்லை: