வியாழன், 17 நவம்பர், 2022

ஷ்ரத்தா கொலை ..ஒரு சுதந்திர போராட்டக்காரியின் வாழ்வு கோரமாய் முடிந்திருக்க வேண்டாம்.

May be an image of 3 people, beard, sunglasses and outdoors

Hariharasuthan Thangavelu  ::இரு காரணுங்களுக்காக ஷ்ரதா கொலை தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. ஒன்று 35 துண்டுகளாக வெட்டப்பட்டு ப்ரிட்ஜில் வைத்த கொடூரம்.
இரண்டாவது கொலையாளி ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர். போதாதா !  
ஷ்ரதாவிற்காக வருந்துவர்களை விட அவனுடன் சென்றாயே, இது வேண்டும் என்று இரக்கமே இல்லாமல் கத்தி வீசுகிறார்கள். முதலில் வழக்கின் விபரங்களை பார்ப்போம்.
26 வயது ஷ்ரத்தா மும்பையை சார்ந்தவர். கல்லூரிப் படிப்பை இறுதியாண்டில் கைவிட்டு விட்டு ஐடி நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியாக பணிபுரிகிறார்.
அம்மாவின் மறைவிற்குப் பிறகு, அப்பாவுடன் இருக்கப் பிடிக்கவில்லை.


வீட்டிலிருந்து வெளியேறுகிறார். சில ஆண்டுகளில் நிறுவனத்தில் குழு தலைவராகவும் நியமிக்கப்படுகிறார். நண்பர்களுடன் வாழ்க்கை மகிழ்ச்சி
28 வயது அப்தாப் ஷ்ரதாவின் பகுதியை சார்ந்தவர். அப்பா ஷூ கடை வைத்துள்ளார்.
கல்லூரிப்படிப்பை முடித்ததும் செஃப் ஆக வேண்டும் என சமையலில் ஆர்வம் காட்டியவன்.
காய்கறிகளை வேகமாக துண்டு துண்டாக நறுக்குவது எப்படி, என வீடியோ போடுவதும் என் ப்ரொபைல் பிக்சரைப் பார்த்தால் நான் டெவில் என்பதைக் கண்டுபிடிக்க முடியுமா என் உதார் பதிவுகள் இடுபவன்.

மகா கிரிஞ்சாக இருந்தாலும் மேற்கூறியவை வழக்கின் முக்கிய ஆதாரங்களாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. ஆகவே தான் எழுதியிருக்கிறேன்.
ஷ்ரதா வும், அப்தாப்பும் 2019ல் பம்பில் டேட்டிங் ஆப் மூலம் சந்தித்துக் கொள்கிறார்கள். பைக் பயணங்கள், ட்ரெக்கிங் சாகசங்கள் என ஒருமித்த ஆர்வம் இருவருக்கும் பிடித்துப் போகிறது. அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டில் இணைந்து வாழத் துவங்குகிறார்கள். வாழாத வாழ்வை வாழ வா என காடு, மலை என பயணித்து வாழ்கிறார்கள் அனைத்தும் நலம்.

2021 - உறவில் சிறு சிறு சண்டைகள், சந்தேகங்கள் பிறக்கிறது. அப்தாப் தன்னை அடித்து மிரட்டுவதாக அப்பாவிற்கும், தனது நண்பனிற்கும் செய்தி அனுப்பியிருக்கிறார். இரு மயிராண்டிகளும் கண்டு கொள்ளவில்லை.  

2022 - மே மாதம் -  நமக்குள் இருக்கும் பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டு புதிய நகரத்தில், புதிய வாழ்வை துவங்கிடுவோம் என மும்பையில் இருந்து டெல்லிக்கு குடி பெயர்கிறார்கள். வந்த மூன்றாவது நாளே பிரச்சினை வெடிக்கிறது. அதன் உச்ச கட்டத்தில், ஷ்ரதாவை கழுத்தை நெறித்துக் கொல்கிறார் அப்தாப். கோபம் தணிந்து அறிவு திரும்பியதும் பயம் பதறடிக்கிறது. காவல்துறையில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என இணையத்தில் தேடியுள்ளார். அப்பொழுது தான் டெக்ஸ்ட்டர் சீரிஸ் நியாபகத்தில் வருகிறது. வெளியே சென்று லோக்கல் மார்க்கெட்டில் எல்.ஜி 300 லிட்டர் பிரிட்ஜ் ஒன்றை வாங்குகிறார். ஷ்ரதாவின் உடலை வெட்டத் துவங்கிறார். 35 துண்டுகளாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்து விட்டு அறையெங்கும் வாசனை திரவியங்களைத் தெளித்துள்ளார்.

அடுத்த 16 நாட்கள் நள்ளிரவு இரவு இரண்டு மணிக்கு கிளம்பி, நகரத்தின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு துண்டுகளாய் வீசியிருக்கிறார். வீசுவதற்கு முன், துண்டுகளை மீண்டும் சிறியதாக வெட்டி கால்வாய், வனம், சிலதை நாய்களுக்கும் போட்டிருக்கிறார்.  துண்டுகளை மூடியிருந்த பாலிதீன் பைகளை அதே இடங்களில் விட்டு விடாமல், கவனமாய் வைத்திருந்து வேறு இடத்தில் வீசியிருக்கிறார்.
பயந்தாலும், குடித்து விட்டு உடலை துண்டுகளாய் வெட்டியது, வாசனை திரவியங்களால் அறையை நிரப்பியது, நகர மூலைகளில் துண்டுகளை ஷ்ரதா வின் க்ரெடிட் கார்டு பில்களை முறையாக பணம் செலுத்தியது. கொலைக்கு பின்னும், ஷ்ரதா நண்பர்களுக்கு அவளது வாட்சப் அக்கவுண்டில் இருந்து மெசேஜ் அனுப்பியது, கால் சென்டர் ஒன்றில் கேசுவலாய் வேலை பார்த்தது என சிக்கிக் கொள்ளாமல் இருக்க அனைத்தையும் திட்டமிட்டு நிகழ்த்தியுள்ளார். எந்த வித சந்தேகமுமில்லாமல் ஆறு மாதங்கள் கடந்திருந்தது. கிட்டத்தட்ட தப்பித்தாயிற்று என அப்தாப் நினைத்த வேளையில், விதி தனது வேலையைத் துவங்கியுள்ளது. ஷ்ரதா எந்த நண்பனுக்கு கடந்த வருடம் மெசேஜ் செய்திருந்தாரோ, ஷ்ரதாவின் மொபைல் தொடர்ந்து ஸ்விட்ச் ஆப்பில் இருப்பதாக அவர் ஷ்ரத்தாவின் அப்பாவிற்கு தெரிவிக்க, அவர் சில நாட்கள் கழித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் அப்தாப் சமாளித்து விட, ஷ்ரதாவின் வங்கி கணக்கு, சமுக வலைதள கணக்குகள் மே மாதத்திற்கு பிறகு பயன்படுத்தப்படாமல் இருக்க, அதே மாதம் தான் இருவரும் டெல்லி வந்திருக்கிறார்கள் என்பது தெரிந்ததும், வேறு விதமாக விசாரிக்கப்பட குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறான் அப்தாப். கொலை மறைக்கப்பட்ட விதம் காவல்துறையையே அதிர வைத்துள்ளது. இப்போது வரை உடலின் 14 துண்டுகள் மட்டுமே கைப்பற்றியிருக்கிறார்கள்.
இக்கொலையில் நடுங்க வைக்கும் விபரங்கள் இவ்வளவு இருக்க, ஷ்ரதாவின் தந்தை தந்த புகாரில் தாங்கள் இ.ந்.து பிரிவு, எனக்கு இன்னொரு பிரிவை சார்ந்த பையனுடன் எனது பெண்ணை வாழ அனுப்ப துளியும் மனமில்லை என்று இருந்ததை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு சமூகம் முழுவதையும் கொலையாளி ஆக்கப் பார்க்கிறது ஒரு படை. ஆனால் அதே FIR ல் எனக்கு 25 வயது, இனியும் நான் உங்கள் மகள் இல்லை, என் வாழ்வை நானே தீர்மானிப்பேன் என அதே நாள் ஷ்ரதா வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார், அதை மறைத்து விட்டார்கள். ஷ்ரதாவின் இன்ஸ்டா Thats short rebel என அவரை விளிக்கிறது. காடு, மலை, பயணங்களால் நிறைத்து விட வேண்டும் என வாழ்ந்திருந்த ஒரு போராட்டக்காரியின் வாழ்வு இவ்வளவு கோரமாய் முடிந்திருக்க வேண்டாம்.

இத்தனை கொடூரம் செய்த அப்தாப்பிற்கு சட்டத்தின் அதிகபட்ச தண்டனை எதுவோ அது நிச்சயம் கிடைக்க வேண்டும். அது அவர் செய்த குற்றத்திற்காக இருக்க வேண்டுமே அன்றி, அவர் சார்ந்த சமூகத்திற்காக இருக்க கூடாது. உணர்வாளர்கள் கவனத்திற்கு, நேற்று கான்பூரில் ஒரு வன்புணர்வுக் கொலை நிகழ்ந்துள்ளது. சக்திவாய்ந்த மூன்று அப்ரோடிசையாக் மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வீட்டில் தனியாக இருந்த பெண்ணை வன்புணர்ந்து கொன்றிருக்கிறான் ஓர் அரக்கன். ரத்தம் அதிக அளவில் வெளியேறியதால் மரணம் நிகழ்ந்திருக்கிறது. இக்குரூரத்தை நிகழ்த்தியவனின் பெயர் என்ன தெரியுமா ? ராம் பரான் கௌதம்.
Hariharasudan Thangavelu பதிவிலிருந்து

கருத்துகள் இல்லை: