சனி, 19 நவம்பர், 2022

ஐன்ஸ்டீன்-ஹாக்கின்ஸ் IQ அளவை முறியடித்த இலங்கைச் சிறுமி அரியானா தம்பரவெஹேவா

  தினக்குரல்   இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பிரித்தானிய பிரஜையான அரியானா தம்பரவெஹேவா என்ற 10 வயது சிறுமி மீது முழு உலகத்தின் கவனமும் குவிந்துள்ளது.
அல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் ஆகியோரின் IQ அளவை தாண்டியதன் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார் அரியானா எனும் சிறுமி. இவர் தனது பெற்றோருடன் ஹடர்ஸ்ஃபீல்டில் வசிக்கிறார்.
ஹடர்ஸ்ஃபீல்டில் உள்ள செயின்ட் பேட்ரிக் கத்தோலிக்கப் பாடசாலையில் படிக்கும் அரியானா, மென்சா ஐக்யூ பரீட்சையில் பங்கேற்று 162 புள்ளிகளைப் பெற்றார். அல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் IQ 160 என மதிப்பிடப்பட்டுள்ளது.


இலங்கையின் மாத்தளையை பூர்வீகமாகக் கொண்ட அரியானாவின் குடும்பத்தினர் 2009 இல் பிரித்தானியாவுக்குக் குடிபெயர்ந்தனர்.
பிரபல விஞ்ஞானி ஆவதே தனது நம்பிக்கை என்று கூறும் அரியானாவின் பொழுதுபோக்கு புத்தகங்கள் படிப்பதாகும்.
மென்சாவின் உயர் புலனாய்வுச் சங்கத்திற்கு அவர் அழைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அதிக நுண்ணறிவு நிலை கொண்ட 2 சதவீதத்தைச் சேர்ந்தவர் என்றும் மென்சா அமைப்பு கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை: