வெள்ளி, 18 நவம்பர், 2022

6 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்.. ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி உட்பட..

vikatan.com -  சி. அர்ச்சுணன்  :  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைதண்டனை அனுபவித்துவந்த எழுவரில், பேரறிவாளனைக் கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. அதைத்தொடர்ந்து நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யுமாறு தமிழக அரசின் தீர்மானத்தை மேற்கோள்காட்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
ஆறு பேர் விடுதலை
அதையடுத்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, நளினி உட்பட மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்யலாம் என்று நவம்பர் 11-ம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. பின்னர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நளினி, முருகன் ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சாந்தன் ஆகியோர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.


உச்ச நீதிமன்றம்
இந்த நிலையில் மத்திய அரசு, ஆறு பேரின் விடுதலைக்கெதிராக சீராய்வு மனு தாக்கல் செய்திருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இந்த மனுவில், தங்கள் தரப்பை கேட்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், மத்திய அரசின் இந்த சீராய்வு மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது.

கருத்துகள் இல்லை: