மாலைமலர் : உத்தரபிரதேச அரசால் ஒலிபெருக்கிகளை அகற்ற முடிகிற போது, மகாராஷ்டிரா அரசை தடுப்பது எது என்று, உத்தவ் தாக்கரேவுக்கு, ராஜ்தாக்கரே கேள்வி எழுப்பி உள்ளார்.
அவுரங்காபாத்: மகாராஷ்டிரா தின கொண்டாட்டத்தையொட்டி அவுரங்காபாத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது:
மசூதிகளில் தொந்தரவாக இருக்கும் ஒலி பெருக்கிகளை அகற்றுவதற்கான மே 3 காலக்கெடுவில் நான் உறுதியாக இருக்கிறேன். இது மதப் பிரச்சினை அல்ல, இது ஒரு தேசிய பிரச்சினை.
எல்லா ஒலிபெருக்கிகளும் சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது.மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்றுவதற்கான மே 3 காலக்கெடுவிற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதற்கு நான் பொறுப்பேற்க மாட்டேன்.
அவர்கள் (முஸ்லிம்கள்) சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றால், நாங்கள் அவர்களுக்கு மகாராஷ்டிராவின் சக்தியைக் காட்டுவோம்.
ஒலிபெருக்கிகளை அகற்றுமாறு காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் கேட்கவில்லை என்றால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்
உத்தரபிரதேச அரசால் ஒலிபெருக்கிகளை அகற்ற முடிகிற போது, உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர அரசு அவ்வாறு செய்வதைத் தடுப்பது எது ?
மே 4 முதல் அனைத்து இந்துக்களும் ஹனுமான் சாலிசா வை ( பாடல்கள்) மசூதி ஒலிப்பெருக்கிகளின் அளவை விட இரட்டிப்பாக ஒலிக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக