சனி, 7 மே, 2022

காபியில் சேர்க்கப்படும் சிக்கரி உடல் நலத்திற்கு கேடு?

Bru Instant Coffee and Roasted Chicory, 7 Ounce

Sundar P  :  சிக்கரி என்றால் என்னவென்றே தெரியாத பலரும் உண்டு.
சிக்கரி நல்லதா.? கெட்டதா.? இதில் நமக்கு ஏதும் தீமை இருக்கிறதா.?
காலையில் எழுந்ததும் பெட் காபி இல்லை என்றால் அன்றைக்கு பலருக்கு வேலையே ஓடாது.  பில்டர் காபி, இன்ஸ்டன்ட் காபி இவ்வாறு பல விதமான காபிகளைக் குடித்து வருகிறோம்.
நாம் பயன்படுத்தும் காபி பொடியில் வெறும் காபி கொட்டை இல்லை...
ஒரு ஸ்பூன் காபி பொடியுடன், கால் ஸ்பூன் அளவுக்கு சிக்கரி என்ற பொருளையும் கலந்து விற்று வருகிறார்கள்.
"சிக்கிரி" என்றால் என்ன..?
"சிக்கரி" என்பது ஒரு தாவரம்..
சிக்கிரி செடியின் வேரை உலர்த்தி, வறுத்து, பொடித்து தயாரிக்கப்படுவது தான் சிக்கரி பொடி.
சிக்கிரி பார்ப்பதற்கு முள்ளங்கி மாதிரி இருக்கும்.
இந்த சிக்கரி செடி பிரான்ஸ் நாட்டில் எல்லா இடத்திலும் காட்டுச் செடி மாதிரி வளர்ந்து இருந்தது. அங்கிருந்து தான் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
அமெரிக்காவில் உள்நாட்டு போர் காரணமாக காபி பொடி கிடைக்காத இக்கட்டான காலத்தில், வேறு வழி இல்லாத மக்கள் காபி பொடிக்கு பதிலாக சிக்கரி பொடியை பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
பின்னர் காபி பவுடர், சிக்கரி பொடியை கலந்து விற்பனை செய்து வருகிறார்கள்.
சிக்கிரியில் உள்ள எண்ணெய்ச் சத்துக்கள் வயிற்றின் இருக்கக்கூடிய பூச்சிகளை அழிக்கும் திறன் வாய்ந்தது. இதனால் கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கப்படும் தினங்களில் கூட இந்த சிக்கரியை பயன்படுத்துகிறார்கள். கால்நடைகளின் வயிற்றில் கிருமிகளை அளிப்பதில் இது சிறப்பாக பணிபுரியும்.
காபி பொடியுடன் இதனைக்  கலக்கும் பொழுது ஒருவித கசப்பு சுவையை ஏற்படுத்தும். இந்த சுவையை பலரும் விரும்புகிறார்கள்.
இங்கிலாந்தில் 1842-இல் காபி பொடியுடன்  சிக்கிரியை கலப்பதற்கு  தடை சட்டம் இருந்தது.
அதன் பிறகு 1984-ல் சிக்கரி பொடியை இப்படி காபி பொடியுடன் கலப்பது   நுகர்வோருக்கும் தெரிய வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த தடையை நீக்கி இருக்கிறார்கள்.
பெரும்பாலும்  ஹோட்டல், கேன்டீன் ஆகியவற்றில் பயன்படுத்தும் காபி பொடியில் 60% காபியும் 40% சிக்கரியும் கலந்து இருப்பார்கள்.
வீடுகளில் பயன்படுத்தும் காபி பொடியில் 70% காபி பொடியும் 30% சிக்கரி பொடியும் கலந்திருக்கும்.
இன்ஸ்டன்ட் காபியில் அதிக அளவில் சிக்கரி கலக்கிறார்கள். இதில் காபி பவுடரை பார்க்கவே முடியாது. கிட்டத்தட்ட 90% சிக்கிரிதான்..
கருவுற்ற பெண்கள் சிக்கரி கலந்த காபி குடிப்பது நல்லதல்ல, அது கருச்சிதைவை ஏற்படுத்தும்.
பாலூட்டும் பெண்கள் சிக்கிரியை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளுக்கும் இது பாதிப்பை உண்டாக்கும்.
குழந்தைகள் சிக்கரி இருந்த கலந்த காஃபியை உட்கொள்ளக்கூடாது, இது நாடித் துடிப்பை குறைக்கும் தன்மை கொண்டது.
சிக்கிரி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பாதிக்கக்கூடியது எனவே  சர்க்கரை நோயாளிகள் இதை எடுத்துக் கொள்ளும் பொழுது ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும்.  
ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள்    சிக்கரி கலந்ததை சாப்பிடக்கூடாது இது அந்த மருந்தின் வீரியத்தை குறைக்கும்
இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் பொழுது ஏன் சிக்கிரியை காப்பியில்  கலக்கிறார்கள்...?
லாபம் ஒன்றுதான் இதற்கு காரணம். வேறு ஒன்றும் இல்லை..

கருத்துகள் இல்லை: