புதன், 4 மே, 2022

சோப்புத்தூளில் மாங்காய்கள் ஊறவைக்கப்பட்டு சலவை செய்யப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி

 நக்கீரன் : சோப்புத்தூளில் மாங்காய்கள் ஊறவைக்கப்பட்டு சலவை செய்யப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் மாம்பழம் சீசன் தொடங்கி விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அதிக மாம்பழ தோட்டங்களும் கடைகளும் சாலையோரத்திலேயே உள்ள நிலையில் மாம்பழங்களை சர்ப் எக்ஸல் பவுடரில் ஊறவைத்து கழுவும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
10 நிமிடம் சோப்புத்தூளில் ஊறவைக்கப்படும் மாம்பழங்கள் எடுக்கப்பட்டு அதன்மேல் உள்ள கருப்பு கறைகள் நீக்கப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  


கோடை காலத்தில் விற்பனைக்கு வரும் மாங்காய்களை ரசாயனம் இல்லாமல் பழுக்க வைக்க முடியாது என கடந்த 2 ஆம் தேதி கோயம்பேடு வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: