இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டுவதற்கு முன்வந்துள்ள தமிழக முதல்வருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின்
தமிழ்நாடு மாநில அரசு
இந்தியா .
திரு மு க ஸ்டாலின் அவர்களே!
தமிழக சட்டப்பேரவையில் தாங்கள் கொண்டுவந்த தனித்தீர்மானத்தின் படி இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கும் மக்களுக்கு,
தமிழ்நாட்டில் இருந்து உணவு , அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று தாங்கள் அறிவித்துள்ளமை தங்களின் நல்லெண்ணத்தை குறித்து நிற்கிறது.
இலங்கை பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டு பிரச்சனையாக பார்க்காது ,
மனிதாபிமான அடிப்படையில் நோக்கும் தங்களிற்கும் தமிழ்நாடு மாநில அரசிற்கும் இலங்கை மக்கள் சார்பாக மிகுந்த நன்றியறிதலை தெரிவித்து கொள்கிறேன்
மகிந்த ராஜபக்சே
இலங்கை ஜனநாயக சோஷலில குடியரசு
பிரதமர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக