தினத்தந்தி : லக்னோ, உத்தரபிரதேசத்தில் மத வழிபாட்டு தளங்களில் பயன்படுத்தும் ஒலிப்பெருக்கிகள் பிறருக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடாது என அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கடந்த 18-ம் தேதி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மதவழிபாட்டு தளங்களில் ஒலிப்பெருக்கியின் ஒலி அளவை குறைக்கும்படியும், அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் (நேற்று) அகற்றும்படியும் மாநில உள்துறை கடந்த 23-ம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவையடுத்து மாநிலம் முழுவதும் மத வழிபாட்டு தளங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் கடந்த 7 நாட்களில் மத வழிபாட்டு தளங்களில் அதிக ஒலி எழுப்பும் வகையில் பொருத்தப்பட்டிருந்த 45 ஆயிரத்து 773 ஒலிப்பெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக