புதன், 4 மே, 2022

தமிழ்நாட்டில் இருந்து 6 மாநிலங்கள் எம்பிக்கள் திமுகவுக்கு 4 ..அதிமுகவுக்கு 2.... தங்கத்தமிழ் செல்வனுக்கு உறுதியாம் ..

Vignesh Selvaraj  -  Oneindia Tamil :   சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த ஆறு எம்.பிக்கள் உட்பட, 20 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக்காலம் வரும் ஜூனில் முடிவுக்கு வருகிறது.
காலியாகும் ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தலை விரைவில் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.  இதையொட்டி, தமிழகத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படப் போவது யார் என்பது குறித்து பெரும் விவாதமே நடைபெற்று வருகிறது.
தி.மு.கவில் இருவர் பெயர் கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதால் மற்ற இரு இடங்களுக்கான போட்டி மும்முரமாக நடந்து வருகிறது.
அ.தி.மு.கவில் யார்?  ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட  36 எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும் என்பதால், தி.மு.க சார்பில் 4 எம்.பிக்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அ.தி.மு.க சார்பில் இரண்டு எம்.பிக்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னொரு உறுப்பினர் யார் என்பதில்தான் இழுபறி நீடிக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, கோகுல இந்திரா, பொன்னையன் ஆகியோருக்கு இடையே எம்.பி ரேஸ் நடைபெறுகிறது.

தங்க தமிழ்செல்வனுக்கு உறுதி! தி.மு.கவைப் பொறுத்தவரை தங்க தமிழ்ச்செல்வன் ராஜ்யசபா எம்.பி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. அ.ம.மு.கவில் இருந்து தி.மு.வுக்கு வந்த தங்க தமிழ்செல்வன் தேனி பகுதியில், அ.தி.மு.க செல்வாக்கை கடந்த தேர்தல்களில் கடுமையாகச் சரித்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து வேட்பாளராக நிறுத்தப்பட்ட தங்க தமிழ்செல்வன் வென்றால் அமைச்சர்.. தோற்றால் ராஜ்யசபா எம்.பி என்றே கூறப்பட்டது. ஆனால், கடந்த முறை காலியான இடங்களில் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இந்நிலையில், இந்த முறை அவருக்கு ராஜ்யசபா சீட் உறுதி என்ற தகவல்கள் கசிந்துள்ளன.

இரண்டாவது வேட்பாளர் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக உள்ள ஏ.கே.எஸ்.விஜயனும் ராஜ்யசபா சீட் ரேஸில் முன்னணியில் இருக்கிறார். தி.மு.க சார்பாக 1999, 2004, 2009 என தொடர்ந்து மூன்று முறை வென்று மக்களவை உறுப்பினராக இருந்தவர். நாகப்பட்டினம் மாவட்ட தி.மு.க செயலாளராகப் பணியாற்றிய இவர் தற்போது தி.மு.க விவசாய அணி செயலாளராக உள்ளார். கடந்தாண்டு ஜூனில் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ஏ.கே.எஸ்.விஜயன் இந்த ஆண்டு மாற்றப்படுவார்.

அதற்கு முன்னதாகவே ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களும் போட்டியில் இவர்களும் போட்டியில் தி.மு.க சார்பில் மூன்றாவது ராஜ்யசபா வேட்பாளராக, பதவி காலியாகும் எம்.பிக்களான ஆர்.எஸ்.பாரதியும், டி.கே.எஸ்.இளங்கோவனும் முயற்சித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சியில் இணைந்த மாற்றுக்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரும் சீட்டுக்கு முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. இளைஞர்களை அதிகளவில் கட்சியில் ஈர்க்கும் வகையிலும், இளைஞரணியினரை உற்சாகப்படுத்தும் வகையிலும் இளைஞர் ஒருவருக்கு சீட் கொடுக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸுக்கு விட்டுக் கொடுக்குமா? நான்காவது சீட்டுக்கு காங்கிரஸ் அடி போட்டு வருகிறது. காங்கிரஸ் சார்பில் பஞ்சாப்பிலிருந்து ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை ராஜ்யசபா எம்.பி ஆக்க தி.மு.கவிடம் பேச்சு நடைபெறுகிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் சீட் பெற முயற்சிக்கிறார். தி.மு.க தலைமை காங்கிரஸுடன் மிக அணுக்கமான உறவைப் பேணி வந்தாலும், ராஜ்யசபா சீட் விஷயத்தில் மிகவும் யோசிப்பதாகக் கூறப்படுகிறது. மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் தோல்விகளைச் சந்தித்து வந்தாலும், இங்கு கூட்டணியில் மதிக்கத்தக்க சீட்களை கொடுத்தது மட்டுமல்லாமல் ஜெயிக்கவும் வைத்திருக்கிறோம்.

மூத்த நிர்வாகிகள் அதிருப்தி காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததே நீங்கள்தான். ஆனால், காங்கிரஸில் சிலர் தி.மு.கவை அவ்வப்போது சீண்டுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஏன் ராஜ்யசபா சீட்டையும் கொடுக்க வேண்டும்? என தி.மு.க தலைவரிடம் மூத்த நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் மு.க.ஸ்டாலின் நிதானமாக பேசி முடிவெடுக்கலாம் எனத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/rajya-sabha-election-who-are-in-the-race-from-tamil-nadu-dmk/articlecontent-pf687404-457107.html

கருத்துகள் இல்லை: