கலைஞர் செய்திகள் - ஜனனி : நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறைவாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தினந்தோறும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, தமிழ் மூதாட்டி ஒளவையாருக்கு மணிமண்டபம், 1500 கோவில்களில் 1000 கோடியில் திருப்பணிகள் என பல முத்தான திட்டங்கள் குறித்து அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.
அந்த வகையில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து அறிவிக்கப்பட்ட அறிவிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
அதன்படி, அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் இருந்து 60 சதவிகிதம் பங்குத் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
மேலும் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க சிறப்புக் கட்டணச்சீட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு அர்ச்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக