புதன், 7 ஜூலை, 2021

பலாத்காரம் செய்து கொலை’ தூக்கில் உயிருக்கு போராடிய சிறுமியை பார்த்தும் மனம் இறங்காத கொடூரன். கேரளா

தினகரன் :திருவனந்தபுரம்: கேரளாவில் பலாத்காரம் செய்தபோது மயங்கிய குழந்தையை தூக்கில் தொங்கவிடும்போது கண்விழித்து உயிருக்கு போராடிய போதும் மனமிறங்காமல் துடிக்க துடிக்க சாகடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிபெரியார் அருகே சுரக்குளம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூன் (22). தோட்ட தொழிலாளி. கடந்த 30ம் தேதி வீட்டில் தனியாக இருந்த அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததோடு, தூக்கில் தொங்க விட்டார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் இந்த தகவல் அம்பலமானது.
அதைத் தொடர்ந்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து அர்ஜூனிடம் போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர். இந்த விசாணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து போலீசார் கூறியது: அர்ஜூனுக்கு ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் உண்டு. ஆகவே செல்போனில் ஏராளமான ஆபாச படங்களை டவுன்லோட் செய்து வைத்து உள்ளார். அவரது பக்கத்துவீட்டில் வசிக்கும் தோட்ட தொழிலாளி வேலைக்கு சென்ற பிறகு அவர்களது வீட்டுக்கு சென்று அவர்களது 6 வயது குழந்தைக்கு மிட்டாய், பலகாரம் வாங்கி கொடுத்து பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

கடந்த 3 வருடங்களாக இதேபோல் செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று பலாத்காரம் செய்தபோது சிறுமி மயங்கி விழுந்து இருக்கிறாள். உடனே சிறுமி இறந்து விட்டதாக கருதிய அர்ஜூன் மற்றவர்களின் கவனத்தை திசை திருப்ப அங்கிருந்த துப்பட்டாவில் சிறுமியை கட்டி தொங்கவிட்டு உள்ளார். தொங்கும்போது சிறுமிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு கண் விழித்து பார்த்துள்ளார். இருப்பினும் சிறுமியை காப்பாற்ற முயற்சி செய்யாமல் அவள் மரணமடையும் வரை அங்கேயே இருந்துள்ளார். பின்னர் சிறுமி இறந்ததை உறுதி செய்த பிறகு கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு ஜன்னல் வழியாக தப்பி சென்று இருக்கிறார்.

அதன் பிறகு ஒன்றும் தெரியாதது போல் சிறுமியின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் தீவிரமாக பங்கேற்று இருக்கிறார். விருந்தினர்களுக்கு சாப்பாடு கொடுப்பது, பந்தல் கட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டதாகவும் விசாரணையின் போது அர்ஜூன் கூறியதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். அர்ஜூனிடம் போலீசார் தொடர்ந்து கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ேநற்று கொலை நடந்த வீட்டுக்கு அர்ஜூனை போலீசார் அழைத்து வந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த பொது மக்கள் அவரை தாக்க முயன்றனர். சுதாரித்துக் கொண்ட போலீசார் பாதுகாப்பாக அவரை அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை: