புதன், 7 ஜூலை, 2021

மேற்கு வங்கத்தில் வருகிறது மேலவை! மம்தா தேர்தலில் நிற்க தேவை இல்லை ..

தினமலர்  : மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. ஆனால் அந்த கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி குறைந்த வாக்குகளில் சுவெந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார்.
முதல்வராக பதவி ஏற்ற மம்தா பானர்ஜி இன்னும் 6 மாதத்திற்குள் மீண்டும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.-வாக வேண்டும். தற்போதைய கொரோனா சூழ்நிலையில் தேர்தலை நடத்தும் நோக்கத்தில் தேர்தல் ஆணையம் இல்லை. இடைத்தேர்தல் நடைபெறாவிடில் முதல்வர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுவிடும். ஏற்கனவே தேர்தலின்போது பா.ஜனதா அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக மம்தா குற்றம்சாட்டினார்.



இந்த நிலையில் மம்தா அரசு மேற்கு வங்காளத்தில் மீண்டும் சட்டமன்ற மேலவை கொண்டும் வரும் வகையில் ஒரு தீர்மானத்தை மம்தா அரசு கொண்டு வந்தது. 265 எம்எல்ஏ-க்கள் சட்டசபையில் இருந்த நிலையில், 196 எம்எல்ஏ-க்கள் சட்டமன்ற மேலவை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிர்க்கட்சிகள் இது சட்டப்பூர்வமான அந்தஸ்து கிடையாது. மம்தா பானர்ஜி தேர்தலை சந்திக்காமல் சட்டமன்ற உறுப்பினராக முடியும் எனக் குற்றம்சாட்டினர்.

இந்தத் தீர்மானத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்க வேண்டும். மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இந்த பரிந்து அனுப்பி வைக்கப்படும். மேற்கு வங்காளத்தில் 1969-ம் ஆண்டு சட்டமன்ற மேலவை நீக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை நடத்தாவிட்டாலும், மம்தா மேலவை மூலம் உறுப்பினர் ஆகலாம்.

கருத்துகள் இல்லை: