ஞாயிறு, 4 ஜூலை, 2021

திமுக கோட்டாவில்தான் பீட்டர் அல்போன்ஸுக்கு பதவி வழங்கப்பட்டது ...TN காங்கிரஸில் கடும் புகைச்சல்... வாரியங்கள் கேட்டு நூற்றுக்கணக்கில் மனு

Mathivanan Maran - tamil.oneindia.com :  சென்னை: தமிழக சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் தங்களுக்கும் வாரியத் தலைவர் பதவி வாங்கி தரக் கோரி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியிடம் நூற்றுக்கணக்கானோர் மனு கொடுத்துள்ளனர்.
பீட்டர் அல்போன்ஸ்க்கு வாரிய தலைவர் பதவியை திமுக கொடுத்திருப்பதை அறிந்து கே.எஸ். அழகிரி தரப்பு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாம்.
தங்களிடம் ஒரு வார்த்தைக் கூட முன்கூட்டி சொல்லாமல் திமுக இப்படி ஒரு முடிவு எடுத்துவிட்டது என்பதுதான் ஆதங்கமாம்.
ஆனால் திமுக தரப்போ, காங்கிரசின் அகில இந்திய தலைமைக்கே நாங்கள் சொல்லவில்லை ; கே.எஸ். அழகிரிக்கு எதற்கு சொல்ல வேண்டும் ? என்கிறது.
மேலும் காங்கிரஸ் கோட்டாவில் பீட்டர் அப்ஃபோன்ஸுக்கு பதவி தரப்படவும் இல்லை என்கிற யதார்த்தம் கூடவா கே.எஸ்.அழகிரிக்கு புரியவில்லை.

பீட்டர் அல்போன்ஸுக்கு பதவி பீட்டர் அல்போன்ஸுக்கு காங்கிரசுக்காக பதவி தரப்பட்டது என அக்கட்சியின் தலைவர்கள் நினைத்துக் கொண்டால் திமுக என்ன செய்யும்? திமுகவின் நலன் விரும்புவர் ; ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் ; ஸ்டாலின் மதிக்கக் கூடிய நல்ல நண்பர் என்கிற கோட்டாவில்தான் பீட்டரை ஸ்டாலின் டிக் அடித்தாரே தவிர, அவர் காங்கிரஸ்காரர் என்பதற்காக அல்ல

திமுக ஆதரவாளர் திமுக ஆதரவாளர் பீட்டர் அல்போன்ஸின் கட்சி வேண்டுமானால் காங்கிரசில் இருக்கலாம்; ஆனால், அவர் திமுக ஆதரவாளர்; அதனால்தான் காங்கிரஸ் தலைமைக்கு முன்கூட்டி சொல்லப்படவில்லை என விரிவான விளக்கம் தருகிறது திமுக தரப்பு. ஆனாலும் கே.எஸ். அழகிரியால் இதனை ஏற்க முடியவில்லையாம்

ஸ்டாலின் முன்னெச்சரிக்கை இது ஒரு புறமிருக்க, வாரிய பதவிகளை ஒவ்வொன்றாக நிரப்ப முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். இதனால் வாரிய பதவிகளைக் கேட்டு காங்கிரஸ்காரர்கள் யாரும் தங்களுக்கு தொந்தரவு தரக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கையாகத்தான் பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட்டார் எனவும் கூறப்படுகிறது.

வாரிய தலைவர் பதவிக்கு குறி இந்த பின்னணிகளை எல்லாம் அறியாத கதர்சட்டை நிர்வாகிகள், வாரிய தலைவர் பதவிகளை வாங்கித் தாருங்கள் என கே.எஸ். அழகிரியிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த பட்டியலின் எண்ணிக்கை 100 - ஐ கடந்து செல்கிறதாம்.


கருத்துகள் இல்லை: