திங்கள், 5 ஜூலை, 2021

இ பாஸ் ரத்து.. மாநிலம் முழுக்க பஸ் இயக்கம்.. தமிழ்நாட்டில் இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் தளர்வுகள்

 Shyamsundar  - tamil.oneindia.com :  சென்னை: தமிழ்நாட்டில் இன்றில் இருந்து கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் அமலுக்கு வருகின்றன.
தமிழ்நாட்டில் இன்று 3867 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 35294 ஆக உள்ளது.
பெரும்பாலான மாவட்டங்களில் லாக்டவுன் தளர்வுகளுக்கு பின்பும் கேஸ்கள் குறைந்து வருகிறது.
தினசரி கேஸ்கள் கடந்த 2 வாரமாக வேகமாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்றில் இருந்து ஜூலை 12ம் தேதி வரை கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வருகின்றன.
பல்வேறு செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



உணவகங்கள், விடுதிகள், தங்கும் விடுதிகள் 50% பேருடன் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை இயக்கப்படும் டீ கடைகள் 50% கூட்டத்தோடு அனுமதிக்கப்படும் கேளிக்கை கூடங்கள், உடற்பயிற்சி மையங்கள் அனுமதிக்கப்படும். தகவல் தொழில்நுட்ப சேவை மையங்கள் 50% மக்களோடு அனுமதிக்கப்படும் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

வழிபாட்டு தளங்கள் இயங்க அனுமதி துணி கடைகள், நகை கடைகள் 50% கூட்டத்துடன் இயங்க அனுமதிக்கப்படும் வணிக வளாகங்கள் காலை 9 முதல் இரவு வரை இயங்கும் பேருந்து மாநிலம் முழுக்க இயங்கும், 50% பேருக்கு அனுமதி, ஏசி பேருந்து இயங்காது இ பாஸ் - பதிவு முறை மொத்தமாக ரத்து செய்யப்படுகிறது பின்வரும் விஷயங்களுக்கு தடை தொடர்கிறது பின்வரும் விஷயங்களுக்கு தடை தொடர்கிறது மாநிலங்களுக்கு இடையே அரசு பேருந்து போக்குவரத்து சர்வதேச விமான போக்குவரத்து திரையரங்குகள் அனைத்து பார்கள் இயங்க தடை தொடரும்

இது போக பின்வரும் செயல்பாடுகளுக்கும் தடைகள் தொடரும் நீச்சல் குளம் பொது மக்கள் கலந்து கொள்ளும் அரசியல், சமுதாய கூட்டங்கள் பொழுதுபோக்கு, கலாச்சார, விளையாட்டு நிகழ்வுகள் பள்ளிகள், கல்லூரிகள் உயிரியல் பூங்காக்கள் திருமண விழாக்களில் 50 பேர், இறுதிச்சடங்கில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்

கருத்துகள் இல்லை: