ஞாயிறு, 9 மே, 2021

தமிழ்நாட்டை ஆர் எஸ் எஸ் பாஜகவுக்கு விற்கும் சீமானின் கூட்டம் ! மொடக்குறிச்சி விற்கப்பட்டது

Will DMK attack AIADMK's fort?- Dinamani

கபிலன் காமராஜ் :  விடுதலை போராளி குழுக்களில் ஒன்றான EPRLFயின் தலைவர் பத்மநாபாபை தமிழ்நாட்டில் படுகொலை செய்த விடுதலை புலிகளுக்கு உதவியதாக அன்றைய திமுக அரசில் அமைச்சராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் தடா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு விசாரணை முடிந்து விடுதலை செய்யப்பட்டார். அந்த காலகட்டம் திமுகவிற்கு மிகவும் நெருக்கடியான காலம்.
ஈழப் போராளி குழுக்கலுக்குள்ளான சகோதர சண்டையில் சிறை சென்ற திமுகவின் சுப்புலட்சுமி ஜெகதீசன் தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் சரஸ்வதியிடம் வெறும் 281ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார்.


சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களின் தோல்விக்கு காரணம் ஈழத்தை வைத்து தமிழ்நாட்டில் வியாபாரம் செய்யும் சீமான் தான். ஏனெனில் அதே மொடக்குறிச்சி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வாங்கிய 12871 ஓட்டுகள் தான் பாஜக வெல்லவும் ஈழத்திற்காக சிறை சென்ற சுப்புலட்சுமி ஜெகதீசன் தோற்கவும் முக்கிய காரணம்.
காமராஜரை முதல்வர் வேட்பாளராக குடியாத்தத்தில் நிறுத்தி பெரியார் பிரச்சாரத்தை துவங்கிய பொழுது அன்றைய காலகட்டத்தில் காங்கிரஸ் மற்றும் பெரியாரோடு அரசியல் முரண்கள் இருந்தாலும் அறிஞர் அண்ணா காமராஜரை எதிர்த்து திமுக சார்பில் வேட்பாளரை நிறுத்தவில்லை. அந்த அடிப்படை அறம் கூட இல்லாத RSS கூட்டத்தின் அடியாள் தான் சீமான்.
தமிழ்த்தேசியம் ஈழம்னு சீமான் பின்னாடி போவோர் தமிழ்நாட்டை பாஜகவிற்கு காவு கொடுக்க RSS கைக்கூலி வேலை தான் செய்கிறீர்கள்.

கருத்துகள் இல்லை: