வியாழன், 13 மே, 2021

செய்தி வர்த்தகத்தில் பெரும் பின்னடைவு .. தமிழ்நாட்டு ஊடகத்துறையின் பரிதாப நிலை

செல்லபுரம் வள்ளியம்மை: செய்தி வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஊடக நிறுவனங்களுக்கு கொஞ்சம் இக்கட்டான காலம்.
உலகம் முழுவதும் இதுதான் நிலைமை என்றாலும் நான் இங்கே குறிப்பிடும் விடயம் தமிழ்நாட்டு ஊடக வியாபாரத்தின் மந்த நிலை பற்றியதாகும்
பேனை பெருமாளாக்கும் ஊடகங்கள் திமுக ஆட்சின் அதிரடிகளால் திணறி போய் உள்ளன. எதிர்ப்பதற்கு ஏதுமில்லை என்ற நிலை ஒரு புறம் இருக்கிறது .
சரி ஏதாவது பொய்யயான பிரசாரங்களை அவிழ்த்து விடுவோம் என்றால் மக்களே மைக்கை பிடுங்கி உதைத்து விடுவார்கள் என்ற பயம் வேறு .
சமூகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்குகளாக நுணுக்கமாக பார்த்து பார்த்து செய்யும் ஆட்சி இயந்திரம் ஊடகங்களின் தவறுகளையும் நுணுக்கமாக பார்க்கும் தவறுகளுக்கு தண்டனையும் கிடைக்கும் என்ற பயம் வேறு.
சமூக பிரச்சனைகளை செய்திகளாக்கிதான் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்ற நிலை இல்லை. அப்படி ஒருவேளை செய்திகளாக்கினாலும் அடுத்த வினாடியே அவை அரசின் உரிய கவனத்தை  பெற்றுவிடுகிறது  எனவே மேற்கொண்டு அதை ஒரு செய்தி மூலதனமாக்கி கடைவிரிக்கவும் முடியாமல் போய்விடுகிறது .. 

நிலைமை ரொம்ப கஷ்டம்.
ஆளே இல்லாத கமலா தாசன் கும்பலில் இருந்து எத்தனை  ஈக்கள்  காக்காக்கள் பறக்கிறது என்பதை எல்லாம் கூட செய்தி என்ற ரேஞ்சுக்கு ஊதி பார்க்கவேண்டி இருக்கிறது அதுவும் ஊத்தி போகிறது.
செபெஸ்டியன் பாதர் செய்தியை கூட ஊதவேண்டி இருக்கிறது
கொரோனா செய்திகள் என்பது செய்திகள் அல்ல  அவை ஒரு அவசர கால அறிவிப்புக்கள் எனவே அவற்றை வைத்தும் கடையை திறக்க முடியாது.
இந்நேரம் எடப்பாடி பன்னீர் ஆட்சி இருந்திருந்தால் அசுர வரும்படி தரும் துறையாக  தொடர்ந்தும்
ஊடக வியாபாரமே அடித்து தூள் கிளப்பி இருக்கும் .
திமுக கூட்டணியின் வெற்றியோடு ஊடக "துரைகளின்" வியாபாரம் படுத்தே விட்டது
இப்படிக்கு ஒரு கொசுறு வலைப்பூ ஊடகத்துரை!     .
 

கருத்துகள் இல்லை: